வியாழன், 11 ஜூன், 2015

QITC- கிளைகளில் தஃவா / மஷூரா (30/05/15 - 05/06/15)

QITC - பின் மஹ்மூத் கிளையில் புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வு



கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 30-05-2015 அன்று கத்தர் மண்டல பொதுச் செயலாளர் சகோ முஹம்மத் அலி MISc. தலைமையில் மற்றும் மண்டல நிர்வாகிகளான சகோ.தஸ்தகீர், சகோ.அப்துர் ரஹ்மான், சகோ சாக்லா ஆகியோரும் முன்னிலையிலும் புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வு சிறப்பாக நடைபெற்றது இதில் ஆரம்பமாக சகோ முஹம்மத் அலி MISc அவர்கள் “பொறுப்பாளர்கள் எப்படி இருக்கவேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார் பின்னர், பழைய பொறுப்பாளர்கள் குறை நிறைகள் கேட்டரியப்பட்டு அதனைத் தொடர்ந்து புதிய பொறுப்பாளர்களாக பின்வரும் சகோதரர்கள் தெரிவு செய்யப்பட்டனர் , கிளைப் பொறுப்பாளர் சகோ. ஷேக் முஹம்மத் , துணைப் பொறுப்பாளர்கள் சகோ. அமானுல்லாஹ், சகோ. அப்துல் ஜலீல், சகோ. அப்துல்லாஹ் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்..

QITC - பின் மஹ்மூத் கிளையில் மஷூரா

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 30-05-2015 அன்று சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் புதிய கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் பின் மஹ்மூத் கிளையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் சிறப்பு பயான் பற்றியும் புதிய பொறுப்பாளர்கள் எப்படி நடந்த்கொள்ள வேண்டும் மற்றும் தஃவா தொடர்பான பல விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.


மேலும் 02-06-2015 அன்று மண்டல நிர்வாகி சகோ. தஸ்தகீர் மற்றும் புதிய கிளை பொறுப்பாளர்கள், கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் பின் மஹ்மூத் கிளையின் வளர்ச்சி குறித்தும் நடைபெற இருக்கும் சிறப்பு பயானுக்கு அதிக மக்களை திரட்டி சிறப்பாக நடத்துவது போன்ற விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு கிளை மஷூரா

கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு மண்டல செயலாளர் மவ்லவி. முஹம்மத் அலி MISc. தலைமையில் முந்தஸா கிளை பொறுப்பாளர்களுடன் கிளை மஷூரவும் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இதில் கீழ்க்கண்ட ஆலோசனைகள் செய்யப்பட்டது.
  • கிளைப்போருப்பாளர்கள் வாரம் ஒருமுறையாவது பிரமத தாவா செய்யவேண்டும்
  • முஸ்லிம் சகோதரர்களை தனியாகவும் கேம்ப் களிலும் சந்தித்து தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கவேண்டும்
  • ஜும்ஆ பயான் பற்றிய தகவலை முந்தஸா பகுதி தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தல்
  • கிளை வளர்ச்சிக்கான மாதாந்திர அறிக்கைகள் முறையாக மாதா மாதம் பூர்த்தி செய்து மண்டலத்திற்கு வழங்க வேண்டும்.


QITC - சனையா கிளையில் மஷூரா


கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 31-05-2015 அன்று சகோ. தாவூத் அவர்கள் தலைமையில் மற்றும் புதிய கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் சனையா அல்நஜா பள்ளியில் மசூரா நடைபெற்றது

இந்த மசூராவில் கீழ்காணும் விடயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு: இன்ஷா அல்லாஹ் 31/01/2016 அன்று நடைபெறவுள்ள "ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?" என்பதை பற்றி விளக்கியும்,அதற்கான பொறுப்பாளர்கள் பங்களிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கிளை தாவா: இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் "ஞாயிறு,செவ்வாய்" தவிர்த்து மற்ற அனைத்து தினங்களிலும் தாவாவை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்: இன்ஷா அல்லாஹ் கிளை சார்பில் நடைபெறவுள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சிக்கான இடம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாற்று மத தாவா: இன்ஷா அல்லாஹ் அடுத்து வரக்கூடிய காலங்களில் வாரம் ஒருமுறை சனையா தெரு 47 ல் உள்ள "மார்க்கெட் பகுதி" யில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்களின் மூலமாக மாற்று மத தாவாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

பிற கிளையில் பங்களிப்பு: இன்ஷா அல்லாஹ் 05/06/2015 அன்று பின் மஹ்மூத் கிளையில் நடைபெறவுள்ள பயான் நிகழ்ச்சியில் அதிகமானவர்கள் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

ரமலான் நிகழ்ச்சி: இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல் மற்றும் அந்த நேரத்தில் செய்ய வேண்டிய "உணவு குழு" பொறுப்பையும் மேற்கொள்ளுதல் என மகிழ்ச்சியுடன் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

QITC- சனையா கிளையில் மாற்றுமத தஃவா



கத்தர் மண்டலம் 04-06-2015 அன்று சகோ. ஷேக் அப்துல்லாஹ் அவர்கள், சனையா 47 பகுதியில் சென்று இலங்கையைகச் சேர்ந்த பிரகாஷ் என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் என்றால் என்ன? என்பதை விளக்கமாக கூறி இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களும் வழங்கினார் , அதனை தொடர்ந்து நேபால் மற்றும் ஹிந்தி மொழி சகோதர்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கி தஃவா செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்..