04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மதீனா கலிஃபா ஸவூதி மர்கஸில் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை கத்தர் மண்டல "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" நடை பெற்றது.
இம் மாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்:
"இஸ்லாம் ஓர் அறிமுகம்"
நடத்தியோர்: சகோ அப்துர் ரஹ்மான் & சகோ காதர் மீரான்
"நபி(ஸல்) மறைவுக்குப் பின் முஸ்லிம்களிடம் நுழைந்த ஷிர்க்"
நடத்தியோர்: சகோ அப்துஸ் ஸமத் மதனி & சகோ அன்சார் மஜிதி
"இறைவேதம் எதிர்க்கும் இணைவைப்புக் கொள்கை"
நடத்தியோர்: சகோ: முஹம்மத் அலி MISc & சகோ: மனாஸ் பயானி
"இணைவைப்பின் வகைகளும் அதன் தண்டனைகளும்"
நடத்தியவர்: சகோ: முஹம்மத் தமீம் MISc
மற்றும் ஷிர்க்கிற்கு எதிரான சிறுவர், சிறுமியர்களின் கண்காட்சி மற்றும் நாடகமும் நடைபெற்றது.
புதுமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தரைதளத்தில் புரோஜெக்டருடன் கூடிய நான்கு அரங்கங்களும், முதல் தளத்தில் சிறுவர் சிறுமியர்களின் கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.