கடந்த 31-01-2014 வெள்ளிகிழமை அன்று கத்தர் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள். வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர் ஹமாத் மருத்துவ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் இரத்ததான ஊர்தியில் அனுமதிக்கப்பட்டனர்.
பிற்பகல் இரண்டு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு பத்து மணிவரை நடைபெற்றது. தானம் அளித்த அனைத்து சகோதர்களுக்கும் ஜூஸ், கேக், பழங்கள் வழங்கப்பட்டது. மேலும் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் 2014 காலேண்டர் இலவசமாக வழங்கப்பட்டது. அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் 103 நூற்றி மூன்று நபர்கள் குருதி கொடையளித்தார்கள். இதில் ஒரு சகோதரியும் அடங்குவர். ஹமாத் மருத்துவ மனை இரத்த வங்கி குழு, இம்முகாமை "MEGA BLOOD DONATION CAMPAIGN" என்று சான்று அளித்து சென்றார்கள். அல் ஹம்துலில்லாஹ்!
நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற, ஹமாத் மருத்துவ இரத்த வங்கி, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வாளர்கள் என 11 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் ஆறு படுக்கை கொண்ட அதி நவீன பேருந்தையும், QITC மர்கஸ்க்கு அனுப்பி, இரத்ததான முகாமை மாபெரும் இரத்ததான முகமாகக் செய்ய உதவியது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக, குருதி கொடையளித்த சகோதர்களுக்கும், ஹமாத் மருத்துவ மனைக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.