திங்கள், 23 ஜூன், 2014

QITC யின் இரத்ததான சேவைக்காக ஹமத் மெடிக்கல் கார்ப்பரேசன் (HMC) வழங்கிய பரிசு 11/06/14


அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் கடந்த பத்து வருடங்களாக சிறப்பான முறையில் ஹமாத் மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாமை நடத்தி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் இரத்ததானம் செய்துள்ளார்கள்.

மேலும் பல் வேறு தொண்டு அமைப்புகளும், தொழில் நிறுவனங்களும் , தொடர் இரத்ததானம் செய்து வரும் தனி நபர்களுக்கும், கத்தர் முழுமைக்கும் தேவைப் படும் இரத்தம் சேமிப்பில் தொய்வில்லாமல் பங்காற்றி வருகின்றார்கள்.

இச்சேவையை பாராட்டி இவ்வருடம் ஹமாத் மருத்துவ மனையின் இரத்த வங்கி " ஜூன் 14, “Safe Blood for Saving Mothers உலக தாய்மார்களை பாதுகாக்க பாதுகாப்பான இரத்தம் வழங்குவோம்" தினத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை 11-06-2014 அன்று St Regis Hotel லில் ஏற்பாடு செய்திருந்தது. குருதி கொடை பங்களிப்பில் மற்ற வெளிநாட்டு அமைப்புகள் காட்டிலும் தர வரிசை பட்டியலில் அதிக எண்ணிகையில் இரத்ததானம் செய்த கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தினை முதலாவதாக மேடைக்கு அழைத்தார்கள். கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சார்பாக மண்டல தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் கேடயத்தை பெற்றுக்கொண்டார்கள். இரத்ததானத்தில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்ந்ததன் முக்கிய காரணியாக அமைந்தது தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத். இன்ஷா அல்லாஹ் அது போல் கத்தரிலும் QITC முழு வீச்சில் செயல் பட இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

அல்ஹம்துலில்லாஹ்.