بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
عن أنس بن مالك الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: (مَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنّيِ) رواه البخاري ومسلم
1. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் என்னுடைய வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி
Play
عن عثمان بن عفان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ) رواه البخاري
2. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தானும் குர்ஆனை கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அப்பான் (ரலி), நூல்: புகாரி
Play
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: (مَنْ لَا َيَرْحَمُ لاَ يُرْحَمُ) رواه البخاري ومسلم
3. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிறருக்கு இரக்கம் காட்ட வில்லையோ அவருக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்
Play
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: (مَنْ صَلَّى عَلَيَّ صَلاةً واحِدَةً صَلَّى اللهُ عَلَيْهِ عَشْراً) رواه مسلم
4. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 628
Play
عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: (لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُوْنَ أَحَبُّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ والنَّاسِ أَجْمَعِيْنَ) رواه البخاري ومسلم
5. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தன்னுடைய பெற்றோரை விட, தன்னுடைய பிள்ளைகளை விட, இந்த உலக மக்கள் அனைவரையும் விட என்னை நேசிக்காத வரை இறைநம்பிக்கை கொண்டவராக ஆக முடியாது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்
Play
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: (مَنْ سَلَكَ طَرِيْقاً يَلْتَمِسُ فِيْهِ عِلْمًاً سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيْقاً إلَى الْجَنَّةِ) رواه مسلم
6. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் கல்வியின் வழியைத் தேடிச்செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் வழியை இலேசாக்குகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்
Play
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ مِنْ أُمَّتِي مَنْ لَمْ يُجِلَّ كَبِيرَنَا وَيَرْحَمْ صَغِيرَنَا
7. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும், சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்.
அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் 21693
Play
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ
8. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5177
Play
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ
9. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பது செல்வம் கிடையாது. போதுமென்ற மனம்தான் செல்வமாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6446
Play
الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاتِّبَاعِ الْجَنَائِزِ وَعِيَادَةِ الْمَرِيضِ وَإِجَابَةِ الدَّاعِي وَنَصْرِ الْمَظْلُومِ وَإِبْرَارِ الْقَسَمِ وَرَدِّ السَّلَامِ وَتَشْمِيتِ الْعَاطِسِ
10. நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (செய்வதற்குக்) கட்டளையிட்டார்கள். ஜனாசாவைப் பின்தொடருமாறும், நோயாளியை நலம் விசாரிக்குமாறும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுமாறும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுமாறும், சலாமுக்குப் பதில் கூறுமாறும், தும்மியவருக்கு மறுமொழி கூறுமாறும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி) நூல் : புகாரி 1239
Play
عَنْ أَبِي سعيد عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ
11. "ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி 5641
Play
عَنْ سَهْلٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا
12. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நானும் அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி தம் சுட்டு விரலையும், நடு விரலையும் அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரி 5304
Play
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ
13. அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2766
Play
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ فَقَالُوا يَا نَبِيَّ اللَّهِ فَمَنْ لَمْ يَجِدْ قَالَ يَعْمَلُ بِيَدِهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ فَلْيَعْمَلْ بِالْمَعْرُوفِ وَلْيُمْسِكْ عَنْ الشَّرِّ فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ
14. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ”தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” எனக் கூறியதும், தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்...?” எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ” ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், ”அதுவும் முடியவில்லையாயின்” எனக் கேட்டதற்கு, ”தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள் ”அதுவும் இயலவில்லையாயின்” என்றதும் ”நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி 1445
Play
عن سَهْلُ بْنُ حُنَيْفٍ وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمَرُّوا عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ أَيْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالَا إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ فَقَالَ أَلَيْسَتْ نَفْسًا
15. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். 'இது யூதருடைய பிரேதம்' என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதுவும் ஓர் உயிர் அல்லவா?' என்று கேட்டனர்.
நூல்: புகாரி 1313
Play