முகமன் கூறுதல்
இந்த உலகத்தில் எண்ணிலடங்கா உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த ஜீவராசிகளில் மனிதன் பகுத்தறிவு என்ற தனித்தன்மையை பெற்றுள்ளான். இதன் மூலம் மற்ற அனைத்து உயிரினங்களை விட அவன் மேலோங்கி நிற்கின்றான்.
மற்ற உயிரினங்களைப் போன்று மனிதன் வாழக் கூடாது என்று உலக மக்கள் அனைவரும் ஒருமித்து நம்புகின்றனர். மிருகங்கள், கால்நடைகள், தனக்கென்று ஒரு வழிமுறையை நிர்ணயித்துக் கொண்டு செயல்படுவதில்லை.
மகன் எக்காலத்திலும் மகனாகவே இருக்க வேண்டும். தாய் எக்காலத்திலும் தாயாகவே இருக்க வேண்டும் என்ற நியதி நம்மில் உள்ளது. ஆனால் அவைகளில் பெற்றெடுத்த குட்டியை ஜோடியாக ஆக்கிக் கொள்ளும் வழமை உள்ளது. சாப்படுவதற்கோ, மலம்ஜலம் கழிப்பதற்கோ, துயில்வதற்கோ, பிறரிடம் பழகுவதற்கோ எந்த ஒழுங்குமுறையையும் அவற்றின் வாழ்வில் நாம் காண இயலாது. அவற்றை விட உயர்ந்தவனான மனிதன் அவைகளைப் போன்று தன் வாழ்வின் அங்கங்களை முறையின்றி அமைத்துக் கொண்டால் அவற்றுக்கும் இவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். பகுத்தறிவுக்கு அர்த்தம் இருக்காது.
ஆகவே தூய இஸ்லாமிய மார்க்கம் மனிதன் தன் வாழ்கையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அற்புதமானமுறையில் விளக்கியுள்ளது. அவனது வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நடந்து கொள்ள வேண்டிய விதத்தை விவரித்துள்ளது. இஸ்லாம் கூறும் வாழ்வியல் நெறிகளைப் பற்றி ஒவ்வொன்றாக இனி காண்போம். முதல் சலாத்தைப் பற்றி அறிந்துகொள்வோம். பல்வேறு விஷயங்களுக்கு வழிகாட்டும் இஸ்லாம் ஒருவரை சந்திக்கும் போது அவருக்கு சலாம் சொல்ல வேண்டும் என்ற வழிமுறையை காட்டித்தந்துள்ளது. இந்த சலாத்தைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
இன்று நடைமுறையில் ஒருவரை சந்திக்கும் போது பலவிதமான வார்த்தைகளால் வாழ்த்தப்டுகிறது. குட்மார்னிங், (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங், (நல்ல மாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்நைட், (நல்ல இரவாக இருக்கட்டும்) வணக்கம் ஆகிய வார்த்தைகளால் மக்கள் வாழ்த்திவருகிறார்கள். இந்த வார்த்தைகளை துக்கம் நிறைந்த ஒருவனிடம் கூற இயலாது. சுனாமியில் குடும்பத்தை இழந்த ஒருவனுக்கு நல்லகாலைப் பொழுது உண்டாகட்டும் என்று கூற இயலாது.
அதுமட்டுமின்றி காலையில் சொன்ன வாழ்த்தை மாலையில் சொல்ல முடியாது. மாலையில் கூறிய வாழ்த்தை இரவில் கூற இயலாது. வணக்கம் என்று நாம் கூறும் போது நம்முடைய சுயமரியாதை அங்கு சீர்குலைகிறது. பிறருக்கு முன் தாழக்கூடிய ஒருநிலை ஏற்படுகிறது. நமது நபி நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ற வாழ்த்து இன்பத்தில் திளைத்தவனுக்கும் பொருந்தும். துன்பத்தில் உழலுபவனுக்கும் பொருந்தும். இதைக் கூறுவதால் யாருடைய சுயகௌரவத்திற்கும் எந்த பங்கமும் ஏற்படாது. நல்ல உறவு ஏற்படுவதற்கு ஒருபாலமாக சலாம் அமைந்திருக்கிறது.
சலாத்தின் சிறப்பு
சலாம் சொல்வதின் நோக்கம் பிறர் நலம் பேணுவதாகும். பிறர் நலமுட.ன் வாழ வேண்டும் என்ற நோக்கிலே உங்கள் மீத சாந்தி உண்டாகட்டும் என்று கூýறப்படுகின்றது. பெரும்பாலான மக்கள், தான் நன்றாக மகிழ்சியாக சீறும்சிறப்போடும் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்களோ இல்லையோ பிறர் முன்னேறுவதை அவர்கள் விரும்புவதில்லை. இந்த தீய எண்ணத்தினால் சண்டைகளும் பிரச்சனைகளும் நடந்தேறுகிறது. இந்த நச்சு எண்ணத்தை அடியோடு ஒழிப்பதற்காக மார்க்கம் சலாத்தை பரப்பும் படி நமக்கு கூறுகிறது. இஸ்லாத்தில் சொல்லப்பட்ட நல்லகாரியங்களில் மிகச் சிறந்த காரியம் சலாம் என்று நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்த காரியம் எது என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஏழைகளுக்கு) நீ உணவழிப்பது. நீ அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் கூறுவது என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)
''இப்ராஹீமே எனது கடவுள் களையே நீ அலட்சியப் படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளா விட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!'' என்று (தந்தை) கூறினார். (ஸலாமுன் அலை(க்)க) ''உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 19:47)
பதில் ஸலாம் சொல்லும் முறை
நமக்கு ஒருவர் சலாம் சொன்னால் அவர் சொன்னதையை மீண்டும் அவருக்கு சலாமாக சொல்லலாம். அல்லது அவர் கூறியதைவிட ஹதீஸில் கூறப்பட்டுள்ள சில வார்த்தைகளை இணைத்தும் கூறலாம். உதாரணமாக ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று நமக்கு சலாம் கூறினால் நாம் அவருக்கு வஅலைக்குமுஸ் ஸலாம் என்று அதையே திருப்பிக் கூறலாம். அல்லது அவர் கூறியதை விட கூடுதலாக வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ (உங்கள் மீதும் சாந்தியும் அவனது அருளும் அவனது அபிவிருத்தியும் உண்டாகட்டும்) என்று கூறலாம். இவ்விரண்டு முறையில் சலாம் கூறுவதற்கு பின்வரும் வசனமும் நபிமொழியும் வழிகாட்டுகிறது.
உங்களுக்கு வாழ்த்துக் கூறப் பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்கு கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது (இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்துவிட்டது) என்று கூýறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்துகொண்டார். அப்போது (இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்துவிட்டது) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூþþ என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்துவிட்டது) என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூஸைன்(ரலி) நூல்: திர்மிதீ (2613)
அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூஸைன்(ரலி) நூல்: திர்மிதீ (2613)
சலாம் சொல்வதில் முந்துதல்
பிறர் தனக்கு சலாம் சொல்லிய பிறகு நாம் சலாம் சொல்ல வேண்டும் என்று நம்மில் பெரும்பாலோர் நினைக்கின்றார்கள். முதல் சலாம் கூறுவது மரியாதைக் குறைவாகும் என்ற எண்ணமே இதற்கு காரணம். இன்னும் பலர் பிறர் சலாம் சொல்லவதை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்களேத் தவிர தானாக முன்வந்து சலாம் சொல்மாட்டார்கள். மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வை களையெடுப்பது சலாத்தின் முக்கியமாக நோக்கமாக இருக்க இதிலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாகுபட்டைக் காண்கிறோம். ஆனால் முதல் சாலாம் கூறுபவர் அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவராக கணிக்கப்படுவார்..
சிறிய சிறிய சண்டைகளுக்காக நாட்கணக்கில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடத்தில் பேசாமல் இருக்கிறோம். பல நாட்கள் கழித்து நட்பைத் தொடர்வதற்கு நாம் தாயாரானாலும் நாம் முதல் ஏன் செல்ல வேண்டும். அவன் வரட்டும். பிறகு நாம் பேசுவோம் என்று கருதுகிறோம். இது போன்ற சூழ்நிலையில் எல்லோரும் இதையே எண்ணுகிறோம். ஆனால் அல்லாஹ், சலாம் கூறுவதில் முந்துவதையே நண்மையாக எண்ணுகிறான்.
மூன்று நாட்களுக்கு மேல் தன்னுடைய சகோதரனை வெறுப்பது எந்த முஸ்மிற்கும் ஆகுமானதல்ல. அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து (முகத்தை) திருப்பிக் கொள்கிறார்கள். அவ்விருவரில் முதல் சலாத்தை ஆரம்பம் செய்பவரே சிறந்தவர்.
அறிவிப்பாளர்: அபூ அய்யூபில் அன்சாரி (ரலி) நூல்: புகாரீ (6077)
அறிவிப்பாளர்: அபூ அய்யூபில் அன்சாரி (ரலி) நூல்: புகாரீ (6077)
அல்லாஹ்விடத்தில் (அருளுக்கு) மக்களில் தகுதியானவர் அவர்களில் முதல் சலாத்தை ஆரம்பம் செய்பவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரலி)நூல்: அபூதாவூத் (4522)
அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரலி)நூல்: அபூதாவூத் (4522)
முதல் சலாம் சொல்ல ஏற்றவர்
பொதுவாக யார் வேண்டுமானாலும் முதல் சலாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் சில சூழ்நிலைகளில் குறிப்பிட்ட சிலர் சலாத்தை துவங்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் ஒரு முறையை காட்டித்தந்துள்ளார்கள்.
சிறியவர் பெரியவருக்கும் நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் குறைவானவர்கள் அதிகமானவர்களுக்கும் சலாம் சொல்வர்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6231)
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6231)
வாகனத்தில் இருப்பவர் நடந்துசெல்பவருக்கும் நடந்துசெல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் குறைவானவர் அதிகமானவருக்கும் சலாம் சொல்வர்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6232)
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6232)
இதற்கு மாறாக நன்மையில் முந்த வேண்டும் என்று விரும்பி முதல் சலாமைத் துவக்கினால் அது குற்றமாகாது. ஏனெனில் முதல் சலாம் சொல்பவர் சிறந்தவர் என்று ஹதீஸ் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுக்கு முதல் சலாம் கூறுபவராகவும் இருந்துள்ளார்கள்.
அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் சிறார்களை கடந்து செல்லும் போது அவர்களுக்கு சலாம் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் இதை (வழைமையாக) செய்துவந்தார்கள் எனக் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாக் (ரலி) நூல்: புகாரி (6247)
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாக் (ரலி) நூல்: புகாரி (6247)
பெண்களுக்கு ஆண்கள் ஸலாம் சொல்வது
ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் சலாம் கூறிக்கொள்ளலாம். சலாம் என்பதை சிலர் ஆண்களுக்குள் சொல்ல வேண்டியது என்று தவறாக புரிந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு சலாம் கூறியுள்ளார்கள். பெண்களும் நபியவர்களுக்கு சலாம் கூறியுள்ளார்கள்.
மக்கா வெற்றி ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் குளித்துக் கொண்டிருக்க அவர்களது புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவர்களுக்கு சலாம் (முகமன்) சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் யார் அது? என்று கேட்டார்கள். நான் அபூதாபின் மகளான உம்மு ஹானிஃ என்று பதிலளித்தேன். உடனே நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹானியே வருக எனக் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உம்மு ஹானிஃ (ரலி) நூல்: புகாரி (6158)
அறிவிப்பாளர்: உம்மு ஹானிஃ (ரலி) நூல்: புகாரி (6158)
எங்களில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் தமது விளை நிலத்தின் வாய்க்கால் ஓரத்தில் ஒரு வகையை கீரைச் செடியைப் பயிரிடுவார். வெள்ளிக் கிழமை வந்துவிட்டால் வேருடன் அந்தச் செடியைப் பிடுங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் போடுவார்.பிறகு அதன் மீது கோதுமையில் ஒரு கைப்பிடி அளவு போட்டு அரைப்பார். அந்தக் கீரைச் செடியின் தண்டுப் பகுதிதான் அந்த உணவுக்கே மாமிசம் போல் அமையும். நாங்கள் ஜுýமுஆத் தொழுது விட்டுத் திரும்பி அவருக்கு ஸலாம் கூறுவோம். அவர் எங்களுக்கு உணவு படைப்பார். அதை நாங்கள் விழுங்குவோம். அவரது இந்த உணவுக்காக நாங்கள் ஜுமுஆ நாளை விரும்புவோம்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரீ (938)
நன்றி: துபை TNTJ
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரீ (938)
நன்றி: துபை TNTJ