செவ்வாய், 1 டிசம்பர், 2015

ஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -2)

ஷியாக்களின் கடவுள் கொள்கை

அபூஉஸாமா

அப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனால் உருவாக்கப்பட்ட ஷியா மதம் பரப்பிவரும் படுபயங்கர விஷச் சிந்தனைகளில் ஒன்று, அல்லாஹ்வுக்கு பதாஃ ஏற்படும் என்ற கருத்தாகும். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் ஏற்படும் என்ற நச்சுக் கருத்தாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

இவர்கள் இட்டுக்கட்டிக் கூறுகின்ற இந்த அபத்தமான, அபாண்டமான சிந்தனையை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன்.

கலீனீ என்பவர் ஷியாக்களின் அறிஞர்களில் ஒருவராவார். அவர் தனது அல் காஃபி என்ற நூலில் அல் பதாஃ என்று தலைப்பிட்டு தனிப் பாடமே அமைத்திருக்கிறார்.

இந்தப் பாடத்தில் தன்னுடைய கருத்தையும், தன்னுடைய பாதுகாக்கப்பட்ட (?) இமாம்களிடமிருந்து கிடைத்த பல தரப்பட்ட அறிவிப்புகளையும் அறிவிக்கின்றார்.

"மதுவைத் தடை செய்வதற்காகவும், அல்லாஹ்வுக்கு மறதியும் அறியாமையும் உண்டு என்று உறுதிப்படுத்துவதற்காகவுமே தவிர அல்லாஹ் எந்தவொரு நபியையும் அனுப்பவில்லை'' என்று ரிளா (ஷியாக்களின் எட்டாவது இமாம்) கூற நான் செவியுற்றேன் என ரய்யான் பின் ஸலித் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு அல் காஃபி ஃபில் உசூல் என்ற நூலில் பதாஃ என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு மேற்கொண்டு ஒரு விரிவுரையும் எழுதப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம்.

அபுல் ஹஸனின் மகன் அபூ ஜஃபர் இறந்த பின்பு அவர்களிடம் இருந்து கொண்டிருந்தேன். "அபூஜஃபர், (அவரது சகோதரர்) அபூமுஹம்மது ஆகிய இருவரும் இந்நேரத்தில் அபுல் ஹஸன் மூஸாவையும், இஸ்மாயீலையும் போல் இருக்கிறார்கள். இவ்விருவரின் சம்பவம் அவ்விருவரின் சம்பவத்தைப் போன்று இருக்கிறது. (அபுல் ஹஸன் மூஸா, இஸ்மாயீல் ஆகிய இருவரில் முதலில் இஸ்மாயீல் இறந்து விடுகின்றார். மூஸா வாழ்ந்து கொண்டிருந்தார். அது போலவே) அபூஜஃபர் இறந்த பின்னர் அபூமுஹம்மது வாழ்ந்து கொண்டிருக்கிறார்'' என்று எண்ணி எனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது நான் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் (என்னுடைய மனதில் உள்ளதை அறிந்து கொண்ட) அபுல் ஹஸன், "அபூஹாஷிமே! மூஸா எப்படிப்பட்டவர் என்ற விபரம் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. இஸ்மாயீல் உயிருடன் இருக்கும் போது, அதாவது அவர் இறக்கும் வரை அவரைப் பற்றிய விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இது போன்று தான் (என் மகன்) அபூ முஹம்மது எப்படிப்பட்டவர் என்ற விபரம் அபூஜஃபர் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. அபூஜஃபர் உயிருடன் இருக்கும் வரை, அதாவது அவர் மரணிக்கும் வரை அவர் எப்படிப்பட்டவர் என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இந்த வீணர்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் சரியே! இதைத் தான் நீங்கள் உங்கள் உள்ளத்தில் எண்ணி சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள். எனது மகன் அபூமுஹம்மது எனது ஸ்தானத்தை அடைகின்ற எனது வழித்தோன்றல் ஆவார். அவருக்குத் தேவையான ஞானம் அவரிடமே உள்ளது. அவரிடம் இமாமத் என்ற ஆயுதம் இருக்கின்றது'' என்று அபுல் ஹஸன் கூறினார் என அபூஹாஷிம் அல்ஜஃபரி தெரிவிக்கிறார்.

இது ஷியாக்களின் "அல்ஹுஜ்ஜத்' என்ற நூலில் பக்கம் 328ல் பதிவாகி உள்ளது.

தனது மகன் இஸ்மாயீல் என்பவர் இமாமாக ஆவார் என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் என்ற இமாம் முன்னறிவிப்புச் செய்தார். அதாவது தான் இறக்கின்ற வரை தனது மகன் உயிருடன் வாழ்ந்து இமாமாக ஆவார் என்று குறிப்பிட்டார். ஆனால் (அவரது முன்னறிவிப்புக்கு மாற்றமாக) தந்தை உயிருடன் இருக்கும் போதே மகன் இஸ்மாயீல் இறந்து விடுகிறார். "என் மகன் இஸ்மாயீல் விஷயத்தில் (அவன் இறந்த பின்பு) அல்லாஹ்வுக்குத் தெரிகின்ற விபரத்தைப் போன்று வேறு எதிலும் விபரம் தெரியாமல் இருந்ததில்லை'' என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் கூறினார்.

(அதாவது அவரது மகன் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அவர் யார்? எப்படிப்பட்டசிறப்புள்ளவர்? என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்ததாம். இந்தத் தீயசிந்தனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

இவ்வாறு நவ்பக்தீ குறிப்பிடுகின்றார். இது பிரகுஷ் ஷியா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

நாம் இதுவரை கண்ட இந்த அறிவிப்புக்களிலிருந்து நமக்கு உறுதிப்படும் விஷயம் இது தான்.

"இதற்கு முன்பு அல்லாஹ்வுக்குத் தெரியாத ஒரு விபரத்தை இப்போது அவன் தெரிந்து கொள்கிறான்''

இது தான் ஷியாக்களின் கடவுள் கொள்கையாகும்.

ஆனால் அல்லாஹ் தன் ஞானத்தைப் பற்றி அறிவாற்றலைப் பற்றி தனது தூதர் மூஸா நபியின் வாயிலாக பின்வருமாறு தெரிவிக்கிறான்.

"என் இறைவன் தவறிட மாட்டான்; மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 20:52

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 59:22

அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.

அல்குர்ஆன் 65:12

இந்த வசனங்கள் அல்லாஹ்வின் ஞானத்தைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால் ஷியாக்களோ அல்லாஹ் மறதியாளன் என்று பறை சாற்றுகின்றனர்.

இதன் மூலம் ஷியாக்களின் முழுத் தோற்றத்தையும் அப்படியே நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஷியாக்களின் இமாம் ஜஃபர் பின் முஹம்மது பாகிர் தனது மகனைப் பற்றி ஒரு முன்னறிவிப்புச் செய்கிறார். இமாமாக ஆவார் என்ற அந்த முன்னறிவிப்பு நிறைவேறாமல் தன் மகனின் மரணத்தின் மூலம் தகர்ந்து நொறுங்குகின்றது.

இதனால் அல்லாஹ்வுக்குத் தன் மகனைப் பற்றி விபரம் தெரியவில்லை என்று விபரங்கெட்டு இந்த ஷியா இமாம் உளறுகிறார். அதாவது அல்லாஹ்வுக்கே அறியாமையைப் பறைசாற்றுகிறார்; மறதியைச் சமர்ப்பிக்கிறார்.

இது எவ்வளவு பெரிய இறை மறுப்பு! இப்படிப்பட்ட இந்த ஷியாக்களை எப்படி முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொள்ள முடியும்? இவர்களை ஷியா முஸ்லிம்கள் என்று அழைப்பது எந்த வகையில் நியாயமாகும்? அல்லாஹ்வுடைய பண்புகளில் விளையாடுவது யாருடைய வேலை? தெளிவாக யூதர்களின் வேலை தான்.

"அல்லாஹ் தேவையுள்ளவன்; நாங்களோ தேவையற்றோர்'' என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்று விட்டான். அவர்கள் கூறியதையும் நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவு செய்வோம். "சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! இது நீங்கள் செய்த வினை. அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்'' எனவும் கூறுவோம்.

அல்குர்ஆன் 3:182

அல்லாஹ் வறுமையில் உள்ளவன் என்று திமிர்த்தனமான தீய சொற்களைக் கூறுபவர்கள் யூதர்கள் தான்.

"அல்லாஹ்வின் கை கட்டப் பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.

அல்குர்ஆன் 5:64

அல்லாஹ்வின் கைகளுக்கு விலங்கு மாட்டுபவர்களும் யூத விலங்குகள் தான். இப்படிப்பட்ட திமிர்த்தனத்தை இந்த ஷியா விஷமிகளும் வாந்தி எடுக்கின்றனர். அல்லாஹ் கூறும் இந்தத் தன்மைகளை வைத்துப் பார்க்கும் போது ஷியாக்கள் யூதர்களைப் போன்றவர்கள் அல்ல! யூதர்கள் தான் என்பது தெளிவாகிறது.

அப்துல் முத்தலிபை அல்லாஹ் தனியொரு சமுதாயமாக எழுப்புவான். அப்போது அரசர்களின் மகிமையும், இறைத்தூதர்களின் அடையாளமும் அவரிடம் இருக்கும். காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவராவார்.

(நூல்: மஸ்அலத்துல் பதாஃ பக்கம் 53, 54, 55)

பாருங்கள்! அப்துல் முத்தலிப் யார்? இஸ்லாத்தின் பார்வையில் இறை நிராகரிப்பாளர்! அவரை தனியொரு சமுதாயம் என்று போற்றுகின்றார்கள் இந்த ஷியாக்கள்.

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:120

ஏகத்துவத்தின் அணையாத ஜோதியாகத் திகழ்ந்த இப்ராஹீம் நபி அவர்களுக்கு அல்லாஹ் அளித்த பட்டத்தை இந்தப் பாவிகள் அப்துல் முத்தலிபுக்குச் சூட்டி மகிழ்கிறார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் பட்டத்தை அப்துல் முத்தலிபுக்குக் கொடுத்ததோடு நிறுத்தவில்லை. இப்ராஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் அளிக்கப்போகும் மாபெரும் மரியாதையையும் இவர்கள் அப்துல் முத்தலிப்புக்கு அளிக்கிறார்கள்.

மறுமையில் அனைவரும் நிர்வாணமாக எழுப்பப்படும் போது முதன் முதலில் ஆடைஅணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

(பார்க்க: புகாரி 3349)

இந்தத் தகுதியை, இதை விட அதிகமான தகுதியை இருட்டில் மறைந்த அப்துல் முத்தலிபுக்குத் தாரை வார்க்கிறார்கள். இதற்குக் காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியவராம். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் உள்ளது என்று கூறியவராம். (இதை எங்கு போய் கண்டுபிடித்தார்கள் என்பது தனி விஷயம்) அதனால் தான் இந்த மரியாதை!

இப்படி அல்லாஹ்வுக்கும் ஏகத்துவத்திற்கும் எதிராகக் களமிறங்கி நிற்கும் இந்த யூதவாரிசுகளை இஸ்லாமியப் புரட்சியாளர்கள் என்று எப்படி மெச்ச முடியும்?