அரவணைப்போம் அண்டைவீட்டாரை
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 4:36)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ,
(பிறர் மீது) கெட்ட எண்ணம்கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சு கüலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்ற வர்கüன் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா(ரலி)புகாரி (5144),முஸ்லிம் (5008)
உலகில் (நியாமின்றி) வேதனை செய்பவனை அல்லாஹ் (மறுமையில்) வேதனை செய்வான் .
அறிவிப்பவர் : நூல் : முஸ்லிம் 5095
அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் இல்லை . அல்லாஹ்வின் மீதாணையாக ! அவன் இறை நம்பிக்கையாளன் இல்லை . அல்லாஹ்வின் மீதாணையாக ! அவன் இறை நம்பிக்கையாளன் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அல்லாஹ்வின் தூதரே ! யார் அவன் ? என்று கேட்கப்பட்டது .எவனுடைய தீங்கிலிருந்து அவனது அண்டை வீட்டார் பாதுகாப்பெறவில்லையோ அவன்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர் : ஷூரைஹ் நூல் : புகாரி 6016
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் . இறை நம்பிக்கை கொள்ளாதவரை சொர்க்கத்தில் நுழைய முடியாது . ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை இறை நம்பிக்கையாளராக முடியாது உங்களுக்கிடையே நேசத்தை வளர்க்கும் செயல் ஒன்றை சொல்லட்டுமா ? உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள் .
அறிவிப்பவர் : அபுஹூரைரா (ரலி)நூல் : முஸ்லிம் 93
அல்லாஹ்வின் தூதரே எனக்கு இரண்டு அண்டை வீட்டார்கள் உள்ளனர் . அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது ? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் . இருவரில் யார் வீட்டு வாசல் நெருக்கமாக உள்ளதோ அவருக்குத்தான் என்று பதிலளித்தார்கள் .
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : புகாரி (6020)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அபூதர்ரே நீர் குழம்பை (சால்னா) சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்துவீராக . அதனைக் கொண்டு உம் அண்டை வீட்டுக்காரர்களைக் கவனித்துக் கொள்வீராக .
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : முஸ்லிம் (5121)
இருக்கக் கூடாத பண்புகள் :
அதற்காக தண்ணீரை அதிகப் படுத்தி பழைய சாதம் , பழைய குழம்புகளை அண்டை வீட்டாருக்குக் கொடுக்கக் கூடாது . ஏனெனில் தமக்கு விரும்புவதைத்தான் பிறருக்கும் விரும்வார் உண்மையான முஸ்லிம் .
தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாதவரை ஒருவர் உண்மையான முஃமினாக ஆகமாட்டார்
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)நூல் : புகாரி 13
நபி (ஸல்) அவர்கள் , சாபத்திற்குரிய இரண்டைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள் . உடனே ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே சாபத்திற்குரியவை எவை ? என்று கேட்டனர் . மக்களின் நடைபாதையிலோ , நிழல் தரும் இடங்களிலோ மலம் கழிப்பது எனக் கூறினார்கள் .
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 448
ஒரு ஆட்டின் குழம்பைக் கொண்டாவது உனது அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்து . இழிவாக யாரையும் எண்ணக் கூடாது என்றும் சொன்னார்கள் .
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் , அண்டை வீட்டுக்காரரை எங்கு வாரிசாக ஆக்கிவிடுவார்களோ என்று பயப்படுமளவுக்கு அண்டை வீட்டாரின் நலன்களை பேணுவதைப் பற்றி கூறிக்கொண்டே இருந்தார்கள் .
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உம நூல் : புகாரி (6014)