சனி, 23 டிசம்பர், 2023

TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 37-வது மாபெரும் இரத்த தான முகாம் 22/12/2023



بسم الله الرحمن الرحيم

QATAR TNTJ – நன்றி அறிவிப்பு 👇

💉 TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக கத்தர் தேசிய தினத்தை முன்னிட்டு 37-வது மாபெரும் இரத்த தான முகாம் - 💉

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளுக்கு,

அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 22/12/2023 இன்று TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 37-வது மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது

🌰 இம்முகாமில் 156 சகோதரர & சகோதரிகள் குருதிக் கொடை அளித்தார்கள்

🌰 300க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

🎁 மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் 🎁

🌰 இம்முகாம் சிறப்பாக நடைபெற 👇

🤝 குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதர சகோதரிகளுக்கும்

🤝 கிளை நிர்வாகிகளுக்கும்

🤝 கிளை உறுப்பினர்களுக்கும்

🤝 கொள்கை சொந்தங்கள்

🤝 உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்

🤝 மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஷாக்கல்லாஹு ஹைரா

இம்மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்குக்கும்_ தனக்கு துணையை ஏற்படுத்திக் கொள்ளாத_ அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்

குறிப்பு👇

இரத்த தான முகாமில் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஏதும் குறைகள் இருப்பின் அல்லாஹ்விற்காக மனம் பொறுக்குமாறு மண்டல நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

♦♦♦♦♦♦♦♦♦♦

இப்படிக்கு

கத்தர் TNTJ- நிர்வாகம்

தேதி: 22-12-2023

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛