ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020
QITC நடத்திய 33வது இரத்ததான முகாம் 07-08-2020
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம்” சார்பாக 07.08.2020 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “33வது இரத்ததான முகாம்” சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
கொரோனா நோய்த் தொற்று மற்றும் தனி மனித இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், நடைமுறை சிரமங்கள் இருந்தும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் மருத்துவமனையின் பிரதான கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாமில் “50 நபர்கள்” கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து கலந்து கொண்டனர். உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு “82 நபர்கள் இரத்ததானம்” செய்தனர்.
கொரோனோ நோய்த் தொற்று அச்சுறுத்தல் உள்ள சம காலச்சுழலில் இம்முகாம் மிகப்பெரும் முன்னுதாரணமாகவும், ஏனைய தன்னார்வ கொடையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் அமையப்பெற்றிருந்தது.
கொரோனோ அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் குருதிக் கொடையளித்த சகோதர்களுக்காகவும் களப்பணியாற்றிய அனைத்து சகோதர்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இம்முகாமில் கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சித்துளிகள் 👇
🩸 மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெற்றது.
🩸 வழமையாக மர்கஸில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சி இம்முறை நேரடியாக HMC மருத்துவமனையின் இரத்த தான பிரிவில் வைத்து நடைபெற்றது.
🩸 உணவு & வாகன வசதி ஆகியவை ஏற்படுத்தி கொடுக்க முடியாத சூழலிலும் மண்டலத்தின் அழைப்பை ஏற்று அதிகப்படியான நபர்கள் வருகை தந்தனர்.
🩸 குருதிக் கொடையாளர்களின் பாதுகாப்பு கருதி தனிமனித இடைவெளி, முகக்கவசங்கள், சானிடைசர், கையுறைகள்” போன்ற நோய்ப் பரவல் தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!
என்றும் சமுதாய & மனிதநேயப் பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கத்தர் மண்டலம்
07.08.2020
QATAR | QITC | TNTJ |BLOOD | CAMPAIGN | HMC | EMERGENCY | HUMANITIES | SAVE LIVES