"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல் குர்ஆன்: 5:32)
கடந்த 27-05-2016 வெள்ளிகிழமை அன்று (QITC) கத்தர் மண்டலம் சார்பாக (ஹமத் மருத்துவமனை உடன் இணைந்து) மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
ஜூம்மா தொழுகையின் பின்னர் மதிய உணவுடன் பிற்பகல் இரண்டு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது.
இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்க வருகை புரிந்தனர். குறிப்பாக இந்திய இலங்கை முஸ்லிம் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள்.
வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர் ஹமத் மருத்துவ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் இரத்ததானம் அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மக்கள் வெள்ளம் அலைமோதிய நிலையில் நேரம் போதாமை போன்ற காரணங்களினாலும் நூற்றி பதினேழு நபர்கள் மாத்திரமே தங்களின் குருதிக்கொடைகளை வழங்கினர்.
நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற ஹமத் மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வாளர்கள் என 11 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் ஆறு படுக்கை கொண்ட நவீன பேருந்தையும் QITC மர்கஸ்க்கு அனுப்பி இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற உதவியது.
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக குருதி கொடையளித்த சகோதர்களுக்கும், ஹமத் மருத்துவமனை இரத்த வங்கிக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்...

மேலும் படங்களுடன் ஃபேஸ் புக் செய்தி: