வெள்ளி, 20 நவம்பர், 2015

ரியா (மறைவான இணைவைப்பு)


ரியா என்றால் என்ன?

'ரியா" என்ற அரபிச் சொல், 'ரஆ" எனற வேர்ச் சொல்லிருந்து வருகின்றது. 'ரஆ" என்றால் 'பார்த்தான்", 'கவனித்தான்" என்று பொருள். 'ரியா" என்பதற்கு பகட்டுத்தனம், பாசாங்கு செய்தல், பாவனை, முகஸ்துதி, நயவஞ்சகம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு. மனிதர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் அல்லது மனிதர்களின் பாராட்டுக்களைப் பெறும் நோக்கில் அல்லாஹ்வை வணங்குவது அல்லது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் செயல்களில் ஈடுபடுவது என்பதே 'ரியா" எனப்படுகின்றது.

என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கி காட்டுவேன். அவர்களில் உன்னால் தோர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அனைவரையும் வழி கெடுப்பேன். (திருக்குர்ஆன் 15:39,40)

ஷைத்தான் சொல்வதாக அல்லாஹ் மேலும் கூறுகிறான்,
'நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன். பின்னர் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்" (திருக்குர்ஆன் 7:16,17)

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: '"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. ஒருவரது ஹிஜ்ரத் (துறத்தல்) உலகைக் குறிக்கோளாகக் கொண்டிருத்தல் அதையே அவர் அடைவார். அல்லது ஒரு பெண்ணைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவளை மணப்பார். ஒருவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்" இதை உமர் பின் கத்தாப் (ரலி) மேடையில் இருந்து அறிவித்தார்கள். ஆதாரம்: புகாாி (1), முஸ்லிம், அபூதாவூத்

மற்றொன்று நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்ற பின் வரும் நபிமொழியாகும்.

அல்லாஹ்வின் தூதார் நபி அவர்கள் கூறினார்கள்: 'அனுமதிக்கப்பட்டவையும், மிகத் தெளிவானவை. அனுமதிக்கப் படாதவையும் தெளிவானவை. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கிடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்திற்கும், தமது மானம், மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுவதிலிருந்து விலகி விடுகிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறாரோ அவர் வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சாிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லைகள் அவனால் தடை செய்யப்பட்டவைகளாகும். எச்சாிக்கை! உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள் அதுதான் உள்ளம்" இதை நூஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாாி (52), முஸ்லிம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கும்போது (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ் நன்மைகளையும், தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதி விட்டான். பிறகு அதனை விவாித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என எண்ணி விட்டாலே அதை செயல்படுத்தா விட்டாலும் - அவருக்காக தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால் அந்த ஒரு நன்மையை தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதை செய்யாமல் விட்டு விட்டால் அதற்காக அவருக்கு தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்கு ஒரேயொரு குற்றத்தையே எழுதுகிறான். நூல்: புகாாி (6491)

இது குறித்து ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தீய செயலைப் புரிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதன், சூழ்நிலைகளின் காரணமாக அச்செயல் செய்யாமல் விட்டு விட்டால், அவனது கணக்கில் ஒரு தீய செயல் தான் பதிவு செய்யப்படும். உதாரணமாக கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லும் திருடன் ஒருவன், வழியில் விபத்து ஒன்றில் சிக்கிக் காலை முறித்துக் கொள்கிறான். இதனால், கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவனது எண்ணம் நிறைவேறவில்லை. இத்தகையவனுக்கு கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவனது எண்ணத்தை மாற்றிக் கொண்டதற்காக நற்கூலி கிடையாது. ஆனால், கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் புறப்படும் ஒரு மனிதன், வழியில் மனம் மாறி வீடு திரும்புவானேயானால், தீமையிலிருந்து தன்னைத் தடுத்துக் கொண்டதற்காக அவனுக்கு நற்கூலி கிடைக்கும்.

தீயநோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு செயலினால், நன்மை விளைந்தாலும், அதனைச் செய்த மனிதனின் கணக்கில் தீய செயலே பதிவு செய்யப்படும். சரியான தூய்மையான எண்ணங்களைக் கொண்டிருப்பதின் அவசியத்தை திருக்குர்ஆனும் வலியுறுத்துகின்றது அல்லாஹ் கூறுகின்றான்.

வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கே உாித்தாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இது தான் நேரான மார்க்கம். (திருக்குர்ஆன் 98:5)

அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் விரும்பியதை நாம் விரும்பியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவருக்காக நரகத்தைத் தயார்படுத்துவோம். இழிந்தவராகவும் அருளுக்கு அப்பாற்பட்டவராகவும் அதில் அவர் நுழைவார். நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி அதற்காக முயற்சிப்போாின் முயற்சிக்கு, கூலி கொடுக்கப்படும். (திருக்குர்ஆன் 17:18,19)

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்குத்தான். அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் (திருக்குர்ஆன் 2:272)

ரியாவினால் ஏற்படும் அபாயங்கள்

'ரியா"வினால் ஏற்படும் அபாயங்கள் ஏராளமானவை. இதனால் தான் நபிகள் நாயகம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது தமக்குள்ள அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக, ஏனைய சீர்கேடுகளை விட ரியாவைக் குறித்தே அதிகம் கவலைப்பட்டுள்ளார்கள்.

மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள், 'நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித் தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்ட போது, அவர்கள் 'ரியா" என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

மற்றொரு நபிமொழியில் தஜ்ஜாலின் தீங்குகளை விட அதிகமாகத் தனது சமுதாயத்தினரை 'ரியா" பாதிக்குமோ என்று இறைத்தூதர் அஞ்சியிருப்பது வெளிப்படுகின்றது.

அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தொிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்). ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்காித்துக் கொள்கிறார்." என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா

இந்த நபிமொழியை நாம் அலசிப் பார்க்கும் போது, 'ரியா"வின் உண்மையான அபாயங்களை உணர முடியும். ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட காலம் முதல், இறுதித் தீர்ப்பு நாள் வரை, மனித குலம் அனுபவிக்கும் மிகப் பெரும் சீர்கேடு தஜ்ஜாலினால் ஏற்படுவது தான். நபி நூஹ் (அலை) முதல் அனைத்து இறைத் தூதர்களும் தங்கள் சமுதாயத்தவர்களிடம் இந்தப் பேரபாயம் குறித்து எச்சாித்துள்ளார்கள். தஜ்ஜாலுடைய காலத்தில் வாழும் மக்கள் அவனை விட்டு ஓடிவிட வேண்டுமென்றும், ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப் பிறகும் அவர்கள் தஜ்ஜாலின் அபாயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டுமென்றும், அண்ணல் நபிஅவர்கள் அறிவுரை வழங்கியிருக்கின்றார்கள். இருப்பினும், தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட 'ரியா" வினால் ஏற்படும் தீங்குகள் குறித்துத் தான் அதிகமாக அஞ்சுவதாக மேலே குறிப்பிட்ட தனது அமுத மொழியில் நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள்.

யாருக்கு உள்ளம் உள்ளதோ அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது. (திருக்குர்ஆன் 50:37)

ரியாவின் சில தீங்குகள்

1. ஈமானையும், தவ்ஹீதையும் பலவீனப்படுத்துகின்றது.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்குகாகவே தவிர நான் படைக்கவில்லை. (திருக்குர்ஆன் 51:56)

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும் கைதிக்கும் உணவளிப்பார்கள். 'அல்லாஹ்வின் திருப்திக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து நன்றியையோ பிரதிபலனையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை" (எனக் கூறுவார்கள்) (திருக்குர்ஆன் 76:8,9)

தொழுகை, நோன்பு போன்ற அத்தியாவசியக் கடமைகள் மட்டுமில்லாமல், தேவையுடைய மக்களுக்கு உதவிடுவதும் வணக்கம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வின் அடிப்படை வசதிகள் தங்களுக்குத் தேவைப்பட்ட போதும் கூட, அவற்றைத் தேவையுள்ளவர்களுக்கு பிரதிபலன் பாராது, வழங்க உண்மையான நம்பிக்கையாளர்கள் தயங்க மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பதாக வாக்களித்துள்ள மாபெரும் அருட்கொடைகளுடன், தங்களது உதவிகளைப் பெற்றவர்கள் காட்டும் நன்றி விசுவாசத்தை எவ்வகையிலும் ஒப்பிட முடியாது என்பதை அவர்கள் நன்குணர்ந்து இருக்கின்றார்கள்.

திருப்திப்படுத்துவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, அல்லாஹ் ஒருவனே வணங்கப்படுவதற்கும் தகுதியானவன் என்பதை உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் உணர்ந்தே செயல்படுவார்கள். இதற்கு எதிர்மறையான நயவஞ்சகர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு திருக்குர்ஆனில் விமர்சிக்கின்றான்:

தமது தொழுகையில் கவனமற்று பிறருக்குக் காட்டுவதற்காக தொழுவோர்க்குக் கேடுதான். (அவர்கள்) அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கிறார்கள். (திருக்குர்ஆன் 107:4-7)

சூரா அந்நிஸாவிலும் அல்லாஹ் நயவஞ்சகர்களைப் பின் வருமாறு வர்ணிக்கின்றான்.

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். அல்லாஹ்வைக் குறைவாகவோ நினைவு கூர்கின்றனர். (திருக்குர்ஆன் 4:142)

2. வழிகேட்டை அதிகாிக்கும்
ரியாவில் ஈடுபடும் மனிதனின் உள்ளத்தில் நோய் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த நோயை குணப்படுத்தாவிட்டால், அது மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். திருக்குர்ஆனில் வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.

அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(திருக்குர்ஆன் 2:9,10)

அண்ணல் நபி அவர்களின் தோழர்கள் காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவத்தில் நாம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் காண முடிகிறது.

ஜாபிர் இப்னு சமூரா அறிவிக்கிறார்கள்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது, கூஃபா நகரவாசிகள் சிலர் தங்களுக்கு ஆளுநராக அனுப்பப்பட்ட சஅது இப்னு அபி வக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி புகார் தொிவித்தார்கள். இந்த புகாரைப் பற்றி விசாாிக்க உமர் (ரலி) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். இருப்பினும் அவர்கள் தொடந்து உமர் (ரலி) அவர்களிடம் மென்மேலும் புகார்களைக் கூறிய வண்ணம் இருந்தார்கள். சஅத் (ரலி) அவர்களுக்கு சரியாகத் தொழக்கூடத் தொியவில்லை என்றும் கூட அவர்கள் புகார் சொன்னார்கள். இச்சூழலில் உமர் (ரலி) சஅதை அழைத்து அவர்களது தொழுகையைப் பற்றி விசாாித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் இதற்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்.

'அல்லாஹ்வின் மீது ஆணையாக, அண்ணல் நபி அவர்கள் எவ்வாறு தொழுதார்களோ அதே முறையில்தான் நான் தொழுதேன். இதில் நான் எந்த வகையிலும் குறை வைக்கவில்லை. இஷா தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளை நீட்டியும், பிந்தைய இரண்டு ரக்அத்துகளையும் சுருக்கியும் தொழுவேன்" இப்பதிலைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் 'உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்தது இதனைத் தான்" என்று பதிலளித்தார்கள்.

இதன் பிறகு மக்களிடம் நேரடியாக விசாரணை நடத்துவதற்காக பல தூதர்களை உமர் (ரலி) அவர்கள் கூபாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இத்தூதர்கள் சென்ற ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அவர்கள் மக்களிடம் சஅதைப் பற்றி விசாாித்தார்கள். அவர்கள் சென்ற ஒவ்வொரு இடத்திலும் சஅதைப் பற்றிய பாராட்டுரைகளைத் தான் மக்களிடமிருந்து கேட்க முடிந்தது. அப்ஸ் கோத்திரத்தாாின் பள்ளிவாசலுக்கு தூதர்கள் சென்ற போது உஸாமா இப்னு கத்தாதா என்ற மனிதர் எழுந்து நின்று 'உங்களுக்கு உண்மை தொிய வேண்டுமெனில் நான் சொல்வதைக் கேளுங்கள். படைகளுடன் சேர்ந்து சஅத் போர்புரிவதற்குச் செல்வதில்லை. போாில் கிடைத்த பொருட்களையும், அவர் நியாயமாக பகிர்ந்தளிப்பதில்லை" என்று கூறினார். இதனைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள் 'இறைவா! நான் உன்னிடம் இரண்டு விஷயங்களைக் கேட்கிறேன். உனது இந்த அடியார் (அதாவது உஸாமா) ஒரு பொய்யராக இருந்தால், ரியாவிற்காக, பிரபலமடைவதற்காக எழுந்து நின்றிருப்பாரேயானால், அவரது வாழ்நாளை நீடிப்பாயாக, அவரது வறுமையை அதிகாிப்பாயாக, மேலும் அவரது கண்ணியத்தைக் குலைப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்.

இதற்குப் பல ஆண்டுகள் கழித்து உஸாமாவிடம் அவரது நிலை எப்படியுள்ளது என்று வினவப்பட்டால்....

'வயது முதிர்ந்த கிழவனாக அலுப்பு தட்டியவனாக சஅதின் பிரார்த்தனையால் பாதிக்கப்பட்டவனாக இருக்கிறேன்" என்று பதிலளிக்கும் நிலையில் இருந்தார். இச்சம்பவத்தை விவாிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறும் போது, 'நான் அவரை (உஸாமாவை) ஒருமுறை பார்த்தேன். வயோதிகத்தின் காரணமாக அவரது புருவங்கள், கண் இமையில் படும் அளவிற்குத் தொங்கியிருந்தது. இருப்பினும் தெருக்களில் இளம் பெண்களைக் கடந்து செல்லும் போது அவர்களை தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நூல்: புகாாி, முஸ்லிம், அபூதாவூத்

3. நல்லருளைப் பெற்றுத்தரும் செயல்களைப் பாழ்ப்படுத்துகிறது
அல்லாஹ்விற்காக அன்றி மற்றவர்களுக்காக செய்யப்படும் செயல்கள் இறைவன் அங்கீகாிக்க மாட்டான் என்று பல அறிவிப்புகளில் அண்ணல் நபிஅவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூ உமாமா அல் பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்விற்காக என்று தூய எண்ணத்துடன், அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்" நூல்: சஹீஹ் அல்ஜாமீ, சுன்னன் நஸயீ

அல்லாஹ்விற்காக தூய நோக்கமின்றி செய்யப்படும் செயலை அல்லாஹ் எப்படி ஏற்றுக் கொள்வான்? அல்லாஹ் இது போன்ற செயல்கள் குறித்து திருக்குர்ஆனில் எச்சாிக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (திருக்குர்ஆன் 2:264)

ரியாவில் ஈடுபடுபவர் மண்ணால் மூடப்பட்ட பாறை போன்றவர் ஆவார். மக்கள் அப்பாறையைப் பார்க்கும் போது அது விளைநிலம் போல் தோற்றமளிக்கும். ஆனால் சிறிய மழை பெய்தால் கூட, அது ஒரு பாறை என்பது அம்பலமாகிவிடும். மேலும் ரியாவில் ஈடுபடுவோர் தங்கள் செயலின் பலன்களை அனுபவிக்க இயலாத சூழலும் ஏற்பட்டு விடும்.

பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது: அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன. அதில் அனைத்துக் கனிகளும், அவருக்கு உள்ளன: அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது: அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எாித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 2:266)

4. அல்லாஹ்விடம் அவமானப்படுதல்
புகழுக்காகவும், பெருமைக்காகவும் நற்செயகளைப் புரிவோருக்கு இந்த உலகிலேயே அவர்கள் நாடியது கிடைத்து விடும் என்ற போதிலும், இறுதித் தீர்ப்பு நாளில் அவர்கள் முழுமையாக அல்லாஹ்வினால் அவமானப்படுவார்கள்.

5. நரக நெருப்பில் நுழைவதற்கான முதன்மையான காரணம்
அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதல் முதலில் (இறைவழியில் உயிர் துறந்து) ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒத்துக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம் 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், 'நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரை போராடினேன்" என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய்: வீரன் என்று கூறப்படுவதற்காகவே போாிட்டாய். இவ்வாறே (மக்களாலும் உலகில்) பேசப்பட்டு விட்டது" என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதர்; முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.

பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆன் ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ், தான் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம், 'நான் கொடுத்த அருட்கொடைகளை என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், 'நான் உனக்காக (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்து, குர்ஆனை உனக்காக ஓதி வந்தேன்" என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய், அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டுமென்பதற்காகவே இஸ்லாமிய அறிவைக் கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர்கள் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களாலும்) பேசப்பட்டு விட்டது" என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும் வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும் படி ஆணையிடப்படும்.

அதன் பின்னர் செல்வந்தர்; ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவருக்கு அல்லாஹ் தான் அளித்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம், 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர் 'நீ எந்த வழிகளிலெல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் நான் செலவு செய்யாமல் விட்டதில்லை." என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய். (இவர் வள்ளல் தனத்துடன்) வாாி வாாி வழங்குபவர், என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது" எனக்கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லுமாறு ஆணையிடப்படும். நூல்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ

'அபூஹுரைராவே! அல்லாஹ்வின் படைப்புகளில் இறுதித் தீர்ப்பு நாளில் நரக நெருப்பிற்கு இரையாகப்போகும் முதல் மூன்று நபர்கள் இவர்கள்தான்"

6. அல்லாஹ்வுக்கு சிரம் பணிய இயலாமை
மக்கள் தரும் புகழாரங்களை வணங்கியவர்களுக்கு மேலும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் தனக்கு சிரம் பணிய (சுஜ_து) செய்ய முயன்ற போதிலும், அதனை அல்லாஹ் இயலாமல் ஆக்கிவிடுவான். அபூ சையீத் குத்ாி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு நீண்ட நபிமொழியில், இறுதித் தீர்ப்பு நாளில் இறைநம்பிக்கையாளர்கள் எவ்வாறு அல்லாஹ்வைக் காண்பார்கள் என்பதை அண்ணல் நபி அவர்கள் விளக்கினார்கள். இதன் பிறகு அவர்கள் சொன்னார்கள்.

'பிறகு அல்லாஹ் தனது கீழ்காலின் முன்புறத்தை வெளிப்படுத்துவான். (உலக வாழ்வின் போது) தனக்கு தூய எண்ணத்துடன் சிரம் பணிய செய்த அனைவரையும் சிரம் பணிய அனுமதிப்பான். இதனால் அவர்கள் யாருமே நின்று கொண்டிருக்க மாட்டார்கள். மற்றவர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக சிரம்பணிந்தவனின் முதுகை அல்லாஹ் ஒரே துண்டுக் கட்டையாக ஆக்கிவிடுவான். (இதன் விளைவாக அவனால் குனியவே முடியாது) ஒவ்வொரு முறை அவன் சிரம் பணியும் போது, அவன் முகங்குப்புற கீழே விழுவான்...." நூல்: சஹீஹ் அல் ஜாமி, புகாாி, முஸ்லிம்

7. சுனத்திற்குச் செல்வதைத் தடை செய்கிறது.

ரியாவைக் கடைப்பிடிக்கும் ஒருவர் நிரந்தரமாக நரக நெருப்பில் கிடத்தப்பட மாட்டார் என்பதில் இஸ்லாமிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஏனெனில் ரியா ஒரு மனிதரை இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றுவதில்லை. ஒரு மனிதனின் உள்ளத்தில் சிறிதளவு தவ்ஹீது இருப்பினும், அவர் நரக நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். அல்லாஹ் நாடினால், 'ரியா'"விற்காக ஒருவரை மன்னித்து, எவ்விதத் தண்டனையும் அவருக்கு அளிக்காமல் இருக்கலாம்.

மூல ஆசிாியர்: அபூ அம்மார் யாசிர் அல் காழி
நன்றி: READISLAM.NET

வியாழன், 12 நவம்பர், 2015

QITC யின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 13-11-2015 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு


QITC யின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் 13-11-2015 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு

தலைமை :
சகோ. மஸ்வூத்

சிறப்புரை :
சகோ. மனாஸ் ( பயானி )
தலைப்பு : ‪இணைவைப்பும்‬ சூடான நரகமும்!

சகோ. அப்துஸ் ஸமது ( மதனி )
தலைப்பு : ‪‎இணைவதும்‬ பிரிவதும் அல்லாஹ்வுக்காகவே

சகோ. R. ‪அப்துல்‬ ராசிக் B.Com
(பொதுச் செயலாளர் SLTJ)
தலைப்பு : ‪‎நாங்கள்‬ சொல்வது என்ன?

இந்த நிகழ்ச்சியல் அனைவரும் தவறாமல் பங்குபெற அன்புடன் அழைக்கிறது...

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE
Al Thumama, E-Ring Road,
Near Parachute Signal,
P.O.Box. 31579, Doha, Qatar.
Tel: +974 4431 5863 / 7013 8460
E-mail: qitcdoha@gmail.com

குறிப்பு:
பெண்களுக்கு தனி இடவசதி உண்டு
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

செவ்வாய், 3 நவம்பர், 2015

இணைவைப்பை துடைத்தெறிவோம்


"இணைவைப்பை துடைத்தெறிவோம்" 

சமுதாயத்தின் பேரியக்கமாகத் திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தூய்மையான முறையில் மார்க்க மற்றும் சமூகப் பணிகளைச் செய்து வருகிறது. அதன் வரிசையில், வரும் 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ஆம் தேதி அன்று திருச்சியில் இணை வைப்புக்கு எதிராக, ஷிர்க் ஒழிப்பு மாநாட்டினை நடத்துவதாக அறிவிப்பு செய்துள்ளது.

இணை வைப்பு குறித்து இஸ்லாம் கூறும் செய்திகளை அறிந்து, அதை முறையாக விளங்கி இருப்பவர்களுக்கு இந்த மாநாட்டின் முக்கியத்துவம் நன்கு புரிந்து இருக்கும். காரணம், ஷிர்க் எனும் இணை வைப்பு சம்பந்தமாக அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்கள். திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இது குறித்து கணக்கில்லா செய்திகள் இருக்கின்றன.

இருப்பினும், இன்னும் நிறைய மக்கள் இதனை முழுமையாக அறியாமலும் சரியாக விளங்காமலும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இணை வைப்பு குறித்து சில தகவல்களை சுருக்கமாக இந்தக் கட்டுரையில் காண்போம்.

இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்பு

இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பது மட்டும் இஸ்லாம் அல்ல. இறைவன் ஒருவனைத் தவிர வேறு எந்த இறைவனும் இல்லை என்பது தான் இஸ்லாம். லாஇலாஹ இல்லல்லாஹ் எனும் திருக் கலிமாவின் மூலம் நாம் இதைப் புரிந்து கொள்ள முடியும். இதையே இன்னொரு கோணத்தில், அல்லாஹ்வை வணங்குவது மட்டும் இஸ்லாம் அல்ல; அல்லாஹ்வை மட்டும் வணங்குவது தான் இஸ்லாம்.

இந்த வகையில், இணைவைப்பு என்பது எந்த வடிவத்தில் இருப்பினும் அது ஒட்டுமொத்தமாக இஸ்லாத்திற்கு எதிரான, விரோதமான காரியம். இணைவைப்பு இல்லாமல் இருப்பதே தூய்மையான இஸ்லாமிய மார்க்கம் என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்கு விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் முன்வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வாகனமேதுமின்றி) நடந்து வந்து, "அல்லாஹ்வின் துதரே! "ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?'' என்று கேட்டார். அவர்கள், "ஈமான் (இறைநம்பிக்கை) என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! "இஸ்லாம்' (அடி பணிதல்) என்றால் என்ன?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்கு வதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காமல் இருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடைமையான ஸக்காத்தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), 
நூல்: புஹாரி (4777)

ஒருவர், அல்லாஹ்வையும் வணங் குகிறார்; கல்லையும் வணங்குகிறார். அவரை இஸ்லாத்தில் இருப்பதாகச் சொல்ல மாட்டோம். அதுபோலவே ஒருவர் இறந்த மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு தர்ஹா கட்டி வணங்குவது மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார் என்றால், அவர் இஸ்லாத்தில் நிலையாக, சரியாக இல்லை என்பதே உண்மை.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம், அதையே பின்பற்றுகிறோம் என்று சொல்பவர்கள் யாராக இருப்பினும், முதலில் அவர்கள் ஷிர்க்கான காரியங்களை விட்டும் விலகி இருக்க வேண்டும். இல்லையெனில், அவர் இஸ்லாத்தில் இருப்பதாகச் சொல்வதற்கும், பெருமிதம் கொள்வதற்கும் கடுகளவும் தகுதி கிடையாது என்பதே மார்க்கத்தின் பகிரங்கமான நிலைப்பாடு.

ஈமானை அழிக்கும் இணைவைப்பு

முஃமின்கள் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக் கூடாது? என்பது குறித்து திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன்படி நம்பிக்கையாளர்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியம். அதற்கு மாறாக செயல்படுவது, இறை நம்பிக்கையின் உறுதியை வலிமையைத் தகர்த்துவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆகவேதான் மார்க்கம் எச்சரிக்கும் காரியங்களை விட்டும் விலகிவிடுமாறு நபிகளார் தமது தோழர்களுக்கு அறிவுரை சொன்னார்கள். அவைகளை விட்டுவிடும்படி அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அந்தக் காரியங்களுள் முதன்மையான ஒன்றாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இணைவைப்பைக் குறிப்பிட்டதை நாமெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(அகபா இரவில்) தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் "வாருங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்க மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரிய மாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டீர்கள் என்றும், உங்கள் தரப்பிலிருந்து நீங்களே இட்டுக் கட்டும் அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும், எனக்கு நல்ல விஷயங்களில் மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள். உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்சொன்ன குற்றங் களில்) எதையேனும் ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலேயே (இஸ்லாமியச் சட்டப்படி) தண்டிக்கப்பட்டு விட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகி விடும். இவற்றில் எதையேனும் ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்து விட்டால் (அவரது மறுமை நிலை குறித்த) அவரது விவகாரம் அல்லாஹ்விடம் உண்டு. (மறுமையில்) அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்று சொன்னார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அவற்றுக்காக உறுதிமொழி கொடுத்தோம்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)
நூல்: புஹாரி (3892)

இணைவைப்பு என்பது ஈமானுக்கு எதிரானது என்பதை மேலிருக்கும் செய்தி மூலம் விளங்க இயலும். எனவேதான், ஒருபுறம் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், மறுபுறம் இணைவைப்பு தெய்வங்களை நம்பிக் கொண்டும் இருந்த மக்கத்து மக்களை இணைவைப்பவர்கள், காஃபிர்கள் என்று அல்லாஹ் திருமறையில் கடுமையாகக் கண்டிக்கிறான்.

அந்த மக்களிடம் இருந்த அதே நிலையை இன்றைய மக்களிடமும் பார்க்க முடிகிறது. அல்லாஹ் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்குப் பதிலாக, இறந்தவர்கள், கொடிமரங்கள் போன்றவற்றிடம் கையேந்தி ஈமானை இழக்கும் காரியங்களைக் கண்மூடித்தனமாகச் செய்கிறார்கள். பின்வரும் வசனத்தைப் படித்தாவது இணை வைக்கும் மக்கள் மனம் திருந்த வேண்டும், தூய்மையான இறைநம்பிக்கையின் பக்கம் மீள வேண்டும்.

"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர் களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்று கூறுவார்கள். "அல்லாஹ்வை யன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!'' என்று கேட்பீராக! "அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன் 39:38)

இணைவைப்பு என்பது உரிமை மீறல்

அல்லாஹ் நம்மைப் படைத்ததோடு வெறுமனே விட்டுவிடவில்லை. நமக்குத் தேவையான அனைத்தையும் அள்ளிக் கொடுத்திருக்கிறான். அன்போடும் அருளோடும் நம்மைப் பரிபாலித்துக் கொண்டிருக்கிறான். அத்தகைய இறைவனுக்கு நன்றி செலுத்துவது நமது கடமை. தொழுகை, நோன்பு, பிரார்த்தனை என்று மார்க்கம் கூறும் அனைத்து விதமான வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் அவன் மட்டுமே உரிமையானவன். இந்நிலையில், அவனுக்குக் கொடுக்க வேண்டிய இந்த உரிமையை மற்றவர்களுக்குக் கொடுப்பது பகிரங்கமான வரம்பு மீறல். இறந்து போனவர்களிடம் பிரார்த்தனை செய்வது கோரிக்கை வைப்பது, மன்றாடுவது அனைத்துமே அல்லாஹ்வுக்குக் கொடுக்க வேண்டிய உரிமையைப் பாழ்படுத்தும் பயங்கர மான காரியம்; கொச்சைப்படுத்தும் கேவலமான செயல்.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு வாகனத்தில்) அமர்ந் திருந்தேன். அப்போது அவர்கள், "முஆதே!'' என்று அழைத்தார்கள். நான், "இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)'' என்று சொன்னேன். பிறகு இதைப் போன்றே மூன்று முறை அழைத்துவிட்டு, "மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று நீ அறிவாயா?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை (எனக்குத் தெரியாது)'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "மக்கள் மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்னவென்றால், மக்கள் அவனையே வணங்கிட வேண்டும். அவனுக்கு எதனையும்(எவரையும்) இணைவைக்கக் கூடாது'' என்றார்கள். பிறகு சிறிது தூரம் சென்றபின் "முஆதே!' என்று அழைத்தார்கள். நான், "இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)'' என்று சொன்னேன். "அவ்வாறு செயல்படும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா? அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்: புஹாரி (6267)

மிகப்பெரும் அநியாயம் மாபெரும் வழிகேடு

நாம் வாழும் சமுதாயத்தில் அநியாயங்களுக்குப் பஞ்சமில்லை எனுமளவிற்கு எண்ணற்ற காரியங்கள் நடக்கின்றன. நாடெங்கும் விதவிதமான வழிகேடான காரியங்கள் பரவிக் கிடக்கின்றன. இவைகளுள் மிகவும் உச்சகட்டமானது, இறைவனுக்கு இணைவைக்கும் காரியங்கள் ஆகும்.

நேர்வழியில் நிலைத்து இருக்க வேண்டும்; வழிகேட்டில் விழுந்து விடக் கூடாது; அநியாயங்களை செய்து விடக் கூடாது என்று நினைப்பவர்கள் முதலில் இணைவைப்பு காரியங்களை தூக்கியெறிய வேண்டும். காரணம், படைத்தவனுடைய இடத்தில் படைப் பினங்களை வைத்து வழிபடுவது போன்ற மிகப்பெரும் அநியாயம். மாபெரும் வழிகேடு வேறெதுவும் இல்லை.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

(திருக்குர்ஆன் 4:116)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித் தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

(திருக்குர்ஆன் 31:13)

மன்னிப்பே இல்லாத பெரும்பாவம்

மனிதர்கள் செய்யக் கூடாத பாவங்களை இஸ்லாம் மிக அழகாகத் தெளிவுபடுத்தி இருக்கிறது. அவை அனைத்தும் தனிமனிதனையும் சமுதாயத்தையும் நாசப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றைச் செய்பவர்களை இஸ்லாம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

வட்டி, வரதட்சணை, மோசடி, திருட்டு என்று பாவங்களை பெரும் பட்டியல் போடலாம். இருந்தாலும், இவைகளைக் காட்டிலும் மிகவும் பாரதூரமான பெரும்பாவம் இணை கற்பித்தலாகும். காரணம், மற்ற மற்ற பாவங்களை அல்லாஹ் நாடினால் மன்னித்துவிடுவான். ஆனால். இணைவைப்பான செயல்களை அல்லாஹ் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவும் மாட்டான். அதை மன்னிக்கவும் மாட்டான்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(திருக்குர்ஆன் 4:48)

"அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?'' என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான் (பெரும் பாவம்)'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புஹாரி (4761)

(ஒரு முறை) "பெரும் பாவங் களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங் கள்)'' என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)'' என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, "அறிந்துகொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்) தான்'' என்று கூறினார்கள். "நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புஹாரி (2654)

இணை கற்பித்தால் நல்லறங்கள் அழியும்

எந்தவொரு நல்ல செயலையும் மிச்சம் வைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் மார்க்கம் சொல்லிவிட்டது. இப்படியிருக்க, தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற மிகச் சில காரியங்களையே நாம் செய்து கொண்டிருக்கிறோம். கடலளவு இருக்கும் மார்க்கத்தில் கையளவு காரியங்களைக் கூட நாம் பரிபூரணமாகக் கடைப்பிடிப்பது இல்லை. இருப்பினும், நமது அமல்கள் அனைத்தும் அல்லாஹ் வினால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனும் ஆவல் அனைவருக்கும் இருக்கிறது.

இந்நிலையில், நாம் செய்கிற காரியங்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் எனில் கண்டிப்பாக இணைவைப்புக் காரியங்களை விட்டும் விலகி இருக்க வேண்டும். தாயத்து கட்டுவது, தகடு மாட்டுவது என்று இணைவைப்புகளைச் செய்து கொண்டு ஒருவர் எவ்வளவுதான் சிறப்பான அமல்களைச் செய்தாலும் அவை வீணாகி விடும். அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாமல், நன்மை கிடைக்காமல் அழிந்து போய்விடும். இதோ அல்லாஹ் எச்சரிப்பதைப் பாருங்கள்.

"நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(திருக்குர்ஆன் 39: 66)

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

(திருக்குர்ஆன் 6:88)

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களை விட்டும் இணை கற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணை வைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (5708)

இறைச் செய்தியை போதித்து அதன்படி வாழ்ந்து காட்டும் நபிமார்களாக இருந்தாலும் இணை வைத்து விட்டால் அவர்களது அனைத்து நல்லறங்களும் பாழாகி விடும் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான். இப்படியிருக்க, சாதாரண மக்களாக இருக்கும் நமது நிலை என்னவாகும் சிந்தித்து பாருங்கள். பல்வேறு சிரமங்கள், தியாகங்களுக்கு மத்தியில் குறைவான அமல்கள் செய்து அதற்கும் கூட நன்மை கிடைக்காத நிலையில் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது. இனியாவது ஜோசியம், சகுனம் என்று இணைவைப்பில் மூழ்கி இருப்பவர்கள் பாவ மன்னிப்பு கேட்டுத் திருந்த வேண்டும். இதுவே ஏகத்துவவாதிகளின் கோரிக்கை.

இணை கற்பித்தால் நிரந்தர நரகம்

இந்த உலக வாழ்க்கை என்பது அற்பமானது, நிரந்தரம் அற்றது. மறுமை வாழ்க்கை மட்டுமே நிரந்தரமானது. அதிலும், நரக வாழ்க்கையோ கொடூரமானது; கொடுமையானது. சொர்க்க வாழ்க்கையோ கண்ணியமானது; இனிமையானது.

எனவே தான் மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காக நாமெல்லாம் முஸ்லிம்களாக வாழ்ந்து வருகிறோம். எப்படியும் வாழலாம் என்று சொல்லும் மதங்களைப் புறக்கணித்து விட்டு, இப்படித் தான் வாழ வேண்டும் என்று எல்லாவற்றிலும் கட்டுப்பாடு களைக் கொண்டிருக்கும் மார்க்கத்திலே இருக்கிறோம்.

இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமெனில், இணைவைப்பை விட்டும் நீங்கி இருக்க வேண்டும். ஏனெனில், இணை வைப்பவர்கள் தண்டனை பெற்ற பிறகு சொர்க்கம் போக முடியாது. இவர்கள் ஒருபோதும் சொர்க்கம் செல்லாமல் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 9:17)

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

(திருக்குர்ஆன் 98:6)

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனு மாகிய அல்லாஹ்வை வணங்குங் கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.

(திருக்குர்ஆன் 5:72)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர் களிடம் வந்து, "(சொர்க்கத்தையும் நரகத்தையும்) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாகச்) சொர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக இறந்து விடுகிறாரோ அவர் (நிச்சயமாக) நரகம் செல்வார்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (151)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப் படுபவரிடம், "பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?'' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், "ஆம்'' என்று பதிலளிப்பான்: அப்போது அல்லாஹ், "நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்த போது இதை விட இலேசான ஒன்றை -எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமல் இருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பிய போது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை'' என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புஹாரி (3334)

இணைவைப்பவர்கள் இழக்கும் பாக்கியம்

ஏக இறைவன் கொடுத்திருக்கும் பகுத்தறிவு எனும் பொக்கிஷத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதே இணை வைப்பிலே வீழ்வதற்கு முக்கியக் காரணம்.

படைத்தவனின் மகத்துவத்தை, மாண்பை மறந்துவிட்டு அவனை விட அற்பமான படைப்பினங்களை மிகவும் மரியாதையாக, கண்ணியமாக நினைக்கிறார்கள். இவ்வாறு கொஞ்சமும் யோசிக்காமல் இணை வைப்பு வாசலில் நிற்பவர்களுக்கு ஈருலகிலும் பல இழப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, இங்கு வாழும் போதே நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அல்லாஹ் பல்வேறு வாய்ப்புகளை வைத்திருக்கிறான். இந்தப் பயன்கள் இணைவைக்கும் மக்களுக்கு அறவே கிடைக்காது. இவர்களின் குற்றங்கள் மன்னிக்கப்படுவதற்கு மலக்குகள் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள்; பாவமன்னிப்புத் தேட மாட்டார்கள். இன்னும் சொல்வதெனில், மறுமை நாளிலே எந்த விஷயத்திலும் இவர்களுக்காக நபிகளார் உட்பட யாரும் பரிந்துரை செய்ய மாட்டார்கள்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப் படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணை வைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. அப்போது இவ்விருவரும் சமாதானமாகிக் கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்'' என்று கூறப்படுகிறது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் (5014)

ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்கு வேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்துவிடுவேன். யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச் செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணை வைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர்கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (5215)

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு; எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்(338)

துரும்பளவும் பயனளிக்காத இணைவைப்பு

அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! மறுமை நாளில் அவனிடம் இருந்து இணை வைக்கும் மக்கள் எந்த வகையிலும் தப்பிக்க இயலாது. இங்கு வாழும்போது, எங்கெல்லாம் உதவி தேடிக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருந்தார்களோ அந்த மனிதர்கள், பொருட்கள் என்று எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது.

இக்கட்டான நேரத்தில் உதவி செய்வார்கள், பரிந்துரை செய்வார்கள், பாதுகாப்பு தருவார்கள் என்று முஷ்ரிக்குகளால் தப்பும் தவறுமாக எதிர்பார்க்கப்படும் எவரும் அவர்களுக்குக் கைகொடுக்க மாட்டார்கள். அல்வியாக்கள், மகான்கள், ஷேக் மார்கள் என்று எவரும் காப்பாற்ற வரமாட்டார்கள்; காணாமல் போய்விடுவார்கள்.

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி "நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!'' என்று கூறுவோம். அப்போது அவர் களிடையே பிளவை ஏற்படுத்து வோம். "நீங்கள் எங்களை வணங்கவே இல்லை'' என்று அவர் களின் தெய்வங்கள் கூறுவார்கள். "எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்'' என்றும் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன் 10:28)

இணை கற்பித்தோர் தங்கள் தெய்வங்களைக் காணும் போது "எங்கள் இறைவா! அவர்களே எங்கள் தெய்வங்கள். உன்னையன்றி அவர்களையே பிரார்த்தித்து வந்தோம்'' என்று கூறுவார்கள். "நீங்கள் பொய் சொல்கிறீர்கள்'' என்று அவர்கள் மறுமொழி கூறுவார்கள். அன்று அல்லாஹ்விடம் சரணாகதியைச் சமர்ப்பிப்பார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.

(திருக்குர்ஆன் 16:86, 87)

இவை மட்டுமல்ல, அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பது குறித்தும், அதனால் நேரும் பாதிப்புகள் குறித்தும் இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன.

ஷிர்க் என்பது இஸ்லாம், ஈமான், மறுமை வெற்றி ஆகியவற்றுக்கு எதிரானது. எனவே தான், இதற்கு எதிராக மாநாடு நடத்துவதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

பொதுவாகவே, அல்லாஹ்வை தூய்மையான முறையில் வணங்க வேண்டும்; அவனுக்கு எவ்வகை யிலும் இணைக் கற்பிக்கக் கூடாது எனும் அடிப்படையில் இந்த ஜமாஅத் ஆரம்பம் முதல் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. இந்தப் பணியை வீரியப்படுத்தும் வகையில் இந்த மாநாடு திட்டமிடப் பட்டுள்ளது.

நாம் மட்டுமல்ல! நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து மக்களும் ஏக இறைவனை மட்டும் வணங்கு பவர்களாக வாழ்ந்து ஈருலகிலும் வெற்றிபெற வேண்டும். இதற்காக நாம் தன்னலம் பாராமல் இயன்றளவு உழைக்க வேண்டும். இந்தத் தூய இலக்கை மையமாக வைத்து நடத்தவிருக்கும் இந்த மாநாடு வெற்றியடைய அல்லாஹ் உதவி புரிவானாக!

- எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்
ஏகத்துவம் அடோபர் 2015

திங்கள், 2 நவம்பர், 2015

கத்தர் மண்டல மர்கஸில் 30-10-2015 நடைபெற்ற "தாயிகளுக்கான சிறப்பு தர்பியா பயிற்சி"


ஏக இறைவனின் திருப்பெயரால்...

கத்தர் மண்டல மர்கஸில் கடந்த 30-10-2015 வெள்ளிக் கிழமை அன்று “தாயிகளுக்கான சிறப்பு தர்பியா பயிற்சி”
மண்டல தலைவர் சகோ.மஸ்வூத் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.

இரண்டு நாள் கொண்ட இந்த பயிற்சி முகாமின் முதல் வெள்ளிக் கிழமை நிகழ்ச்சியில்

மௌலவி முஹம்மது தமீம் M.I.Sc. அவர்கள்
“இஸ்லாத்தின் அடிப்படை” என்ற தலைப்பிலும்,

மௌலவி முஹம்மது அலி M.I.Sc. அவர்கள்
“அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பிலும்,

மௌலவி அன்சார் (மஜிதி) அவர்கள் 
“அழைப்பு பணிக்கான தயாரிப்புகள்” என்ற தலைப்பிலும்,

மௌலவி அப்துஸ்ஸமது (மதனி) அவர்கள்
“அழைப்பாளர்களின் பண்புகள்” என்ற தலைப்பிலும்
பயிற்சி அளித்தனர்.

இதில் பெண்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட தாயிக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..

இன்ஷா அல்லாஹ் இதன் தொடர் வரக்கூடிய 06-11-2015 வெள்ளிக் கிழமை கத்தர் மண்டல மர்கஸில் நடைபெறும்.




ஃ பேஸ் புக் செய்தி: