சனி, 15 பிப்ரவரி, 2014

14-02-2014 அல் கோர் கம்யுனிடி கிளையில் சிறுவர்கள் குர் அன் மனன போட்டி மற்றும் தர்பியா



14-02-2014 கத்தர் மண்டல அல் கோர் கம்யுனிடி கிளையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்கள் குர் அன் மனன போட்டி மற்றும் தர்பியா நடைபெற்றது. அல் கிளை பொறுப்பாளர் சகோதரர் நைனா முஹம்மத் தலைமையில், மண்டல செயலாளர் முஹம்மத் அலி தொடங்கி வைத்தார்கள். இறையச்சம் பேணுவோம் என்ற தலைப்பில் மௌலவி அப்துஸ் சமது மதனீ அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.
அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் அல் கோர் கம்யுனிட்டி வளாகத்தில் சிறுவர் களுக்கான குர் அன் ஓதும் பயிற்சி வகுப்பை, கத்தர் மண்டல தாயி சகோதரர் மனாஸ் பயானி அவர்கள் நடத்தி வருகிறார்கள். இதில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயின்று வருகிறார்கள். குர் ஆன் பயிற்சியுடன், து ஆக்கள் மனனம் செய்வது, பயான் செய்ய பழகுவது, மற்றும் தொழுகை பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாணவன் உகஷா "தொழுகை செயல் முறை பயிற்சியையும்", மாணவன் அம்மார் "அரபு எழுத்துகள் உச்சரிப்பு" பற்றியும், மாணவன் அஷரப் "தூங்குவது ஒழுங்குகள்" பற்றியும், மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் மாணவன் முஸ்தாக், மாணவிகள் ரசீனா, வாஜிதா உரையாற்றினார்கள். பின்பு போட்டியில் வென்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அடுத்ததாக தர்பியா வகுப்பு நடத்தப்பட்டது. இதில் இஸ்லாத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் என்ற தலைப்பில் மௌலவி மனாஸ் பயானி அவர்களும், "குர் ஆனும் ஹதீசும்" என்ற தலைப்பில் மௌலவி தமீம் அவர்களும் உரையாற்றினார்கள்.
மண்டல தலைவர் மஸ் ஊத் அவர்கள் உலக கல்வியுடன் மார்க்க கல்வியும் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டிய கட்டாயத்தையும் விளக்கி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சகோதரர் நஸீர் அவர்ககள் அறிவிப்புகள் செய்தார்கள். இறுதியாக சகோதரர் இப்ராஹீம் நன்றி உரையாற்றினார்கள். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல் ஹம்துலில்லாஹ் !






مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com