செவ்வாய், 29 செப்டம்பர், 2015

கத்தரில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை மற்றும் ஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சி 24-09-2015


QITC- கத்தர் மண்டலத்தின் நபிவழி பெருநாள் திடல் தொழுகை மற்றும் ஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சி 24/09/2015 இன்று காலை 5:38 மணிக்கு சனையாவில் கிராண்ட் மால் மற்றும் சனையா கிரிக்கட் ஸ்டேடியம் அருகிலுள்ள பிலாஸா மால் முன்புறம் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை நடை பெற்றது, இதில் சகோ. அன்சார் மஜீதி அவர்கள் குத்பா தமிழாக்க உரையாற்றினார்கள்.

அதனை தொடர்ந்து ஈதுல் அத்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ஃபனார் (FANAR) உள்ளரங்கில் காலை 7:15 மணிக்கு மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது,

இதில் ஆரம்பமாக மௌலவி அப்துஸ்சமது மதனீ அவர்கள் உரையாற்றினார்கள். பின்னர் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சிறப்பு பேச்சாளர் சகோதரர் K.M. அப்துந் நாஸிர் MISc அவர்கள் "ஷிர்க் ஓர் பெரும் பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஃபேஸ்புக் செய்தி: