புதன், 12 ஜூன், 2019

கத்தர் மண்டலத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க சந்திப்பு (பெருநாள் சிறப்பு சந்திப்பு) 04/06/2019


கத்தர் மண்டலத்தின் சார்பில் ஒவ்வொரு வருட ரமலான் மாதத்தின் இறுதி வார வெள்ளிக்கிழமையில் நமது தொப்புள்கொடி உறவுகளான பிறமத சகோதர, சகோதரிகளை அழைத்து சிறிய அளவிலான கலந்துரையாடலுடன் கூடிய மாஸ் இஃப்தார் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் நாம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியானது சில சூழ்நிலை காரணமாக நடத்த முடியாமல் கடக்க நேறிட்டது. இருந்தபோதிலும் அன்றைய நாளில் ஆர்வத்துடன் மக்கள் நமது மர்கஸை நோக்கி வந்தனர். நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தாலும் இதுபோல் யாரேனும் மக்கள் வந்துவிடுவார்கள் என்பதை நாம் கணித்து அவர்களுக்கு தேவையான உணவுகளை ஏற்பாடு செய்திருந்தோம்.

மேலும் இஃப்தார் நிகழ்வில் மவ்லவி.அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஆற்றிய உரையில் கவர்ந்திழுக்கப்பட்டு அந்த உரையின் கருத்துக்களையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள், மார்க்கம் பற்றி கருத்து பரிமாற்றம் மூலம் விளக்கப்பட்டு, ஆங்கில திருக்குர்ஆன், மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட இஸ்லாமிய மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பேராவலை ஏற்படுத்திய பெருநாள் சந்திப்பு

அடுத்ததாக தொப்புள்கொடி உறவுகளுடன் நாம் மகிழ்ச்சிகளை அவசியம் பறிமாரிக்கொள்ள வேண்டும் என்கிற தலைமையின் சுற்றறிக்கையும், மண்டலத்தின் வழமையான நடைமுறையும் அவசியம் பேண வேண்டும் என்கிற பேராவலோடு முஸ்லிம்களின் மகிழ்ச்சி தருணமான நோன்பு பெருநாளின் அதிகாலையில் அவர்களுடனான கலந்துரையாடலை மேன்மைபடுத்தும் வகையில் சமூக நல்லிணக்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் ரமலானை முன்னிட்டு நாம் வருடா வருடம் நடத்திவரும் முஸ்லிம் & பிறமதத்தவர்களுக்கான கட்டுரை போட்டியின் பரிசளிப்பு நிகழ்வை குறிப்பாக பிறமத மக்களால் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கான கட்டுரைகளின் பரிசளிப்பை அந்த இனிய சந்திப்பில் நாம் வைத்தது அவர்களுக்கு உற்சாகத்தை பெருக்கோட செய்தது. மேலும் பெருநாள் உரையில் மவ்லவி.அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தீண்டாமை இல்லை என்பதையும், சகோதரத்துவத்தை பேணச் சொல்லும் மார்க்கம் என்பதையும், தீவிரவாதத்திற்கு எதிராக இஸ்லாம் போதிக்கும் ஆழமான செய்திகளை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

இந்த பெருநாள் சந்திப்பு பிறமத மக்களுக்கும், நமது மக்களுக்கும் பேராவலையும், சமய நல்லிணக்கத்தையும் வேரூன்ற செய்தது என்றால் அது மிகையில்லை.

அல்ஹம்துலில்லாஹ்..

அன்புடன்
கத்தர் மண்டலம்