ஞாயிறு, 10 மே, 2015

QITC - யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - அறிவிப்பு


QITC - யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளுக்கு,


கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் கட்டுரைப் போட்டியை நடத்த இருக்கிறது. இந்த கட்டுரைப்போட்டியில் நீங்களும் பங்குபெற்று, சிறந்த கட்டுரைகளை அனுப்பித்தருமாறு தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


கட்டுரைப்போட்டிக்கான தலைப்புகள் 

ஆண்களுக்கான தலைப்புக்கள்

1. இஸ்லாமிய வளர்ச்சியின் மீதான உலக நாடுகளின் அச்சம்

2. செயல்களால் முன் வைக்கப்படும் அழைப்புப் பணியின் வலிமையும் -அதன் தாக்கங்களும்

3. இஸ்லாத்தைப்பற்றிய ஊடகங்களின் பொய் கட்டமைப்புகளும் – அதை நீக்குவதற்கான தனிமனித வாழ்வியல் உத்திகளும்

4. தடுமாற செய்யும் சோதனைகள்

பெண்களுக்கான தலைப்புக்கள்

1. இன்றைய முஸ்லிம் பெண்கள்

2. ஏகத்துவ கொள்கை இன்னும் நம் வாழ்வில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள்

3. நபித்தோழர்களும் தியாகங்களும்

4. உயர்த்தப்பட்ட கபுருகள் தரைமட்டமாக்கப்பட வேண்டியதே