புகழ் எனும் போதை
தள்ளாத வயதில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் தந்த எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என் இறைவன் பிராத்தனையை கேட்பவன்.
(அல் குர்ஆன் 14:39)
அறிவை கொடுத்த அல்லாஹ்வை புகழ்ந்த தந்தையும் மகனும்
தாவுதுக்கும் சுலைமானுக்கும் நாமே ஞானத்தை கொடுத்தோம். தன்னை நம்பிக்கை கொண்ட அடியார்களில் மற்ற அனைவரையும் விட எங்களை சிறப்பித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். என்று கூறினர்.
(அல் குர்ஆன் 27:15)
அல்லாஹ்வை புகழும் சொர்க்க வாசிகள்
சொர்க்க சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். தங்கம் முத்து அணிகலன்கள்ஙளும் பட்டாடையும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். கவலையை எங்களுக்கு போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். எங்கள் இறைவன் மன்னிப்பவன். நன்றி பாரட்டுபவன்.
(அல்குர்ஆன் 35: 33 34)
தன் வாக்குறுதியை உண்மையாக்கி எங்களுக்கு சொர்க்க பூமியை கொடுத்து அதில் நாங்கள் விரும்பியவாறு வாழ செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் கூலி வழங்குவதில் அல்லாஹ் சிறந்தவன்.
(அல்குர்ஆன் 39: 74 )
மலக்குமார்களும் அல்லாஹ்வை புகழ்வார்கள்
(மறுமை நாளில்) மலக்குமார்கள் தங்கள் இறைவனின் புகழை துதித்தவர்களாக அர்ஷை சுற்றி சூழ்ந்து வருபவர்களாக (முஹம்மதே) காண்பீர்......
(அல் குர்ஆன் 39:75 )
அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்வை புகழ்கின்றன
வானங்கள் பூமியுள்ளவை யாவும் அல்லாஹ்வை துதிக்கின்றன. அவனுக்கே ஆட்சி அதிகாரம் அவனுக்கே அனைத்து புகழும் அவனே அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவ (அல் குர்ஆன் 64:1)
அல்லாஹ்வே தன்னை புகழும் படி நபிமார்களுக்கு கட்டளையிடுகிறான்
நூஹ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இடும் கட்டளை
நீரும் உம்மோடு இருந்தவர்களும் கப்பலில் ஏறும் போது அநியாயக்கார கூட்டத்தினரிடமிருந்து எங்களை காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று கூறுவீராக!
(அல் குர்ஆன 23: 28)
அகில உலகத்தை படைத்ததற்காக அல்லாஹ்வை புகழ வேண்டும்
வானங்களையும் பூமியையும் படைத்து இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் . பிறகு இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் இறைவனுக்கு மாறுசெய்கிறார்கள்.
(அல் குர்ஆன் 6:1)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வேதத்தை அருளியதற்காக அல்லாஹ்வை புகழ வேண்டும்
தனது அடியார் மீது இவ்வேதத்தை நேரானதாகவும், தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலி உண்டு. அதில் என்றென்றும் தங்குவார்கள் என நற்செய்தி கூறுவதற்காகவும், 'அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்' என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும், (இவ்வேதத்தை) எவ்விதக் கோணலும் இன்றி அருளிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
(அல்குர்ஆன் 18:1-4)
புற்பூண்டுகள் விளையாத நிலத்தில் பயிர்களை முளைக்க செய்ததற்காக புகழ வேண்டும்
வானத்திலிருந்து நீரை இறக்கி செத்த பூமியை அதன் மூலம் உயிரூட்டுபவன் யார்? என்று அவர்களிடத்தில் கேட்டால் அல்லாஹ் என்றே உறுதியாக கூறுவார்கள் அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் என்று (முஹம்மதே) நீர் கூறுவீராக என்றாலும் அவர்களில் அதிகாமானோர் விளங்காதவர்களாகவே உள்ளனர்.
(அல் குர்ஆன் 29:63)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிருந்து தமது முதுகை நிமிர்த்தி விட்டால் ''சமிஅல்லாஹு மன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது'' என்று கூறுவார்கள்.
(பொருள்: அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கின்றான். இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.)
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி), நூல் : முஸ்லிம் (819)
ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசல் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்கால் பட்டது. அப்போது அவர்கள் ''அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க'' என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
(பொருள்: இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திருந்தும், உன் மன்னிப் பின் மூலம் உனது தண்டனையிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவாஉன்(கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன்.
உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்துகொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்.)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :முஸ்லிம் (839)
அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வை விட ரோஷக்காரன் யாரும் இல்லை. அதனால் தான் மறைமுகமான வெளிப்படையான வெட்க்கக் கேடான செயல்களை தடுத்துள்ளான். அல்லாஹ்வை விட புகழ் விரும்பிகிறவன் யாரும் இல்லை. அதனால் தான் அவன் தன்னையே புகழ்கிறான்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல் : புகாரி 4637
இந்த புகழ் நம்மை தேடி வரக்கூடிய சமயத்தில் அல்லாஹ் குர்ஆனில் ஒரு பிராத்தனையை கற்றுத் தருகிறான்
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது (முஹம்மதே) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டகூட்டமாக நுழைவதை காணும் போது உமது இறைவனின் புகழை துதிப்பீராக அவனிடத்தில் பாவமன்னிப்பு தேடுவீராக அவன் தான் பாவங்களை மன்னிப்பவனாக இருக்கிறான்
(அல்குர்ஆன் 110:1 லி3)
தன் புகழ் பாடுவதை தவிர்க்க வேண்டும்
ஒருவர் மார்க்க சமுதாய பணிகளில் வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துருப்பார். ஆனால் அவற்றையெல்லாம் வீணாக்கும் வண்ணமாக நான் தான் இப்படி செய்தேன். அதை நான் செய்தேன். என்னால் தான் இவ்வாறு நடந்நது. என்று அல்லாஹ்வை மறந்த சொல்ல கூடிய நிலையை காண்கிறோம். இவர்களுக்கு அல்லாஹ் ஒரு எச்சரிக்கைகைய விடுக்கிறேன்.
நம்பிக்கை கொண்டோர்களே அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பால் மக்களுக்கு காட்டுவதற்காக தன்னுடைய செல்வத்தை செலவிடுபவனை போல உங்கள் தர்மத்தை சொல்லிக் காட்டியும் தொல்லைபடுத்தியும் வீணாக்காதீர்கள்.இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்த ஒரு வழுக்கு பாறை. அதன் மேல் மழை வீழ்ந்து அதனை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தாம் பாடுபட்ட எதற்கும் அவர்கள் சக்தி பெறமாட்டர்கள். அல்லாஹ்வை மறுக்கும் கூட்டத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.
(அல்குர்ஆன் 2: 264)
.உங்களை நீங்களே பரிசுத்தமாக கருதிக் கொள்ளாதீர்கள் இறையச்சமுடையவர்களை அவன் (அல்லாஹ்) அறிவான்
(அல்குர்ஆன் 53: 32)
பெயர் வைப்பதிலும் தனி மனித புகழ் கூடாது
முஹம்மத் இப்னு அம்ர் அவர்கள் கூறுகிறார்கள்
நான் என் பெண் பிள்ளைக்கு பர்ரா (நல்லவள்) என்று பெயரிட்டுருந்தேன். அப்போது ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள் : நபி(ஸல் )அவர்கள் இவ்வாறு பெயர் வைப்பதை தடுத்துள்ளார்கள். எனக்கும் பர்ரா (நல்லவள்) என்ற பெயர் தான் இடப்பட்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்களை நீங்களே பரிசுத்தமாக கருதாதீர்கள். உங்களில் நல்லவர்களை அல்லாஹ் அறிவான்.என்று கூறினார்கள். அதற்கவர்கள் நாங்கள் இவளுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்என்று கேட்டார்கள் .அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீங்கள் இவளுக்ஸைனப் என்று பெயர் வையுங்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 3992
பிறர் புகழ் பாடுதல்
நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை புகழ்ந்தார்.அப்போது நபி(ஸல்) அவர்கள் நீ நாசமாகுவாய் உன் சகோதரரின் கழுத்தைவெட்டிவி ட்டாயே என்று மூன்று முறை கூறிவிட்டு உங்களில் ஒருவர் தன் சகோதரனை புகழ்பவராக இருந்தால் எவ்வித சந்தேகமுமில்லாமல் நான் இவரை இவ்வாறு முடிவுசெய்கிறேன்.அல்லாஹ்வே அவற்றை பற்றி முடிவுசெய்பவன் . நான் அல்லாஹ்விடத்தில் யாரையும் பரிசுத்தவனாக ஆக்கமாட்டேன். அல்லாஹ்வே அவரை பற்றி அறிபவனாக இருப்பதால் அவரை இவ்வாறு முடிவுசெய்கிறேன். என்று சொல்லட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ பக்ரா (ரலி), நூல் : புகாரி 2662
பிறர் புகழ் பாடுவோரின் முகத்தில் மண்ணை வார நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
ஹம்மாம் இப்னு ஹாரிஸ் அவர்கள் கூறுகிறார்கள்:
உஸ்மான் (ரலி) அவர்களை ஒரு மனிதர் புகழலானார். அப்போது மிக்தாத் (ரலி) அவர்கள் வந்து தன் மூட்டு காலில் உட்கார்ந்தார்கள். அந்த மனிதரோ உடல் பருமனாக இருந்தார். அப்போது அந்த மனிதரின் முகத்தில் மிக்தாத் (ரலி) அவர்கள் சிறு கற் துண்டுகளை வீசலானார்கள். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் அவரிடத்தில் நீர் என்ன செய்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள் நீங்கள் புகழ்பவர்களை பார்த்தால் அவர்களுடைய முகத்தில் மண்ணை வாரித்தட்டுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் . என்றார்கள் நூல் : முஸ்லிம் 5323