கத்தர் மண்டல மர்கஸில் கடந்த 12/06/2015 அன்று ஜும்மா தொழுகையை தொடர்து ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக்கூட்டம் மண்டல துணை தலைவர் சகோ. ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது, இதில் கத்தர் மண்டல தாயிக்கள் கிளை பொறுப்பாளர்கள் QITC உறுப்பினர்கள் மற்றும் விசேஷ அழைப்பாளர்கள் ஆகிய எல்லோரும் கலந்து கொண்டனர்
ஆரம்பமாக சகோ. முஹம்மது தமீம் அவர்களின் “தர்மத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் ஒரு சிறிய உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது
அதனை தொடர்ந்து மண்டல பொது செயலாளர் மவ்லவி முஹம்மத் அலி MISc. அவர்கள் ரமலானில் நடக்க இருக்கும் நிகழ்சிகள் பற்றியும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி பேசினார்
ரமலான் பித்ரா மற்றும் டிவி விளம்பரங்கள் பற்றியும் பேசப்பட்டது
பின்னர் மண்டல துணை பொது செயலாளர் சகோ. தஸ்தகீர் அவர்கள் செயல் வீரர்கள் தேர்வு பின்னர் செயல்வீரல்கள் பங்களிப்பு, அவர்களது பொறுப்புக்கள் பற்றியும், அதனை அடுத்து மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானில் நடந்தது என்ன என்பத மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் அவர்கள் சில வீடியோ காட்சிகளுன் விலக்கி கூறினார் இறுதியாக அனைவரின் கருத்துக்களும் கேட்டு பதியப்ப்பட்டன், மாலை 6.00 மணிக்கு நன்றி உரையுடன் நிகழ்சிகள் சிறப்பாக முடிந்தது. அல்ஹம்ம்துளில்லாஹ்