கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று (தோஹா) மதீனா கலிஃபாவிலுள்ள "ஸவூதி மர்கஸ்" வளாகத்தில் "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" (மினியேச்சர்) ஒன்றை சிறப்பாக நடத்தி முடித்தது, அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 2016 ஜனவரி 31 அன்று திருச்சியில் நடக்க இருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை" ஒட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாற்று மத சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதில் இடம்பெற்ற சிறுவர் சிறுமியர்களின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீடியோக்களின் தொகுப்பு: