மென்மையே நன்மை
பணிந்து நடப்பது
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ''ஸலாம்'' எனக் கூறு (அல்குர்ஆன்.25.63 )
நபியின் குணம்
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். 3:159
நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 68:4)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிகவும் அழகிய குணமுடையவர்களாக விளங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் தீமையைச் செய்பவர்களாகவோ சொல்பவர்களாகவோ, தீமையை நாடக்கூடியவர்களாகவோ இருந்ததில்லை. அவர்கள் சொல்வார்கள்: உங்களில் மிகச் சிறந்தவர்கள் அழகான குணமுடையவர்களே!
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஒருவர் சிறந்தவர் என்று கூற வேண்டுமானால் அவரிடம் அழகான குணமிருக்க வேண்டும். குணங்களில் மிகவும் அவசியமானவை மென்மை (நிதானம்). அறிவோடு இணைந்த இந்தக் குணத்தை அல்லாஹ் நேசிக்கின்றான். மேலும் இதற்கு நன்மைகளையும் வழங்கின்றான்.
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள், அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ்ஜு அவர்களிடம் கூறினார்கள்: உம்மிடம் அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உள்ளன. 1. அறிவாற்றல், 2. நிதானம்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (24)
தனது பலத்தால் (மனிதர்களை) அதிகம் அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6114)
மன்னிப்போம்
யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும். (அல்குர்ஆன் 42:43)
எவன் மென்மையை தடுத்துக் கொள்கிறானோ அவன் நன்மையை தடுத்துக் கொள்கிறான் என்று நபி(ஸல்)கூறினார்கள்
ஜாபிர் (ரலி) முஸ்லிம் 4694
அல்நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த நாட்டுப்புற மனிதரை அழகிய உபதேசத்தின் மூலம் நபி (ஸல்) அவர்கள் திருத்தியுள்ளார்கள்.
ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் கொதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் நபி (ஸல்) அவர்கள், ''அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6128)
முஸ்லிமின் 480வது அறிவிப்பில் அந்தக் கிராமவாசியிடம் நபி (ஸல்) அவர்கள், ''இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல! இது இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் உரியதாகும்'' என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
மென்மை எதில் இருந்தாலும் அதை அது அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (5056)
''அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றிற்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (5055)
மனிதர்களுக்கு இரக்கம் காட்டுவது
மக்களுக்கு எவன் இரக்கம் காட்டவில்லையோ அவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான். நூல் : புகாரி (7376)
தர்மம்
உம்மிடம் வசதியில்லாது) உமது இறைவனின் அருளை எதிர்பார்த்திருக்கும் நிலையில் (ஏதும் கொடுக்காமல்) அவர்களைப் புறக்கணிப்பதாக இருந்தால் கடினமில்லாத சொல்லையே அவர்களுக்குக் கூறுவீராக (அல்குர்ஆன் 17:28)
அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)
பிர்அவ்னிடம் தாவா
இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான். ''அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்'' (என்றும் கூறினான் (அல்குர்ஆன் : 43 44)
சிறுவர்களிடம் நளினமாக
யூத சிறுவனிடம்
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய்விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொள் என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர் அபுல் காசிம் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள் இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்விற்கே சகல புகழும் எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள் நூல் : புகாரி (1356)
சிறுவர்களிடம் நபிகளார் நடந்து கொண்ட பண்பு
தம்மிடம் வேலை செய்பவர்களிடமும் பணிவுடன் நடந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, ''அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரிலிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், ''இதை ஏன் இப்படிச் செய்தாய்?'' என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ''ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?'' என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (2768)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் ''அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போக மாட்டேன்'' என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.
நான் புறப்பட்டுச் சென்ற போது, கடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்த போது அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
''அருமை அனúஸ! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?'' என்று கேட்டார்கள். நான், ''ஆம்! செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (4626)
மனைவிக்கு ஒரு கை உணவு ஊட்டுவது
நீ செலவழிக்கும் ஒவ்வொரு செலவுக்கும் உனக்கு நறிகூலி கொடுக்கப்படும் எந்த அளவிற்க்கென்றால் உன் மனைவியின் வாயில் நீ ஊட்டும் உணவுக கவளம் புகாட்ல்
முதல் வஹி இறங்கியதும் கதிஜா ரலி ஆறுதல் வார்தை
கதீஜா (ர) அவர்கள், ''அப்படி யொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணை யாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை)'' என்று (ஆறுதல்) சொன்னார்கள்.
புகாரி (4)
குர்பான் பங்கு வைக்கும் போது கதிஜா தோழியர்களுக்கும் பங்கு
கதீஜா (ரலி) அவர்கüன் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்கüன் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி லிஸல்லி அவர்கüடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகüல் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டு களாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகüடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகüல் நான் நபி (ஸல்) அவர்கüடம், ''உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், ''அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குண முடையவராக) இருந்தார். (இப்படி, இப்படி யெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது'' என்று பதில் சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் : புகாரி 3818
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கüடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு ...அல்லது உணவு... அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டி ருக்கிறார். அவர் உங்கüடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாüகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று சொன்னார்கள்.
புகாரி 3820 அபூஹுரைரா (ரலி) அவர்கள்
இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்கüலேயே சிறந்தவர் ஆவார். (தற்போது) உலகப் பெண்கüலேயே சிறந்தவர் கதீஜா ஆவார்.
புகாரி 3432
ஸலாம் மலர்ந்த முகத்துடன் கூறுவது
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பதும் உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி (6236)
இஸ்லாம் மக்களே தவறு செய்தாலும் அதை மண்ணித்து விடுமாறு கூறுகிறுது என்பதற்கு பின்வரும் சம்பவம் நல்ல சான்றாக உள்ளது.
பள்ளிவாசலில் ஓரு கிராமவாசி சிறுநீர் கழிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். (சஹாபாக்கள் அவரைத்தாக்க நினைக்கும் போது) அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்தப் பின் தண்ணீரை கொண்டுவரச் சொல்லி அதை அங்கு ஊற்றினார்கள்.
நூல் : புகாரி (219)