செவ்வாய், 29 டிசம்பர், 2015

உணவளிப்போம்! உயர்வு பெறுவோம்!


உணவளிப்போம்! உயர்வு பெறுவோம்!

முஹம்மது ஒலி, எம்.ஐ.எஸ்.சி.

மனிதர்கள் இறைவனால் படைக்கப்பட்டாலும் இந்தப் படைப்புகளில் பொருளாதார ரீதியில் உயர்வு, தாழ்வு இருக்கத்தான் செய்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளின் மூலம் இறைவன் மனிதர்களில் ஒருவர் மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதாபிமானத்தைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.

பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட இயற்கைச் சீற்றங்களினால் அனைத்தும் இழந்து ஏழைகளாக மாறிவிடுகின்றனர். இந்த நேரத்தில் நம்மிடம் உதவக் கூடிய நல்லுள்ளத்தை இறைவன் எதிர்பார்க்கிறான்.

சமீபத்தில் (டிசம்பர் 2015) தமிழகத்தில் பரவலாகப் பெய்த கனமழையின் காரணமாக சென்னை, கடலூர் போன்ற சில மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. அங்கு வசிக்கும் மக்களின் வீடுகள் நீரில் மிதந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கிப் போனது. மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்காக வீதியில் இறங்கிப் போராடக்கூடிய நிலை ஏற்பட்டது. இதில் தமிழக அரசு தன்னால் இயன்ற சில உதவிகளைத் தான் செய்தது.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் இதுபோன்ற நிலையில் மனிதர்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதில் அழகிய முறையில் நமக்கு வழிகாட்டியுள்ளது.

இஸ்லாத்தில் சிறந்த செயல்

இஸ்லாம் மார்க்கம் மனித வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு கருத்துகளைக் கூறினாலும் அதில் சிறந்ததாக பசித்தோருக்கு உணவளிக்கும் செயலைக் குறிப்பிடுகிறது. நாம் மட்டும் உண்டு கழித்து சுகபோகத்தில் வாழக்கூடிய சுய நலத்தை நமக்குக் கற்றுத் தரவில்லை.

இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது,

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது' எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 12

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

''ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்'' - இது மனிதர்கள் சொல்லும் பழமொழி (இறைவனை இவ்வுலகில் யாரும் காண முடியாது என்பது இஸ்லாத்தின் ஆழமான நம்பிக்கை). ஆனால் இதன் சிறப்பை உணர்ந்து மக்கள் நடப்பது போல் தெரியவில்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கம் இதன் சிறப்பை அழகிய முறையில் எடுத்துரைக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று கூறுவான். மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான். மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை'' என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5021

உணவளிக்காதவன் நரகம் செல்வான்

மறுமையில் நரகம் செல்வதற்குரிய கெட்ட செயல்களை இறைவன் தன் திருமறையில் பல இடங்களில் கூறியுள்ளான். அதில் மறுமையில் சொர்க்கவாசிகள், நரகவாசிகளிடம் கேட்கும் சில கேள்விகளும் அடங்கும்.

இது பற்றி இறைவன் கூறும்போது,

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை'' (எனவும் கூறுவார்கள்).

அல்குர்ஆன் 77:42-47

மறுப்போரின் பண்பு

இறைவனை மறுப்போர் எப்படி இவ்வுலக வாழ்வில் நடப்பார்கள் என்பதற்கு இறைவன் பல பண்புகளை திருமறையில் கூறியுள்ளான். இந்தப் பண்புகள் முஸ்லிம்களாகிய நமது வாழ்க்கையில் வராமல் இருப்பதற்கு அதிகக் கவனத்தோடு வாழ்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

இது குறித்து இறைவன் தன் திருமறையில் கூறும்போது,

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! என்று அவர்களிடம் கூறப்படும் போது "(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 36:47

உணவளிக்கத் தூண்டாதவனின் நிலை

பசித்தோருக்கு உணவளிப்பது என்பது பொருளாதாரத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்களும், நடுத்தரத்தில் இருப்பவர்களும் செய்ய வேண்டிய அவசியமான பண்பாகும். ஆனால் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாவிட்டாலும் பிறரிடத்தில் எடுத்துக் கூறியாவது பசித்தோரின் பசி போக்கப் பாடுபட வேண்டும்.

இந்தக் கருத்தில் இறைவன் பல வசனங்களை தன் திருமறையில் கூறியுள்ளான்.

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரிய வில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான். அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்). அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவும் இல்லை.

அல்குர்ஆன் 69:25-34

அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள். செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள். அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?

அல்குர்ஆன் 89:17-23

தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.

அல்குர்ஆன் 107:1-3

நபிகளாரிடம் முன்மாதிரி

அகிலத்தாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரியாக இருப்பது போல் ஏழைகளுக்கு உணவளிக்கும் விஷயத்திலும் முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள். தன்னிடத்தில் உணவளிக்க ஏதும் இல்லாதிருந்த போதும் கூட பிறரிடம் எடுத்துக் கூறி மற்றவர்களின் பசி போக்க அதிக முனைப்பு காட்டினார்கள்.

இதனைப் பின்வரும் செய்தி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்-அனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), "இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?''... அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?''... என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கிறேன்)'' என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று சொன்னார்.

அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று சொன்னார்.

அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்

...அல்லது வியப்படைந்தான்'' என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், "தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்'' என்னும் (59:9ம்) வசனத்தை அருளினான்.


நூல்: புகாரி 3798

மேலே குறிப்பிடப்பட்ட செய்திகள் அனைத்தும் மற்றவர்கள் பசியோடிருக்க நாம் மட்டும் உண்டு கழித்து சுயநலத்தோடு வாழ்வதை இஸ்லாம் விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்படுகிறது. இத்தகைய செய்திகளை உணர்ந்து பொது நலத்துடன் வாழ்ந்து இஸ்லாத்தின் சிறப்புத் தன்மையை அனைத்து மக்களுக்கும் எடுத்துக் காட்டுவது நம் அனைவரின் கடமையாகும்.

- ஏகத்துவம், டிசம்பர் 2015

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்


ஏக இறைவனின் திருப்பெயரால்...

25-12-2015 வெள்ளிகிழமை அன்று கத்தர் மண்டலம்‬ சார்பாக மாபெரும் ‪இரத்ததான முகாம்‬ நடைபெற்றது. கத்தரில் அன்று காலை முதல் பெய்த அடைமழையையும் பொருட்படுத்தாமல் நம் சகோதரர்கள் அதிக அளவில் வருகை தந்திருந்தனர்.

வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர்‪ ஹமத்‬ மருத்துவ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் இரத்ததான ஊர்தியில் அனுமதிக்கப்பட்டனர்.

பிற்பகல் ஒரு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஏழு மணிவரை நடைபெற்றது.

நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற, ஹமத் மருத்துவமனை இரத்த வங்கி, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வாளர்கள் என 10 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் ஆறு படுக்கை கொண்ட நவீன பேருந்தையும், ‪QITC மர்கஸ்க்கு‬ அனுப்பி, இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற உதவியது.‪

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்‬ சார்பாக, குருதி கொடையளித்த சகோதர்களுக்கும், ஹமத் மருத்துவமனை இரத்த வங்கிக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

‪அல்ஹம்துலில்லாஹ்‬...

வியாழன், 24 டிசம்பர், 2015

QITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்ளிக்கிழமை

QITC இரத்ததான முகாம் 25-12-2015

QITC யின் மாபெரும் இரத்ததான முகாம்

நாள்: வெள்ளிக்கிழமை 25-12-2015 மதியம் 1 முதல் 8 மணிவரை

இடம்: QITC மர்கஸில் - LG ஷோரூம் /அன்சார் கேலரி பின்புரம் துமாமா

கண்ணியத்திற்குரிய சகோதர-சகோதரிகளே,

இன்ஷா அல்லாஹ்!

25-12-2015 வெள்ளிக்கிழமை மதியம் QITC மர்கஸில் மாபெரும் இரத்ததான
முகாம் நடைபெற இருக்கிறது. ஆகவே, அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து, மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.

குறிப்பு: 
  • அனைவர்களையும்‬ அழைத்து வரலாம் .
  • ‪வரும்‬ போது, ID கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஹெல்த் கார்டு - ஆகியவற்றினல் ஒன்றை மறவாமல் கொண்டுவரவும்.


வாகன‬ வசதிக்கு:
சகோ.ஹனிஃபா - 66205277, 77210605 ( மண்டல துணை செயலாளர் )

மேலும்‬ விவரங்களுக்கு:
44315863/ 55532718 /66579598


இரத்த தானம் செய்வீர் ! மனித உயிர் காப்பீர் !

"உதிரம் கொடுப்போம் மனித உயிர்களை காப்போம்"

"ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்"

"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல் குர்ஆன்: 5:32)

உலக மக்களை வாழவைத்த வாய்ப்பை நழுவ விடவேண்டாம் !

‪‎தமிழ், அரபி, ஆங்கிலம், மலையாளம், சிங்களம், ஹிந்தி மொழிகளில்  நோட்டீஸ் தயாரிக்கப் பட்டுள்ளது.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

ஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்

ஏக இறைவனின் திருப்பெயரால்...


அரபுலகில் நடைபெறும் உள்நாட்டுப் போர்கள் பெரும்பாலும் ஷியாக்களுக்கும், சன்னி முஸ்லீம்களுக்கும் இடையில் நடப்பவைகளாகவே உள்ளன. இச்சூழலில் ஷியாக்களின் கொள்கைகளைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

இதனை விளக்கும் "ஷியாக்களின் கொள்கையும் வரலாறும்" என்ற தலைப்பில் ஏகத்துவம் மாத இதழில் தொடராக வெளிவந்த ஷியாக்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு:


1. இஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்துல்லாஹ் பின் ஸபா

2. ஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை

3. மகான்களும் மறைவான ஞானமும்

4. மவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே!

5. முஹ்ய்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகள்

6. முஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் தெரிகிறது?

7. இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்

8. ஷியாக்களை மிஞ்சும் ஷாதுலிய்யாக்கள்

9. அர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா

10. மலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்

11. கடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா?

12. தூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்?

13. ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்

14. மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்

15. அலீக்கு வந்த வஹீ?

16. யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!

17. இறந்தவர் உயிர் திரும்புவாரா?


திங்கள், 14 டிசம்பர், 2015

சிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீடியோ தொகுப்பு - QITC யின் "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" 04-12-2015


கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று (தோஹா) மதீனா கலிஃபாவிலுள்ள "ஸவூதி மர்கஸ்" வளாகத்தில் "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" (மினியேச்சர்) ஒன்றை சிறப்பாக நடத்தி முடித்தது, அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 2016 ஜனவரி 31 அன்று திருச்சியில் நடக்க இருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை" ஒட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாற்று மத சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதில் இடம்பெற்ற சிறுவர் சிறுமியர்களின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீடியோக்களின் தொகுப்பு:

1


2


3


4


5


6


7


8


9


10


11


12


13


14

சனி, 5 டிசம்பர், 2015

04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு"


04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மதீனா கலிஃபா ஸவூதி மர்கஸில் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை கத்தர் மண்டல "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" நடை பெற்றது.

இம் மாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்:

"இஸ்லாம் ஓர் அறிமுகம்"
நடத்தியோர்: சகோ அப்துர் ரஹ்மான் & சகோ காதர் மீரான்

"நபி(ஸல்) மறைவுக்குப் பின் முஸ்லிம்களிடம் நுழைந்த ஷிர்க்"
நடத்தியோர்: சகோ அப்துஸ் ஸமத் மதனி & சகோ அன்சார் மஜிதி

"இறைவேதம் எதிர்க்கும் இணைவைப்புக் கொள்கை"
நடத்தியோர்: சகோ: முஹம்மத் அலி MISc & சகோ: மனாஸ் பயானி

"இணைவைப்பின் வகைகளும் அதன் தண்டனைகளும்"
நடத்தியவர்: சகோ: முஹம்மத் தமீம் MISc

மற்றும் ஷிர்க்கிற்கு எதிரான சிறுவர், சிறுமியர்களின் கண்காட்சி மற்றும் நாடகமும் நடைபெற்றது.

புதுமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தரைதளத்தில் புரோஜெக்டருடன் கூடிய நான்கு அரங்கங்களும், முதல் தளத்தில் சிறுவர் சிறுமியர்களின் கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

இறந்தவர் உயிர் திரும்புவாரா?


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -17)

இறந்தவர் உயிர் திரும்புவாரா?

அபூஉஸாமா

தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர்க்கும் இடையேயுள்ள விவகாரம் வாய்க்கால் வரப்பு தகராறல்ல! சொத்து பத்துத் தகராறல்ல! கொடுக்கல் வாங்கல் அல்ல! சுருக்கமாகச் சொன்னால் சொந்த விவகாரங்கள் அல்ல! பின்னர் என்ன?

இறந்தவர்கள் திரும்ப வருவர்; மாண்டவர் மறு உயிர் பெற்று மீண்டு வருவர் என்று அவர்கள் நம்புகின்றனர். நாம் அதை மறுக்கிறோம். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இவ்வாறு நம்புவது இணை வைப்பு, இறை மறுப்பு என்று அடித்துச் சொல்கிறோம்.

இந்தக் கழிவுகெட்டக் கசடுக் கொள்கையின் வேர்ப்பிடிப்பு எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்க நாம் கஷ்டப்படத் தேவையில்லை. ஷியாயிஸம் என்ற விஷத்தில் தான்.

இந்த விஷத்தின் வேர்ப்பிடிப்பு யூதயிஸம். இது சீயோனிஸ சிந்தனையும் சித்தாந்தமும் ஆகும். அதாவது யூத மதத்தின் சித்தாந்தமாகும். இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கை!

ஷியாக்களின் ரஜ்அத்' கொள்கை

அப்துல்லாஹ் பின் ஸபஃ என்பவன் தான் ரஜ்அத் எனப்படும் கொள்கையைத் தோற்றுவித்தான். முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) ஆகியோர் இறுதி நாளுக்கு முன் உயிருடன் திரும்ப வருவர் என்ற விஷக் கருத்தைத் தூவினான். அதன் பின்னர் அலீயுடன் 11 இமாம்களையும் சேர்த்து மொத்தம் 12 இமாம்களும் மறு உயிர் பெற்று வருவார்கள் என்று ஷியா ஷைத்தான்கள் அந்தப் பட்டியலை விரித்துக் கொண்டனர்.

யார் அந்தப் பனிரெண்டு இமாம்கள்?

1. அபுல் ஹஸன் அலீ பின் அபீதாலிப்

2. அபூமுஹம்மது பின் அல்ஹஸன் பின் அலீ (அல் ஜகீ)

3. அபூஅப்துல்லாஹ் அல் ஹுஸைன் பின் அலீ (ஸய்யித் அஷ்ஷுஹதாஃ - ஷுஹதாக்களின் தலைவர்)

4. அபூமுஹம்மது அலீ பின் அல்ஹுஸைன் (ஜைனுல் ஆபிதீன்)

5. அபூஜஃபர் முஹம்மது அலீ பின் அலீ (அல்பாகிர்)

6. அபூஅப்துல்லாஹ் ஜஃபர் பின் முஹம்மது (அஸ்ஸாதிக் - இவர் தான் பூரியான் ஃபாத்திஹாவின் கதாநாயகர்)

7. அபூஇப்ராஹீம் மூஸா பின் ஜஃபர் (அல்காழிம்)

8. அபுல் ஹஸன் அலீ பின் மூஸா (அர்ரிளா)

9. அபூஜஃபர் முஹம்மது பின் அலீ (அல்ஜவாத்)

10. அபூஹஸன் அலீ பின் முஹம்மது (அல்ஹாதீ)

11. அபூமுஹம்மது அல்ஹஸன் பின் அலீ (அல் அஸ்கரி)

12. அபுல் காஸிம் முஹம்மது பின் அல்ஹஸன் (அல் மஹ்தி)

இந்த 12 என்ற எண்ணிக்கை, யூதயிஸத்தின் பிரதிபலிப்பு தான் என்பதை மூஸா (அலை) அவர்களின் வரலாற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

இந்த 12 பேரும் திரும்ப உயிர் பெற்று வருவார்கள் என்று சாதாரணமாகச் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யை இட்டுக்கட்டி இந்தச் சித்தாந்தத்தை நுழைக்கின்றார்கள்.

இந்த 12 பேரும் இறுதி நாள் வருவதற்குள் திரும்ப வருவார்கள்; திரும்ப வந்து இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஆட்சியுரிமையை மீட்பார்கள். பறித்தவர்களைப் பழிவாங்குவார்கள்.

இப்படி இவர்களது விஷம சரித்திரம் நீள்கிறது.

ஷியாக்களின் ஆதாரம்

இதற்கு இவர்கள் காட்டுகின்ற ஆதாரங்கள் என்ன?

இவர்களின் முதல் முக்கிய ஆதாரம் 2:243 வசனமாகும்.

இவர்கள் வைக்கும் இரண்டாவது ஆதாரம் 28:85 வசனம்.

மூன்றாவது ஆதாரம் 40:11 வசனம்.

இந்த விளக்கங்களை ஷியாக்களின் குர்ஆன் விளக்கவுரை நூலான தஃப்ஸீர் அல்கிம்மியில் நாம் பார்க்கின்றோம்.

முதல் ஆதாரம்

மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா? அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். "செத்து விடுங்கள்!'' என்று அவர்களுக்கு அல்லாஹ் கூறினான். பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

அல்குர்ஆன் 2:243

இது மூஸா (அலை) அவர்களது காலத்தில் அல்லது அவர்களுக்குப் பிந்திய காலத்தில் நடந்த சம்பவம். சுருக்கமாகச் சொன்னால் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பு நடந்த சம்பவம். இதே போன்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நிகழவுமில்லை. அவ்வாறு நிகழவும் செய்யாது என்று திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவித்து விட்டது. முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:99, 100

திருக்குர்ஆனின் இந்த வசனங்களின்படி, முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் கியாமத் நாள் வரை எவரும் உயிர் பெற்றுத் திரும்ப வரமாட்டார்கள் என்பது தெளிவாகின்றது.

இதில் ஒரேயொரு விதிவிலக்கு உண்டென்றால் இறுதிக் காலத்தில் பெரும் சோதனையாக வரும் தஜ்ஜால், ஒரு மனிதனை உயிர்ப்பிப்பது மட்டும் தான். இதுவும் ஒரு முறை தான் அவனால் முடியும். இரண்டாவது இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இதன் பின்னரும் 2:243 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள் என்றால் இவர்கள் குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு வந்து நிறுத்தவில்லை. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட யூதர்களின் சிந்தனையைத் தான் ஆதாரமாக நிறுத்துகின்றார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

இரண்டாவது ஆதாரம்

(முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். "நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 28:85

இந்த வசனம் குறிப்பிடுவது, மக்காவைத் துறந்து மதீனா சென்ற நபி (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்பதைத் தானே தவிர, இறந்து மீண்டும் உயிர் பெற்று வருவதையல்ல.

மூன்றாவது ஆதாரம்

"எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?'' என்று அவர்கள் கேட்பார்கள்.

அல்குர்ஆன் 40:11

"இரு முறை எங்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இரு முறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கதறுவார்கள்'' என இவ்வசனம் கூறுகிறது.

இரு முறை உயிர்ப்பித்தல் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த உலகத்தில் ஒரு முறை பிறக்கிறோம். மரணித்த பிறகு அழிக்கப்பட்ட பிறகு மறுபடியும் இறைவன் எழுப்புகிறான்.

ஆனால் ஒரு முறை தான் நாம் மரணிக்கிறோம் எனும் போது இரண்டு முறை மரணிக்கச் செய்தாய் என்று எப்படிக் கூற முடியும்? இதைத் திருக்குர்ஆன் 2:28 வசனம் தெளிவாக விளக்குகிறது. இவ்வசனத்தில் மனிதன் படைக்கப்படுவதற்கு முன் இருந்த நிலைமையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது "நீங்கள் மரணித்தவர்களாக இருந்தீர்கள், உங்களை உயிர்ப்பித்தான்; பின்னர் மரணிக்கச் செய்து மீண்டும் உயிர்ப்பிப்பான்'' என்று கூறுகிறான்.

படைக்கப்படாமல் இருந்த அந்த நிலையைத் தான் முதல் மரணம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதே அடிப்படையில் தான் இரு முறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கூறுகிறார்கள்.

இதை ஷியாக்கள் தங்களது 12 இமாம்கள் உயிர் பெற்று வருவார்கள் என்ற கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். ஆனால் இந்த வசனமோ குற்றவாளிகளைப் பற்றிப் பேசுகின்றது. இதிலிருந்தே ஷியாக்களின் புரட்டுத்தனத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஆக, இந்த மூன்று ஆதாரங்களுமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல! நிராகரிக்கத்தக்கவை!

நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஷியாக்களின் இந்தக் கொள்கையைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் கொண்டிருக்கின்றனர்.

யூத மற்றும் ஷியாயிஸத்தின் கொள்கைகளைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

குத்பிய்யத் என்ற குருட்டு நம்பிக்கை

குத்பிய்யத் என்பது விளக்கை அணைத்துக் கொண்டு, இருட்டில் உட்கார்ந்து முஹ்யித்தீனை ஆயிரம் தடவை அழைத்து திக்ர் செய்வதற்குப் பெயராகும். யாகுத்பா என்ற பாடலில் இது இடம்பெறுகின்றது.

"எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன். எனவே, யா அப்துல் காதிர் முஹ்யித்தீனே என்று அவர் அழைக்கட்டும்''

இந்த குத்பிய்யத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் இலங்கை போன்ற நாடுகளிலும் நடைபெறுகின்றது. தமிழக முஸ்லிம்கள், கேரள முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கும் இது நடைபெறுகின்றது. இந்த குத்பிய்யத்தின் போது முஹ்யித்தீன் ஆஜராகின்றார் என்றே நம்புகிறார்கள். ஆம்! முஹ்யித்தீன் ரஜ்அத்' அடிப்படையில் உயிர் பெற்றுத் திரும்ப வருகின்றார் என்றே உறுதியாக நம்புகின்றனர்.

யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -16)

யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!

அபூஉஸாமா

இரட்டை வேடம் போடும் உலமாக்கள்

அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர். இதைக் கடந்த இதழில் பார்த்தோம்.

இந்த ஷியாக்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர்.

ஆனால் அந்த சு.ஜ. உலமாக்களும் ஷியாக்கள் கொண்டுள்ள அதே கொள்கையைத் தான் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

(அல்லாஹ்வுக்கும் உங்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடலை) நீங்கள் செவியுற்றுக் கொண்டிருக்கும் போதே, காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான ரட்சகரே! (என்னை நெருங்கி என்னுடன்) ஒன்றியவராகி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீபாவாக இருக்கிறீர் என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது. முஹ்யித்தீனே! (இறைவனாலேயே) மகத்தான ரட்சகர் என்று அழைக்கப்பட்டதன் மூலம் நீங்கள் மகத்துவமிக்க திருநாமம் ஒன்றைத் தான் சூட்டப்பட்டு விட்டீர்!

இது, யாகுத்பா என்ற மவ்லிதில் இடம் பெறும் கவிதையின் பொருளாகும்.

இக்கவிதையில் இந்தக் கவிஞன் சொல்ல வரும் விஷயங்களைக் காண்போம்.

1. அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேரடியாகப் பேசினான். அதுவும் அவர் காதால் கேட்கும் அளவுக்குப் பேசினான்.

2. அப்துல் காதிர் ஜீலானி, கவ்துல் அஃலம் - மகத்தான ரட்சகராக இருக்கிறார்.

3. மகத்தான ரட்சகர் என்ற பட்டத்தையும் மனிதர்களாக அவருக்குச் சூட்டவில்லை. அல்லாஹ்வே அவருக்கு இந்தப் பட்டத்தை வழங்கி விட்டான்.

4. மனிதன் இறைவனுடன் ஒன்றி விட முடியும்.

5. இவை அனைத்தையும் அல்லாஹ்வே அவரை நோக்கிக் கூறினான்.

இவ்வளவு கருத்துக்களும் இந்தக் கவிதை வரிகளில் மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே சொல்லப்படுகின்றது.

இதில் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடக் கூடியவையாக உள்ளன.

அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேருக்கு நேர் பேசினான் என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். சராசரி முஸ்லிமும் இதை நம்பத் துணிய மாட்டான். நபிமார்களின் தொடரை, நபி (ஸல்) அவர்களுடன் நிறைவுபடுத்தி, கடைசி ஹஜ்ஜின் போது, இந்த மார்க்கத்தை நிறைவு படுத்தி விட்டதாக அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

நபி (ஸல்) அவர்களுடன் இந்த மார்க்கம் முழுமை பெற்ற பின் வேறு எவருடன், எதற்காக இறைவன் பேச வேண்டும்? நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு எவருடனாவது இறைவன் பேச வேண்டுமென்றால் இந்த உம்மத்திலேயே மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசியிருப்பானே!

உமரின் நாவில் அல்லாஹ் சத்தியத்தைப் போட்டிருக்கிறான்; அதைக் கொண்டு அவர் பேசுகிறார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: அபூதாவூத் 2573, இப்னுமாஜா 105

இந்த உயர்ந்த அந்தஸ்து பெற்ற உமர் (ரலி) அவர்களுடன் இறைவன் பேசவில்லையே! எவ்வளவோ பிரச்சனைகள் ஏற்பட்ட நேரத்திலும் அல்லாஹ் அவர்களுடன் பேசவில்லையே!

நபிமார்கள், ரசூல்மார்கள் நீங்கலாக உள்ள முன்னோர், பின்னோர் அனைவரிலும் இளைய தலைமுறையினரின் தலைவர்கள் அபூபக்ரும், உமரும் ஆவர் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: திர்மிதீ 3597, இப்னுமாஜா 97

அபூபக்ரையும், உமரையும் சுட்டிக் காட்டி நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் பின்பற்றி நடங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி)

நூற்கள்: திர்மிதீ 3596, இப்னுமாஜா 94

இப்படி நபி (ஸல்) அவர்களால் சிலாகித்துச் சொல்லப்பட்ட இந்த இரு நல்லடியார்களிடம் கூட அல்லாஹ் உரையாடவில்லை. ஆனால் இந்த இருவரின் தரத்திற்கு ஏணி வைத்தாலும் எட்டாத நிலையில் உள்ள ஒருவருடன் பேசினான் என்பதை ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?

எப்படியாவது அவரை நபியவர்களுக்குச் சமமாக ஆக்கி, பிறகு அவர்களை விடவும் மேலான நிலையில் உயர்த்துவதே இக்கவிஞனின் நோக்கம். இவருடன் அல்லாஹ் நேரடியாக உரையாடியதாகக் கூறுவதன் மூலம் அவரை நபியுடன் சமப்படுத்துகின்றான். மகத்தான ரட்சகரே'' என்று அல்லாஹ் இவரை அழைத்ததாகக் கூறுவதன் மூலம் நபியை விடவும் இவரை உயர்த்துகின்றான். ஏனெனில் நபியவர்களைக் கூட அல்லாஹ், மகத்தான ரட்சகரே' என்று அழைக்கவில்லை.

இறைவன் அப்துல் காதிர் ஜீலானியுடன் பேசினான் என்று கதை கட்டியதன் மூலம் நபி (ஸல்) அவர்களுக்குப் பின், அப்துல் காதிர் ஜீலானி நபியாகத் திகழ்ந்தார்கள் என்று காட்டுவதற்காக யூதர்கள் இயற்றியதே இந்தப் பாடல் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

மிர்ஸா குலாம் என்பவன் தன்னை நபியென்று பிதற்றிய போது, தனக்கு வஹீ வருகின்றது என்று உளறிய போது, அதற்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்த உலமாக்கள், அவனையும் அவனை நம்பியவர்களையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்த உலமாப் பெருமக்கள் அதே நச்சுக் கருத்தை எப்படிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்?

அப்துல் காதிர் ஜீலானியை நபியாகச் சித்தரிக்கும் இந்த யாகுத்பா பாட்டை எழுதியவனும், இதை நம்பியவர்களும் காஃபிர்கள் என்று ஃபத்வா அளிக்காதது மட்டுமின்றி, தங்களுக்குக் கிடைக்கின்ற சில்லறைகளுக்காக வீடுகளில் போய் பாடி விட்டு வரவும் எப்படித் துணிகிறார்கள்?

யாகுத்பாவை ஆதரிப்பவர்களுக்கும் காதியானிகளுக்கும் கொள்கையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது? இந்த நச்சுக் கருத்து இவர்களின் கண்களுக்குத் தவறாகத் தெரியாமல் போனது ஏன்?

காதியானிகள் காஃபிர்கள் என்று இந்த உலமாக்கள் ஒட்டு மொத்தமாக மார்க்கத் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால் யாகுத்பாவை எழுதிய கவிஞன், முஹ்யித்தீனுக்கு வஹீ வருகின்றது என்று சொல்கின்றான். இவனை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்ளும் ஆலிம்கள் கண்டு கொள்வதில்லை. இந்தக் கவிதையை எதிர்த்து கடுகளவு கூட ஆட்சேபம் தெரிவிக்காமல் மவுன விரதம் பூண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?

இந்தப் பாடல்களை பலப் பல வீடுகளில் படியேறிப் பாடுவதால் இவர்களுக்குப் படியளக்கப்படுகின்றது. கைகளில் கைமடக்கு கொடுக்கப்பட்டு பைகள் நிரப்பப்படுகின்றன. இந்த அற்பக் காசுக்காக, சொற்ப ஆதாயத்திற்காக இவர்கள் மார்க்கத்தை விலை பேசி விற்கின்றார்கள்.

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

அல்குர்ஆன் 2:174

இந்த ஆலிம்கள் தங்களுடைய வயிறுகளில் நெருப்பை நிரப்பிக் கொள்கிறார்கள். அதனால் தான் இந்தக் கவிஞனின் விஷ வரிகளை இவர்கள் கண்டு கொள்வதில்லை.

பொய்யன் மிர்ஸா குலாமுக்கு ஒரு நீதி, இந்தப் புறம்போக்குக் கவிஞனுக்கு ஒரு நீதி என அநீதி பாராட்டுகின்றார்கள். மிர்ஸா குலாமை காஃபிர் என்று ஃபத்வா கொடுத்தது போன்று இந்தக் கவிஞனையும் காஃபிர் என்று ஃபத்வா கொடுக்க மறுக்கின்றார்கள். இதிலிருந்து இவர்கள் பக்கா ஷியாக்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

முஹம்மது (ஸல்) அவர்களைத் தாக்கி முஹ்யித்தீனை உயர்த்துதல்

கவ்துல் அஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!

இதுவும் யாகுத்பாவில் இடம்பெறும் கவிதை வரியாகும்.

நபியின் புகழ் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹ், அப்துல் காதிர் ஜீலானிக்கு அருள் புரியட்டும் என்று இவன் பாடியிருந்தால், நபியை உரிய விதத்தில் மதிக்கிறான் என்று கருதலாம். இந்தக் கவிஞன் விஷயத்தையே தலைகீழாக மாற்றுகின்றான்.

அப்துல்காதிர் ஜீலானியின் புகழ் நிலைத்திருப்பதால் தான் நபிக்கே அல்லாஹ் அருள் புரிய வேண்டுமாம்.

உண்மையான முஸ்லிமை விட்டு விடுவோம். அரைகுறை முஸ்லிமாவது இதை ஏற்க முடியுமா?

நபியவர்களின் மதிப்பைக் குறைப்பதே இக்கவிஞனின் உண்மையான நோக்கம். நச்சுக் கருத்தை, நாசகார விஷத்தைக் கொண்ட இவை கவிதை வரிகள் அல்ல! நரக நெருப்புப் பொறிகள்!

கண்மணி நாயகம், உயிரினும் மேலான உத்தம நபி என்று இவர்கள் சொல்வதெல்லாம் வெளி வேஷம்; வெற்றுக் கோஷம்!

நபி புகழ் பாடுகின்றோம் என்று இவர்கள் குறிப்பிடுவது நடிப்பும் நாடகமும் ஆகும். இவர்கள் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறோம் என்று சொல்வது பகிரங்க நயவஞ்சகமாகும். இதற்குச் சான்று தான் இந்தக் கவிதை வரிகள்.

இந்த ஆலிம்கள் ஷியாக்கள் என்பதால் தான் இப்படி நபி (ஸல்) அவர்களை மட்டம் தட்டுகிறார்கள். இவர்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று குறிப்பிடுவது பொய்யும் போலியுமாகும்.

அலீக்கு வந்த வஹீ?


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -15)

அலீக்கு வந்த வஹீ?

அபூஉஸாமா

மலக்குகள் மற்றும் இறைத் தூதர்களை அவமதிப்பது யூதர்களின் இரத்தத்தில் ஊறிய ஒரு கொடிய உணர்வு. அந்த உணர்வைத் தங்கள் இரத்தமாகக் கொண்டவர்கள் தாம் ஷியாக்கள். அதனால் தான் அவர்கள் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அவமதிக்கிறார்கள் என்பதைக் கடந்த தொடரில் கண்டோம்.

அது போல் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கிறார்கள்; மட்டம் தட்டுகிறார்கள். அலீயை உயர்த்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தாழ்த்துகிறார்கள். அந்தப் பட்டியலில் இடம் பெறும் ஒரு செய்தியைப் பாருங்கள்.

கைபர் வெற்றியை அறிவிக்கையில் அபூராஃபி கூறியதாவது: (கைபரை நோக்கி) அலீ சென்றார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். காலையில் அவர் வெற்றியடைந்து மக்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் நின்றார். தன்னுடைய இறைவனுடன் அலீ ரகசியமாக உரையாடுகின்றார் என மக்கள் பேசிக் கொண்டனர். கொஞ்ச நேரம் அவ்வாறு நின்றதும் வெற்றி கொண்ட நகரத்தின் பொருட்களை எடுக்கும்படி உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் உத்தரவிட்டபடியே அலீ மக்களிடம் நின்றார். அல்லாஹ், அலீயிடத்தில் ரகசியமாக உரையாடுகின்றான் என்று மக்களில் ஒரு சிலர் பேசிக் கொண்டனர் என்று சொன்னேன். ஆம்! அபூராஃபியே! தாயிப் நாளின் போதும், தபூக்கின் கணவாய் நாளின் போதும் ஹுனைன் நாளின் போதும் அல்லாஹ் அலீயிடம் ரகசியமாக உரையாடினான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல்: பஸாயிருத் தரஜாத்

ஷியா இமாம்களால் அறிவிக்கப்படும் செய்தி இது!

இத்துடன் மற்றொரு செய்தியையும் இங்கு பார்ப்போம்.

என்னைப் போன்ற ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அவரை வைத்து அல்லாஹ், கைபரை வெற்றி கொள்ளச் செய்வான். சாட்டை தான் அவருடைய வாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் மக்களிடம் தெரிவித்ததும் மக்களுக்கு அவர் மீது மரியாதை ஏற்பட்டது. மறுநாள் காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீயை அழைத்து, நீ தாயிஃபுக்குச் செல் என்று கட்டளையிட்டார்கள். அலீ புறப்பட்டுச் சென்ற பின்னர், நீங்களும் தாயிஃபுக்குச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான். நபி (ஸல்) அவர்கள் தாயிஃபுக்குச் சென்ற போது அலீ (ரலி) மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், நில்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஒரு பேரிறைச்சல் சப்தத்தைச் செவியுற்றோம். அல்லாஹ்வின் தூதரே! இது என்ன? என்று வினவப்பட்டது. அல்லாஹ் அலீயுடன் ரகசியமாக உரையாடுகின்றான் என்று பதிலளித்தார்கள்.

இவ்வாறு அபூஅப்தில்லாஹ் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது.

நூல்: பஸாயிருத் தரஜாத்

இவ்விரு செய்திகளில் இருபெரும் அற்புதங்களை (?) இந்த யூத வாரிசுகள் அவிழ்த்து விடுகின்றனர்.

1. நபி (ஸல்) அவர்கள் அலீயை தாயிஃபுக்கு அனுப்பி வைத்ததால், அவரைப் பின்தொடர்ந்து நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான்.

2. அல்லாஹ்வின் தூதரைப் போலவே அலீக்கு வஹீ வருகின்றது. அதிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ வரும் போது எழாத பேரிறைச்சல், வெடிச் சப்தங்கள், இடி முழக்கங்கள் எல்லாம் அலீக்கு வஹீ வரும் போது ஏற்படுகின்றன என்ற பிரம்மாண்டத்தைக் காட்டுகிறார்கள்.

அதையும் நபி (ஸல்) அவர்களே சொன்னார்கள் என்பது போல் சித்தரித்து, நபி (ஸல்) அவர்களை இரண்டாம் தரத்தில் நிறுத்துகின்றார்கள் இந்த ஷியா பாவிகள்.

முஹம்மத் (ஸல்) அவர்களே முதன்மையானவர்

எள்ளளவு, எள் முனையளவு ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட (இப்ராஹீம் நபி தவிர) மனித ஜின் இனத்தில் மேலானவர், அல்லது அவர்களுக்கு நிகரானவர் இருக்கின்றார் என்று ஒரு போதும் நம்ப மாட்டார். இந்த ஷியாக்களோ அலீயை நபிக்கு இணையானவர் என்ற வட்டத்தைத் தாண்டி மேலானவர் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். இது திருக்குர்ஆனுக்கு நேர் எதிரான கருத்தாகும்.

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.

அல்குர்ஆன் 33:6

இப்படியோர் உயர் தகுதியைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இரண்டாம் தகுதியைக் கொடுப்பவர்கள் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?

அகிலத் தூதர்

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம்.

அல்குர்ஆன் 34:28

(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.

அல்குர்ஆன் 25:1

அகிலத்தின் அருட்கொடை

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

அல்குர்ஆன் 21:107

இவையெல்லாம் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த மனித குலத்திலேயே சிறந்தவர்கள் என்பதற்குரிய அல்குர்ஆனின் அழகிய சான்றுகளாகும்.

மனித குலத் தலைவர்

நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 3340)

முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித குலத் தலைவர் என்பதை விளக்குவதுடன், அவர்கள் ஏனைய நபிமார்களை விடவும் சிறந்தவர் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. இம்மாபெரும் தகுதியைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களைத் தான் இந்த ஷியாக்கள் அலீயை விடத் தாழ்த்தி மட்டம் தட்டுகிறார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

இந்த உம்மத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட வேறு யாரையும் உயர்த்துபவன் ஒரு முஃமினாக இருக்க முடியாது. ஷியாக்கள் இன்னோர் அக்கிரமத்தையும் இங்கு நிலைநாட்டுகின்றனர். அது, அலீக்கும் வஹீ வருகின்றது என்று அவர்கள் குறிப்பிடுவதாகும்.

இந்த நம்பிக்கை கொண்டவன் ஒருபோதும் முஃமினாக, இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது. ஏனெனில் இது குர்ஆன், ஹதீசுக்கு நேர் எதிரான சிந்தனையும் கருத்துமாகும்.

4:163, 12:3, 13:30, 16:123, 17:73, 17:86, 35:31, 42:7, 42:13, 42:53 இன்னும் இது போன்ற வசனங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதைப் பற்றிக் கூறுகின்றன.

வஹீயில் பங்காளி இல்லை

யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்.

அல்குர்ஆன் 2:97

ஜிப்ரயீல் (அலை) அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இந்தத் திருக்குர்ஆனை இறக்கியதாக இந்த வசனம் கூறுகின்றது.

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:40

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம் இறுதி நபி என்று திருக்குர்ஆன் அறுதியிட்டுக் கூறுகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களின் வஹீயில் எந்தப் பங்காளியும் இல்லை என்று அடித்துச் சொல்கின்றது.

இறுதித் தூதர்

தாம் இறைத் தூதர், தம்மைத் தவிர வேறு யாருக்கும் தூதுச் செய்தியில் பங்கும் இல்லை, பாகமும் இல்லை என்று நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகின்றார்கள்.

பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத் தூதர்கள் இருந்தனர். இறைத் தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத் தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத் தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 3455

கடைசிக் கல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 3535

தம்மைக் கடைசியாக வைக்கப்பட்ட செங்கலுக்கு உவமையாக்கி, தமக்குப் பிறகு நபி வரப் போவதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மேற்கண்ட வசனங்கள், ஹதீஸ்கள் அனைத்துமே அலீ (ரலி) அவர்களுக்கோ அல்லது வேறு யாருக்குமோ வஹீ வருகின்றது என்று நம்புபவன் இறை மறுப்பாளன் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

அலீயிடம் ஜிப்ரீல் வருவாரா?

அலீக்கு வஹீ வர வேண்டுமாயின் அது ஜிப்ரீல் வழியாகத் தான் வர வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் வருகையளித்து வஹீ அறிவிக்கும் ஜிப்ரீல் அலீக்கு வருவாரா? ஒரு போதும் வர மாட்டார்.

திருக்குர்ஆன் 53வது அத்தியாயத்தில் நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீலைச் சந்தித்த அந்தச் சந்திப்பை மாபெரும் ஓர் அற்புதம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த ஜிப்ரயீல், அலீயிடம் வருகின்றார்; வஹீ அறிவிக்கின்றார் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இந்த நாசகர்கள் இவ்வாறு சொல்வதில் ஆச்சரியமில்லை. இவர்களது இமாம்களுக்கே ஜிப்ரயீல், மீகாயீல் போன்ற மலக்குகள் வருகையளிக்கின்றார்கள் என்று இவர்கள் சொல்வதைக் கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். எனவே அலீயிடம் ஜிப்ரயீல் வருகின்றார் என்று இவர்கள் சொல்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அதிலும் அல்லாஹ் அலீயிடம் உரையாடுகின்றான் என்று சொல்வது இறை மறுப்பின் உச்சக்கட்டமாகும்.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 42:51

அல்லாஹ் கூறுகின்ற இந்த மூன்று வரையறைகளைத் தாண்டி அல்லாஹ் அலீயிடம் ரகசியமாக உரையாடுகின்றான் என்று சொல்கின்றனர். இதற்கு அரபியில், யுனாஜீ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர் இந்தக் குறுமதியாளர்கள். ஒருவர் மற்றொருவருடன் ரகசியம் பேசும் போது இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.

அலீயுடன் அல்லாஹ் ரகசியம் பேசுகின்றான் என்று இவர்கள் கூறுவதன் மூலம் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறும் வரையறையை அவனே மீறி விட்டான் என்று அல்லாஹ்வின் மீதே ஓர் அபாண்டத்தைச் சொல்கின்றனர். அத்துடன், இந்த உயர் தகுதியை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்காமல் அலீக்கு மட்டும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்றும் சொல்ல வருகின்றார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ் மேற்கண்ட மூன்று வரையறையுடன் தான் பேசியிருக்கின்றான். இது தான் உண்மை! இந்த வரையறைக்கு அப்பாற்பட்டு அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர்.

இந்த அடிப்படையில் ஷியாக்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர்.

ஆனால் அந்த சு.ஜ. உலமாக்களும் அதே கொள்கையைத் தான் கொண்டிருக்கிறார்கள் என்பதை அடுத்த தொடரில் காண்போம்.

மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -14)

மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்

அபூஉஸாமா

ஷியாக்களின் நூலான அல்அன்வாருன் நுஃமானியா என்ற நூலில் இடம் பெற்ற இரண்டு செய்திகளைக் குறிப்பிட்டிருந்தோம். இந்த இரண்டு செய்திகளிலும், அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதுடன் நிற்காமல், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அலீயை மிக அதிகமாக உயர்த்துகின்றனர் ஷியாக்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பாராட்டுகின்ற விதம், வர்ணிக்கின்ற வர்ணனைகள் அனைத்தும், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்று பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளன.

அதுபோல் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி)யிடம், அலீயைப் பற்றித் தெரிவித்ததாக இந்நூலில் கூறப்படும் கருத்துக்கள், தம்மை விட அலீ உயர்ந்தவர், அலீ கோபப்பட்டால் அல்லாஹ் கோபப்படுவான்; அவர் கோட்டையை உலுக்கினால் அல்லாஹ் வானத்தை உலுக்குவான்; அந்த அளவுக்கு அலீ உயர்ந்தவர் என்று குறிப்பிடுவது போல் அமைந்திருக்கின்றன.

இப்படித் தான் இந்த ஷியா ஷைத்தான் அந்தச் செய்திகளில் எழுதி வைத்துள்ளான்.

ஷியாக்களின் வேலையே அலீயை உயர்த்தி, நபிமார்கள், மலக்குமார்கள் அத்தனை பேரையும், நபி (ஸல்) அவர்கள் உட்பட அத்தனை பேரையும் மட்டம் தட்டுவது தான்.

வெளிப்படையில் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்களை உயர்த்துவது போல் தோன்றும். ஆனால் உள்ளுக்குள் தாக்குவது தான் இவர்களது வேலை.

இது தொடர்பாக நிஃமத்துல்லாஹ் அல்ஜஸாயிரி என்பவன் கூறுவதைக் கேளுங்கள்.

தலைமுறை தலைமுறையாய் தொடரும் ஹதீஸ்களின் அடிப்படையில் நம்முடைய நபி தான் மற்ற நபிமார்களை விடச் சிறந்தவர்கள் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு கிடையாது. இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அலீ, தூய்மையான (?) ஷியா இமாம்கள் ஆகியோர் நபிமார்களை விடச் சிறந்தவர்களா என்பதில் தான் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஆனால் ஷியா இமாம்களின் பாட்டனார் முஹம்மது (ஸல்) அவர்கள் விஷயத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் நிலவவில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அலீ மற்றும் இமாம்களை விடச் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உலுல் அஸ்ம் என்ற தரத்தில் உள்ள நபிமார்களைத் தவிர மற்ற நபிமார்களை விட இந்த இமாம்கள் சிறந்தவர்கள் என்று ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

உலுல் அஸ்ம் தரத்திலுள்ள நபிமார்களும் இந்த இமாம்களும் சமமானவர்கள் என்று வேறு சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பிந்திய காலத்து அறிஞர்கள் நமது இமாம்கள், உலுல் அஸ்ம் நபிமார்களை விடச் சிறந்தவர்கள் என்ற கருத்துக் கொண்டிருக்கின்றனர். அது தான் சரியான கருத்தாகும்.

நூல்: ஜஸாயிர் எழுதிய அல் அன்வாருன் நுஃமானியா, பக்கம்: 128

நிஃமத்துல்லாஹ் (லஃனத்துல்லாஹ்) ஜஸாயிர் என்பவன், நபிமார்களை விடத் தங்கள் இமாம்கள் சிறந்தவர்கள் என்று கூறத் துணிந்திருக்கின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு விதிவிலக்குக் கொடுத்து அவர்களுக்குக் கண்ணியம் சேர்த்திருக்கிறான் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல! இந்த விதிவிலக்கை அவன் வேண்டா வெறுப்பாகவே கொடுத்திருக்கிறான். இதை முல்லா முஹம்மது பாக்கிர் என்பவன் எழுதிய பிஹாருல் அன்வார் என்ற நூலில் இடம் பெறும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் அலீயை நோக்கி, அலீயே! எனக்குக் கிடைக்காததெல்லாம் உனக்குக் கிடைத்திருக்கிறது. ஃபாத்திமா உன் மனைவி! ஃபாத்திமாவைப் போன்று எனக்கு மனைவி இல்லை. உனக்கு ஃபாத்திமா மூலம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவ்விருவர் போல் எனக்குப் பிள்ளைகள் இல்லை. கதீஜா உன் மனைவியின் தாயார். எனக்கு அவரைப் போன்று அன்பான மாமியார் இல்லை. நான் உனது அன்பாளன். உன் போன்ற அன்பாளன் எனக்கு இல்லை. உறவு முறையில் ஜஃபர் உன் சகோதரர். ஜஃபர் போன்ற சகோதரர் எனக்கு இல்லை. மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வரும் ஹாஷிமி கிளையைச் சார்ந்தவருமான ஃபாத்திமா உனது தாயார். (அலீயின் தாயார் பெயர் ஃபாத்திமா) அவர் போன்ற தாயாரை நான் அடைவது எப்போது? என்று கூறினார்கள்.

நூல்: பிஹாருல் அன்வார், பக்கம்: 129

பொய்யன் முஹம்மது பாக்கிர் அளக்கும் இந்தச் சம்பவம் தெரிவிப்பது என்ன?

நபி (ஸல்) அவர்களை விட அலீ பன்மடங்கு உயர்ந்தவர்; பல்வேறு கிடைப்பதற்கரிய பாக்கியங்களைப் பெற்றவர் என்று சித்தரித்து நபி (ஸல்) அவர்களை மட்டம் தட்டுகின்றான். அவர்களது தரத்தை அலீயின் தரத்திற்குக் கீழே தாழ்த்தியிருக்கிறான். எனவே ஜஸாயிர் என்பவன், நபிமார்களை விட ஷியா இமாம்கள் உயர்ந்தவர்கள் என்பதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு விதிவிலக்குக் கொடுத்திருப்பது வெறும் வேஷம் தான்.

முஃபீத் என்ற ஷியாக்களின் தலைவன் தெரிவிக்கின்றான்.

(ஹுதைபாவே!) என்னிடம் குறுக்கிட்ட மனிதரை நீ பார்த்தாயா? என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் ஒரு வானவர். இந்த நேரத்திற்கு முன்னர் பூமியில் அவர் இறங்கியதே கிடையாது. அலீக்கு ஸலாம் சொல்ல வேண்டும் என்று கண்ணியமிக்க அல்லாஹ்விடம் அவர் அனுமதி கேட்டார். அல்லாஹ் அவருக்கு அனுமதி கொடுத்ததும் அலீக்கு வந்து ஸலாம் சொன்னார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா

நூல்: முஃபீத் எழுதிய அல் ஆமாலி

இந்த மலக்கு நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்ல வருகிறார் என்றால் அது நபி (ஸல்) அவர்களுக்குரிய மரியாதை எனலாம். ஆனால் அவர் அலீக்கு ஸலாம் சொல்ல வருகின்றார். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்து ஹுதைபாவிடம் தெரிவிக்கின்றார்கள் என்றால், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்த பதவியில் இருப்பது போலவும், நபியவர்கள் அலீக்கு தனிச் செயலாளர் போலவும் இவன் சித்தரிக்கின்றான்.

நபி (ஸல்) அவர்களை இந்த முஃபீத் என்ற ஷியா ஷைத்தான் எந்தத் தரத்தில் கொண்டு நிறுத்துகிறான் என்று பாருங்கள். எந்தத் தகுதியை அவர்களுக்குக் கொடுக்கிறான் என்று பாருங்கள்.

ஷியா என்பது பொய் என்ற புற்று நோயைப் பின்னணியாகக் கொண்டது. அந்தப் புற்று நோய் எப்படிப் பன்மடங்காக விரிந்து வேகமாகப் பரவுகின்றது என்று பார்ப்போம்.

தமது தோழர்களின் கூட்டத்தில் அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி அலீ (ரலி) வந்த போது, ஆதமின் படைப்பையும், நூஹின் ஞானத்தையும், இப்ராஹீமின் சகிப்புத் தன்மையையும் காண விரும்புவோர் அலீயைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு தன் தந்தை வழியாக அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார். இதை முஃபீத், தனது ஆமாலி நூலில் 132ம் பக்கத்தில் குறிப்பிடுகின்றான். ஷியா ஷைத்தான்களுக்கு அலீயைப் புகழ்ந்து அழகு பார்க்க வேண்டும். அந்தப் புகழை நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அரங்கேற்றுகின்றனர்.

தன்னை விட அலீ தான் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களே சொல்வது போன்ற ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -13)

ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்

அபூஉஸாமா

ஓங்கிய வாள்! தாங்கிய ஜிப்ரீல்!

கைபர் போரின் போது அலீ (ரலி) அவர்கள் கண் வலியினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன் என்றோ, அத்தகைய ஒரு மனிதர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார் என்றோ அல்லது, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன் என்றோ சொல்லி விட்டு, அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான் என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், இதோ, அலீ அவர்கள்! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான். அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ (ரலி)

நூல்: புகாரி 2975

அப்போரில் அலீ (ரலி) அவர்கள் யூதர்களின் மன்னன் மர்ஹப் என்பவனைக் கொலை செய்து வீழ்த்தி விடுகிறார்கள். (முஸ்லிம் 3696)

இது தான் கைபர் போரில் நடந்த உண்மை நிகழ்வு! ஆனால் இந்த நிகழ்வுக்கு ஷியாக்கள் எப்படி தெய்வீகச் சாயம் பூசுகின்றார்கள் என்று பாருங்கள்!

கைபர் போர் அலீ (ரலி) கையினால் வெற்றி கண்டது. அப்போரில் அவர் யூதர்களின் மன்னன் மர்ஹபைக் கொன்றதும் நபி (ஸல்) அவர்களிடம் நற்செய்தி கூற ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நற்செய்தி தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் வினவிய போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அளித்த பதில் இதோ:

அல்லாஹ்வின் தூதரே! மர்ஹபாவைக் கொல்வதற்கு அலீ (ரலி) வாளை உயர்த்திய மாத்திரத்திலேயே அலீயின் கையை அந்தரத்தில் பிடித்து வைக்கும்படி இஸ்ராபீல், மீகாயீல் ஆகிய இரு மலக்குகளுக்கு அல்லாஹ் உத்தரவிட்டு விட்டான். ஏனெனில் அவர் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி வாளை வீசினால் பூமியின் அடுக்குகளுக்குள் பாய்ந்து பூமி தலைகீழாகப் புரண்டு விடும். அதனால் தான் அவ்விரு மலக்குகளுக்கும் இப்படி உத்தரவிட்டு விட்டான்.

அத்துடன், ஜிப்ரயீலே! பூமியின் அதள பாதாளத்திற்கு விரைக! வாளின் வீச்சு பூமியின் பாதாளத்தில் பாய்ந்து விடாமல் தடுத்து நிறுத்துக! என்று அல்லாஹ் எனக்கும் ஓர் உத்தரவு போட்டான். உடனே நான் வந்து அலீயின் வாளைத் தடுத்து நிறுத்திப் பிடித்துக் கொண்டிருந்தேன்.

நான் ஏற்கனவே இதற்கு முன்பு லூத் நபியின் சமுதாயம் வாழ்ந்த மதாயின் நகரங்களை என் இறக்கைகளில் ஒன்றால் தூக்கி வைத்திருந்தேன். அவை ஏழு நகரங்கள். அந்நகரங்களில் உள்ள கோட்டைகளின் அடித்தளங்கள் ஏழாவது பூமி வரை பிடிமானம் கொண்டிருந்தன. அவற்றை ஸஹர் நேரம் வரை தாங்கிப் பிடித்திருந்தேன். அல்லாஹ் உத்தரவிட்டதும் அந்நகரங்களை தலைகீழாகப் புரட்டினேன். ஆனால் அவை எனக்கு அறவே பாரமாகத் தெரியவே இல்லை. அலீயின் வாளோ எனக்கு மிகவும் பாரமாக இருந்தது.

இது தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் தெரிவித்த விளக்கத்தின் சாராம்சமாகும்.

இவ்வாறு புர்ஸீ அறிவிப்பதாக ஜஸாயிதி கூறுகின்றார்.

நூல்: அல் அன்வாருன் நுஃமானியா

ஸஃபிய்யா (ரலி) அவர்களின் முகத்தில் காயத் தழும்பு இருந்தது. (ஸஃபிய்யா அவர்களை இந்தப் போருக்குப் பின்னர் தான் நபியவர்கள் திருமணம் முடித்தார்கள்) அதை நபி (ஸல்) அவர்கள் விசாரித்த போது ஸஃபிய்யா (ரலி) தெரிவித்ததாவது:

கைபர் கோட்டையை அலீ கைப்பற்ற வந்த போது அது அவருக்கு மிகச் சிரமமானது. அதனால் அவர் கோட்டையை ஓர் உலுக்கு உலுக்கினார். கோட்டை மேல் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்து விட்டனர். கட்டில் மீது அமர்ந்திருந்த நான் அவர்கள் மீது விழுந்தேன். அப்போது கட்டில் என் மீது விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டு விட்டது.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்:

ஸஃபிய்யாவே! அலீ கோபப்பட்டு கோட்டையை உலுக்கியதும், அலீயின் கோபத்தைக் கண்டு அல்லாஹ்வும் கோபப்பட்டு வானங்களை ஓர் உலுக்கு உலுக்கினான். வானங்கள் அனைத்தும் குலுங்கின. மலக்குகள் பயந்து முகங்குப்புற விழுந்து விட்டனர்.

அலீயின் தெய்வீகத் துணிச்சலுக்கு இந்தச் சம்பவம் போதுமானது.

இரவு நேரத்தில் கைபர் கோட்டையின் கதவை அடைப்பதற்கு மட்டும் நாற்பது பேர் தேவைப்பட்டனர். அலீ கோட்டைக்குள் நுழைந்த போது அதிகத் தாக்குதல் காரணமாக கேடயம் அவரது கையிலிருந்து பறந்து விட்டது. உடனே கோட்டையின் கதவை அவர் கழற்றி விட்டார். அது அவருடைய கையில் கேடயமாகத் திகழ்ந்தது. கடைசியில் அல்லாஹ் கைபர் கோட்டையை அலீ வெற்றி கொள்ளச் செய்தான்.

நூல்: அல் அன்வாருன் நுஃமானியா

புர்ஸீ என்ற இந்தப் புறம்போக்கு, ஜிப்ரயீல் மீகாயீலை எப்படி மட்டம் தட்டி, அலீயை உயர்த்துகின்றார் என்று பாருங்கள்.

(அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர்.

அல்குர்ஆன் 81:20

ஜிப்ரயீலின் வலிமையை அல்லாஹ் சிலாகித்து, சிறப்பித்துச் சொல்கிறான். இந்த ஷியா ஷைத்தான்கள் ஜிப்ரயீலை விட அலீ வலிமையானவர் என்று குறிப்பிடுகின்றனர்.

ஒரு வாள் என்பது இரண்டு அல்லது மூன்று அடி நீளமிருக்கும். இந்த வாள் பூமியில் புகுந்து அதள பாதாளத்தைப் புரட்டி விடுமாம். புரூஸி சொல்கின்ற இந்தப் போலிக் கதையில் புராணங்கள் தோற்று விடும்.

இந்த மூன்றடி வாள் ஜிப்ரயீலின் இறக்கையில் பாரமாக இருக்கின்றது.

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 35:1

மலக்குகளின் இறக்கைகளைப் பற்றி அல்லாஹ் பெருமையாகச் சொல்கின்றான் என்றால் அந்த இறக்கைகளுக்கு ஒரு பிரம்மாண்டம் இருப்பதால் தான்.

இதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸிலும் பார்க்கலாம்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அப்படி (நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை) என்றால், பிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல் அல்லது அதை விடச் சமீபமாக இருந்தது என்னும் (53:8,9) இறை வசனம் எங்கே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது (குர்ஆனில் அவர் நெருங்கி அருகே வந்தார் என்பதில் அவர் என்பது) ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கின்றது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள். இந்த முறை அவர்கள் வந்தது அவர்களுடைய உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். அதனால் தான் அவர் அடிவானத்தையே அடைத்துக் கொண்டார் என்று பதிலத்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: புகாரி 3235

அடிவானத்தை அடைத்து நிற்கின்ற, அகன்ற, அற்புத இறக்கைகளுக்கு அலீயின் வாள் கனக்கிறதாம். ஜிப்ரயீலுக்கு அது வலிக்கிறதாம். பொய்யன் புரூஸி எப்படிக் காதில் பூச்சுற்றுகின்றார் என்று பாருங்கள்.

மனிதனால் ஒரு பேரீச்ச மரத்தைக் கூட தன்னந்தனியாகக் கழற்ற முடியாது. இது தான் உண்மை! யதார்த்தம்! ஆனால் இந்த ஷியாக்களோ, கோட்டையையே அலீ உலுக்கினாராம். அதனால் கோட்டை குலுங்கியதாம். இதனைத் தொடர்ந்து அல்லாஹ்வும் வானத்தை உலுக்கினானாம். எப்படி நா கூசாமல் புளுகித் தள்ளுகிறார்கள் என்று பாருங்கள்.

இவ்விரு பொய் சம்பவங்களின் மூலம் புருஸீ நிலை நிறுத்த முயல்வது, அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வத் தன்மை, தெய்வீக சக்தி இருக்கின்றது என்பதைத் தான்.

இந்து மதப் புராணங்களில் வரும் தெய்வீகக் கோட்பாட்டை, மனிதனைக் கடவுளாக்கும் கோட்பாட்டை அலீயின் மீது திணித்து அவரைக் கடவுளாக்குகின்றனர்.

இது  வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? (அல்குர்ஆன் 9:30)

தூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்?


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -12)

நபிமார்களை இழிவுபடுத்துதல்

அபூஉஸாமா


அல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பித்து, அவனது கண்ணியத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திய ஷியாக்கள், மலக்குகளின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதையும், அவர்களையும் மட்டம் தட்டி எழுதியிருப்பதையும் கண்டோம்.

அல்லாஹ்விடமும் அவனது மலக்குகளிடமுமே விளையாட்டுக் காட்டும் இந்த ஷியா எனும் இறை மறுப்பாளர்கள் அவனது தூதர்களிடம் விளையாட்டுக் காட்டாமல் இருப்பார்களா? நிச்சயம் காட்டுவார்கள். அல்லாஹ்வின் தூதர்களிடம் அவர்கள் காட்டியிருக்கும் விளையாட்டை, விஷமிக்க சேட்டைகளை நாம் இங்கே பார்ப்போம்.

அல்லாஹ் எனது விலாயத்தை (இறை நேசப் பதவியை) வானத்தில் உள்ளவர்களிடமும் (மலக்குகள்), பூமியில் உள்ளவர்களிடமும் காண்பித்தான். அதைச் சிலர் ஒப்புக் கொண்டனர்; சிலர் மறுத்தனர். யூனுஸ் நபி அதை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். அதனால் அவர் அதை ஒப்புக் கொள்கின்ற வரை அவரை அல்லாஹ் மீன் வயிற்றில் சிறை வைத்து விட்டான்.

நூல்: பஸாயிருத் தரஜாத்

ஷியாக்களின் திமிரை, தீவிர இறை மறுப்பை இங்கே தெளிவாகக் காணலாம்.

இறைக் கோபமும் சிறை வாசமும்

அல்லாஹ், தனது தூதர் யூனுஸ் அவர்களை எதற்காக மீன் வயிற்றில் சிறை வைத்தான்?

அதைத் திருக்குர்ஆனிலிருந்து பார்ப்போம்.

எல்லா இறைத் தூதர்களையும் போலவே யூனுஸ் நபி தமது சமுதாயத்தாரிடம் சத்தியத்தைப் போதிக்கிறார்கள். மக்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே அந்தச் சமுதாயத்தின் மீது வேதனை நிச்சயமானது. இறை வேதனை வரும் போது இறைத் தூதர்கள் அந்த ஊரை விட்டும் வெளியேறி விடுவர். அந்த அடிப்படையில் யூனுஸ் நபியும் வெளியேறி விடுகின்றார்.

ஆனால் அந்தச் சமுதாயத்தினர் வேதனை வருமுன் திருந்தி விட்டனர். உலக வரலாற்றில் வேதனை வரு முன் இவ்வாறு திருந்திய சமுதாயம் யூனுஸ் நபியின் சமுதாயம் மட்டும் தான் என்று சொல்ல வேண்டும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் வெகுவாகப் பாராட்டிச் சொல்கிறான்.

(கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.

அல்குர்ஆன் 10:98

தமது பிரச்சாரத்தை ஏற்காத மக்கள் அழிந்து போயிருப்பார்கள் என்று எதிர்பார்த்து வந்த யூனுஸ் நபிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. வேரறுந்த மரங்களாக வீழ்ந்து கிடப்பார்கள் என்று எண்ணியிருந்த யூனுஸ் நபியின் கண் முன்னால் சீராக, சிறந்த மக்களாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீதே கோபம் கொண்டார்கள்.

அதனால் அங்கிருந்து வெளியேறினார்கள். கடலை நோக்கிச் சென்று கப்பலில் பயணமாகின்றார்கள். இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.

யூனுஸ் தூதர்களில் ஒருவர். நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது, அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார். அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம். அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம். அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு வசதிகளை அளித்தோம்.

அல்குர்ஆன் 37:139-148

தன்னிடமே கோபம் கொண்டு சென்ற யூனுஸ் மீது அல்லாஹ் கொண்ட கோபத்தைப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான்.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி பெறமாட்டோம்' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

அல்குர்ஆன் 21:87. 88

யூனுஸ் நபி அனுபவித்த சிறைவாசம், மேன்மையும் மேலாண்மையும் மிக்க அல்லாஹ்வின் மீது அவர் கொண்ட கோபத்தினால் தான் என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது. ஆனால் இந்த ஷியா விஷமோ அலீயின் விலாயத்தை யூனுஸ் நபி ஏற்க மறுத்ததால் தான் என்று கூறுகின்றது. இது அப்பட்டமான இறை மறுப்பில்லையா?

இது ஒரு புறம் என்றால், இவ்வாறு கூறுவதன் மூலம் யூனுஸ் நபியை விட அலீ (ரலி) அவர்களை உயர்த்திக் காட்டி இறை மறுப்பின் உச்சக்கட்டத்திற்குச் செல்கிறது ஷியாயிஸம்.

தூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்?

அலீ (ரலி) அவர்களை இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்துவதுடன் இவர்கள் நிற்கவில்லை. தங்களது பன்னிரெண்டு இமாம்களையும் இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்தி மகிழ்கின்றார்கள்.

யூசுப் தம்மார் வழியாக கலீனீ அறிவிப்பதாவது:

நாங்கள் அபூஅப்துல்லாஹ் உடன் ஓர் அறையில் ஷியா ஜமாஅத்தினர் சகிதமாக அமர்ந்திருந்தோம். அப்போது அவர், "ஓர் உளவாளி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார். உடனே நாங்கள் வலப் பக்கமும், இடப் பக்கமும் திரும்பிப் பார்த்து விட்டு, "உளவாளி யாரும் இல்லையே!'' என்று சொன்னோம். அதற்கு அவர், "கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கட்டமைப்பின் நாயன் மீதுஆணையாக! நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன். இவ்விருவருக்கும் தெரியாதவற்றை அவர்களிடம் தெரிவித்திருப்பேன். ஏனெனில் மூஸாவும், கிழ்ரும் நடந்து முடிந்தவை பற்றிய ஞானம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தனர். அடுத்து நடப்பவை, கியாமத் நாள் வரை நடக்கவிருப்பவை பற்றிய ஞானம் அவ்விருவருக்கும் வழங்கப் படவில்லை'' என்று பதிலளித்தார்.

கலீனீ மீண்டும் அறிவிப்பதாவது:

"வானங்கள், பூமியில் உள்ளவற்றை நான் நன்கு அறிகிறேன். சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் நான் நன்கு அறிகிறேன். நடந்ததையும், நடக்கவிருப்பதையும் நான் நன்கு அறிகிறேன்'' என்று அப்துல்லாஹ் கூறினார்.

நூல்: அல்காஃபி ஃபில் உசூல்

பாகம்: 1, பாடம்: நடந்தவற்றை அறிகின்ற இமாம்கள்

"நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான்தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன்'' என்று ஷியா இமாம் கூறுகின்றார். இதிலிருந்து ஷியாக்களின் திமிர்த்தனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

யூனுஸ் நபியை விட அலீ உயர்ந்தவர் என்று கூறிய ஷியாக்கள், ஒரு படி மேலே சென்று மூஸா, கிழ்ர் ஆகியோரை விட தங்கள் இமாம்கள் மேலானவர்கள் என்று தூக்கி நிறுத்துகின்றார்கள்.

இங்கு இவர்களது நெஞ்சழுத்தத்தையும், இறை மறுப்பின் ஆழத்தையும் நாம் உணரலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக மிகத் தன்னடக்கத்துடன், தம்மை மூஸாவுடன் மட்டுமல்ல, யூனுஸ் நபியை விடவும் உயர்த்தக் கூடாது என்று கட்டளையிடுகின்றார்கள்.

யூனுஸ் நபி அல்லாஹ்வின் முடிவில் கோபம் கொண்டதால், அவரைப் போன்று ஆகி விடாதீர் என்று முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்!

அல்குர்ஆன் 68:48

அல்லாஹ்வின் மீது கோபம் கொண்டது யூனுஸ் நபிக்கு ஒரு குறை! இந்தக் குறை அவர்களுக்கு ஏற்பட்டதால் மக்கள் அவரைக் குறைவாக எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும், இதை வைத்துக் கொண்டு தம்மை யூனுஸ் நபியை விட உயர்த்தி விடக் கூடாது என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் இந்த முன்னெச்சரிக்கையைவிடுக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3415, முஸ்லிம் 4376

இறைத் தூதர்களுக்கு இடையில் ஏற்றத் தாழ்வு காட்டுவதை கடுமையாகக் கண்டிக்கும் நபி (ஸல்) அவர்கள், மூஸா நபியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் மரியாதையையும் மாண்பையும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மறுமை நாளில் அனைவரும் மூர்ச்சையாகி எழும் போது மூஸா நபியவர்கள் அர்ஷைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.

இப்படிப்பட்ட மூஸா நபியவர்களைத் தான் இந்த ஷியா விஷக் கிருமிகள், தங்கள் பன்னிரெண்டு இமாம்களை விட உயர்த்திக் கூறுகின்றார்கள்.

ஐம்பது நேரத் தொழுகைகளை ஐந்து நேரமாகக் குறைப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் மூஸா (அலை) அவர்கள். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது போல் இந்த இறை மறுப்பாளர்களுக்கு எங்கே மூஸா நபியின் அருமை புரியப் போகின்றது.

இவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா மூஸா நபியவர்களால் இந்தச் சமுதாயத்திற்கு விளைந்த அருட்கொடை விளங்கும்? இவர்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதால் இவர்களுக்கு இது விளங்கப் போவதில்லை.

நபி (ஸல்) அவர்கள் யூனுஸ் நபியை விடவும் தம்மை உயர்த்தாதீர்கள் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஷியா பாவிகளோ இந்தக் கட்டளையைப் புறந்தள்ளிவிட்டு அலீ (ரலி) அவர்களை யூனுஸ் நபியை விடவும் உயர்த்துகின்றார்கள். தங்கள் இமாம்களை மூஸா, கிழ்ரை விடவும் உயர்த்துகின்றார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் முஹம்மது (ஸல்) அவர்களை விடவும் அலீயை உயர்த்துகின்றார்கள்.

அதை இப்போது பார்ப்போம்.

கடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா?


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -11)

கடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா

அபூஉஸாமா

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் 7:54

அர்ஷ் என்பது அல்லாஹ்வின் ஆசனமாகும். இதை மேற்கண்ட வசனத்திலும், 9:129, 10:3, 13:2, 17:42, 21:22, 23:86, 23:116, 25:59, 27:26, 32:4, 39:75, 40:7, 40:15, 43:82, 57:4, 81:20 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இதில் 9:129, 23:86 ஆகிய வசனங்களில் மகத்தான அர்ஷ் என்றும், 23:116 வசனத்தில் கண்ணியமிக்க அர்ஷ் என்றும், 17:42, 81:20 ஆகிய வசனங்களில் அர்ஷின் நாயன் என்று அர்ஷுடன் தன்னை இணைத்தும் வல்ல அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இப்படிப்பட்ட அர்ஷைத் தான் பாசியும், தூசியும் படிந்த பாஸி, தனக்குக் கட்டுப்பட்டது என்று கூறுகிறார். இதிலிருந்து இவரது அகந்தையையும், ஆணவத்தையும் தெரிந்துகொள்ளலாம். இந்த அகந்தையும், ஆணவமும் யூத, ஷியாயிஸத்தின் பிறவிக் குணங்களாகும். இந்தப் பாஸியும் அந்த வகையறாக்களில் உள்ளவர் என்பதால் அவர் அந்தக் குணத்தைப் பிரதிபலிக்கின்றார்.

அல்லாஹ் தனது குர்ஆனில் அர்ஷுக்கு வழங்கும் மரியாதையை மேலே குறிப்பிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அர்ஷுக்கு அளிக்கும் மரியாதையைப் பாருங்கள்.

"அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது. அவர் இறை வழியில் அறப்போர் புரிந்தாலும் சரி அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?'' என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், "சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ், தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும், பூமிக்கும் இடையில் உள்ளது போன்ற தொலைவு உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால் ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள். ஏனெனில் அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்'' என்றுகூறினார்கள்.

(அறிவிப்பாளரான) யஹ்யா இப்னு சாலிஹ் கூறினார்:

மேலும், "அதற்கு மேலே கருணையாளனின் அர்ஷு - சிம்மாசனம் இருக்கிறது. இன்னும் அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன'' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு ஃபுலை (ரலி) தம் தந்தையிடமிருந்து, "அதற்கு மேலே ரஹ்மானின் அர்ஷு இருக்கிறது'' என்று அவர்கள் கூறினார்கள் என(சந்தேகமின்றி) அறிவித்தார்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2790

இப்படிப்பட்ட ஃபிர்தவ்ஸ் என்ற சுவனத்திற்கு மேல் அர்ஷ் உள்ளது. அல்லாஹ்வின் அர்ஷ் உள்ள காரணத்தினாலேயே அந்த பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை நீங்கள் கேளுங்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் அர்ஷின் மகத்துவத்தை உணர்த்துகிறார்கள். அத்தகைய மாண்புமிகு அர்ஷ் தனக்குக் கட்டுப்படுகின்றது என்று பாஸி விஷம் கக்குகிறார்.

சுவனம் என்பது ஒரு முஃமினுக்குக் கிடைக்கும் மாபெரும் பாக்கியமாகும். அந்தச்சுவனத்திலும் அர்ஷுக்குக் கீழே உள்ள சுவனத்தில் இடம் கிடைப்பது மாபெரும்மகத்தான அருட் கொடையாகும். இப்படி அர்ஷுக்குக் கீழ் இடம் கிடைப்பது பாக்கியம் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல இந்த ஃபாஸியோ, மகத்தான அர்ஷ் தனக்குக் கீழ் உள்ளது என்று கூறத் துணிகிறார் என்றால் இவர் நிச்சயமாக யூத, ஷியாக்களின் மறு பிறவி தான் என்பதில் கடுகளவு கூட சந்தேகமில்லை.

நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்த போது யூதர் ஒருவர் வந்து "அபுல்காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்து விட்டார்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் "அன்சாரிகளில் ஒருவர்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "அவரைக் கூப்பிடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன் "இவரை நீர் அடித்தீரா?'' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி "இவர் கடை வீதியில் "மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததைச் செவியுற்றேன். உடனே நான் "தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்'' என்றுகூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் "நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில் மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது நான் மூஸாவை அர்ஷின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். "மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா? அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்ட போது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதும்; இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா? என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 2412

இறைத் தூதர்களில் மிக முக்கியமான மாபெரும் இறைத் தூதர் மூஸா (அலை) அவர்கள், மறுமை நாளில் அர்ஷின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அர்ஷை, அனாமதேய ஃபாஸி தனக்குக் கீழ் இருப்பதாகக் கூறி அவமரியாதை செய்கிறார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது முன்னங்கால் (இறைச்சி) ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் வாயால் பற்றிக் கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள்.

பிறகு அவர்கள் கூறியதாவது: "நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தொயுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி) "நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதையும் உணர்ந்து உங்களுக்கு உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்பவரைப் பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள். மக்கள் சிலர் "உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)'' என்று கூறுவார்கள். எனவே மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று "ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும் படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரைசெய்ய மாட்டீர்களா? நாங்கள் இருக்கும் நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் நிலையையும் நீங்கள் பார்க்க வில்லையா?'' என்று கேட்பார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள் "(நான் செய்த தவறின் காரணத்தால்) என் இறைவன் என் மீது கோபமுற்றான். அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபித்ததில்லை. அதற்குப் பிறகும் அதைப் போல் அவன் கோபம் கொள்ள மாட்டான். மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (எனவே!) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள்.

உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று "நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (சட்டங்களுடன் அனுப்பப்பட்ட) முதல் இறைத் தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் "நன்றி செலுத்தும் அடியார்'' என்று குறிப்பிட்டுள்ளான். நாங்கள் இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள நிலையை நீங்கள் காணவில்லையா? எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள்.

அதற்கு அவர்கள் "என் இறைவன் இன்று என் மீது கோபமுற்றுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபித்ததில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் கோபம் கொள்ள மாட்டான். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்'' என்று கூறுவார்.

மக்கள் என்னிடம் வருவார்கள். நான் அர்ஷுக்குக் கீழே ஸஜ்தாச் செய்வேன். அப்போது "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந்துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்'' என்று சொல்லப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3340

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அர்ஷுக்குக் கீழ் ஸஜ்தாச் செய்வதன் மூலம் அர்ஷின் மகிமையை நமக்கு உணர்த்துகிறார்கள். ஆனால் ஷாதுலிய்யா கலீபாவான ஃபாஸியோ, அர்ஷ் தனக்குக் கீழ் தான் உள்ளது என்று கூறுவதன் மூலம் இறைத் தூதர் (ஸல்) அவர்களையும் சேர்த்தே இழிவுபடுத்துகிறார்.

நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது "லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்'' என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: கண்ணியம் மிக்கவனும் ,பொறுமை மிக்கவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அர்ஷின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6345

சோதனையான கட்டத்தின் போது நபி (ஸல்) அவர்கள் ஓதுகின்ற இந்த துஆவில் அர்ஷின் நாயன் என்று கூறுகின்றார்கள். வானங்கள் மற்றும் பூமியின் அதிபதி என்பதற்குச் சமமான மற்றொரு புகழ் வார்த்தையாக அர்ஷின் நாயன் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அந்த அளவுக்குச் சிறப்பு வாய்ந்த மகத்துவமிக்க அர்ஷ், ஷாதுலிய்யா தரீக்காவின் பாதிரி ஃபாஸியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால் அல்லாஹ்வே அவரது கட்டுப்பாட்டில் உள்ளவன் என்றாகி விடாதா?

அல்லாஹ்வின் அந்தஸ்தைக் குறைத்துக் கூறுவதன் மூலம், தான் ஒரு யூத, ஷியா வம்சாவளி, வழித்தோன்றல் என்று தெளிவாக உணர்த்துகின்றார். இவரையும் ஒரு கூட்டம் வலியுல்லாஹ் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றது என்றால் இவர்கள் எப்படி சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்க முடியும்? நிச்சயமாக இவர்களும் ஷியாக்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படும் அர்ஷின் அந்தஸ்து மற்றும் மரியாதையைத் தெரிந்த எந்த ஓர் இறை விசுவாசியும் ஃபாஸியின் திமிர் பிடித்த வார்த்தைகளை ஜீரணிக்க மாட்டான். இந்தக் கருத்துக்கள் அடங்கிய ஷாதுலிய்யா பைத்தை நடுச்சந்தியில் வைத்துக் கொளுத்தாமல் விட மட்டான். அவ்வளவு சாபக்கேடான கவிதை வரிகளை ஷாதுலிய்யா தரீக்காவின் தனி வேதமான மவ்லிது தெரிவிக்கின்றது.

ஷாதுலிய்யாவின் பலான ஆசாமி ஃபாஸி இத்துடன் நிற்கவில்லை. அர்ஷ் தனக்குக் கட்டுப்படுகின்றது என்று மட்டும் சொல்லி நிறுத்தி விடவில்லை. அதன் அர்த்தத்தை அடுத்த வரியிலேயே போட்டு உடைக்கின்றார்.

ஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.

அர்ஷ் தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஏன் சொல்கிறார்? என்று நாம் திகைக்கவேண்டிய அவசியமே இல்லை. அர்ஷின் மீது இவர் ஏறி அமர்ந்து விட்டால் அர்ஷ்தானாகவே இவரது கட்டுப்பாட்டில் வந்து விடுகின்றது அல்லவா?

அதாவது இவர் அல்லாஹ்வுடன் இரண்டறக் கலந்து விடுகின்றார். அதனால் தான் ஒளியும், ஒளிகளும் நான் தான் என்று கூறுகின்றார். அல்லாஹ்வும் இவரும் சங்கமமாகி விட்டால் அர்ஷ் இவரது கட்டுப்பாட்டில் வந்து விடுமல்லவா? அதைத் தான் இங்கு கூறுகிறார். அல்லாஹ் தூய்மையானவன். இந்த இணை வைப்புக் கவிதையிலிருந்து நம்மைக் காப்பானாக!

இந்த அபத்தத்தையும் அபாண்டத்தையும் நாம் எப்படிச் சகித்துக் கொள்வது என்றே தெரியவில்லை. எவ்வளவு பெரிய துணிச்சல் என்று பாருங்கள்.

அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமை ஒரு மாடம். அதில் ஒரு விளக்கு உள்ளது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் உள்ளது. அக்கண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் (ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று. மேல் திசையைச் சேர்ந்ததுமன்று. நெருப்பு படா விட்டாலும் அதன் எண்ணையும் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழி காட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 24:35

இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னை எப்படிக் கூறுகின்றானோ அது போன்றே ஃபாஸி என்ற ஷைத்தானும் கூறுவதாக ஷாதுலிய்யா பைத் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை வர்ணிக்கும் வார்த்தை வடிவங்களைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் "இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்து விடு. நீயே முற்படுத்துபவன்; பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நன்மை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை'' என்று கூறிவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1120

அல்லாஹ் தனது குர்ஆனில் எவ்வாறு தன்னைப் பற்றிக் கூறுகின்றானோ அது போன்ற வார்த்தைகளை நபி (ஸல்) அவர்களும் கூறி, மனம் ஒன்றி ஒருமைப்படுத்திக் கூறி தமது பிரார்த்தனைகளை அவன் முன் சமர்ப்பிக்கிறார்கள்.

திருக்குர்ஆனும், நபிமொழியும் அல்லாஹ்வைப் பற்றிக் கூறும் இந்த வர்ணனைகளை ஃபாஸி என்ற ஷாதுலிய்யா கலீபா அப்படியே தனக்குப் பொருத்திப் பார்க்கிறார்.

"அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்'' என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

அல்குர்ஆன் 21:29

தன்னையே கடவுள் என்று கூறும் இந்த சாயிபாபாக்களுக்கு அல்லாஹ் வழங்கும் பரிசு நரகம் தான் என்று இந்த வசனம் தெளிவாக அறிவிக்கின்றது.

இப்படிப்பட்ட இந்த வார்த்தைகளைத் துணிந்து யார் சொல்வார்கள்? யூத வர்க்கம் தான்.

"அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப் பார்க்கின்றன. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை. வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

அல்குர்ஆன் 19:88-93

யூதர்களின் ஏகபோக வாரிசுகளான ஷியாக்களும் அல்லாஹ்வின் தன்மைகளை மனிதர்களுக்கு வழங்கி அழகு பார்ப்பவர்கள் என்பதைக் கடந்த இதழ்களில் கண்டோம். அதைத் தான் இந்த ஷாதுலிய்யாக்கள் எதிரொலிக்கின்றனர்.

திருக்குர்ஆனின், திருத்தூதரின் கட்டளைகளை உணர்ந்தவர்கள் இது போன்ற அகம்பாவமான வார்த்தைகளை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.

அல்லாஹ்வை அவமதிப்பது, அவனுடைய இடத்தில் தன்னைக் கொண்டு வந்து நிறுத்துவது அனைத்துமே இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஷிர்க் மற்றும் குஃபர் ஆகும். இந்த இணை வைப்பையும், இறை மறுப்பையும் தான் ஷாதுலிய்யா கட்சியினர் அவ்ராதுத் தொகுப்புகளில் ஓதிக் கொண்டிருக்கின்றனர்.

ஷாதுலிய்யா பக்தர்களே! நாம் சுவனத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் இந்த அவ்ராதுத் தொகுப்புகளைத் தீயில் போட்டு விட்டு, குர்ஆன் ஹதீஸ் கூறும் தூய பாதையின் பக்கம் திரும்ப வேண்டும். இல்லையேல் நரகத் தீயில் நிரந்தரமாக வெந்து சாக வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக!