புதன், 3 டிசம்பர், 2014

கத்தர் மண்டலம் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்களில் 160 யூனிட்டுகள் இரத்ததானம்




"தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" என்ற ஒற்றை அஜெண்டாவில் கத்தர் மண்டலம் சார்பாக நடைபெற்ற இரத்தான முகாம்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு, 160 இரத்த யூனிட்டுகள் வழங்கினார்கள். 

கத்தர் மண்டலம் நடத்திய இரத்ததான முகாம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

ஹமத் மெடிக்கல் நிறுவனமும் கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை ஒரு மாத காலம் முழுவதும் நடத்தியது. 

தமிழகம் மற்றும் நாடு தழுவிய அளவிலும், இன்னும் இலங்கை மற்றும் வளைகுடாவிலும் அமைதியான அதே சமயத்தில் ஆணித்தரமாகவும் வரலாற்று சிறப்பு மிக்க கருத்து ஒன்று முஸ்லிம் அல்லாத ஏனைய சமுதாய மக்களிடம் பதிவு செயப்பட்டது.

இதற்க்கு காரணம், ஊடகங்களின் அகராதியில் தீவிரவாதத்திற்கு அர்த்தம் முஸ்லிம்கள் என்று பரப்படும் மிகைபடுத்தபட்ட பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லிம்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நியாயமான உணர்வுகள் மதிப்பளிக்கப்படாமல், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் அல்லல்கள், துயரங்கள் முக்கிய ஊடகங்களில் வெளிக்கொணரப்படாமல், அப்படியே செய்திகள் வந்தாலும் சிறிய பெட்டி செய்தியில் அடங்கிவிடுகிறது. இத்தகைய தவறாக சித்தரிக்கும் ஊடகங்களின் போக்கு மாற்றப்பட வேண்டும், இஸ்லாத்தின் மேல் உள்ள தவறான எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதால் நாம் "தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தை" நமது அமைப்பு கையில் எடுத்துள்ளது என்று விளக்கி கூறி, பஞ்சம் பொழைக்க வந்த வளைகுடா நாடுகளில் அண்ணன் தம்பிகளாக பழகும் இக்காலகட்டத்தில், முஸ்லிம்களை பற்றி புரிந்துகொள்ளுங்கள் என்று அவர்களை நாம் நடத்தும் இரத்ததானம் முகாமிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தோம்.

மாநில பேச்சாளர் மற்றும் மண்டல நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம்

தமிழகத்திலிருந்து வருகை தந்த மாநில பேச்சாளர் சகோதரர் அஷரப்தீன் பிர்தௌசி அவர்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆற்றிவரும் பல் வேறு சமுதாய பணிகளை பற்றியும், தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் அவசியத்தை பற்றியும் அவர்கள் செல்லும் எல்லா சொற்பொழிவுகளிலும் எடுத்துகூறினார்கள்.

வளைகுடாவில் வாழும் இந்திய பெரும்பான்மை மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில், ஹிந்தி, மலையாளம், உருது, தமிழ், ஆங்கில மொழிகளிலும் மற்றும் இலங்கை சிங்கள சகோதர்களுக்கு சிங்கள மொழியிலும் நோட்டீஸ் தயார் செய்து, நான்காயிரம் நோட்டீஸ் அச்சடித்து விநியோகிக்கப்பட்டது.

அவ்வகையில் கடந்த மாதம் அக்டோபர் 17ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின், சனையா கிளையில் முதன் முறையாக இரத்ததான முகாம் தொடங்கப்பட்டது. கொள்கை சகோதரர்கள் பம்பரமாக செயல்பட்டு, பல் வேறு தொழிலாளர் கேம்புகளிலும் மற்றும் பெரிய வணிக வளாகங்களிலும் இரத்தான நோட்டீஸ் வழங்கினார்கள்.

சிறுச்சிறு குழுவாக பிற மத சகோதரர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முஸ்லிம்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள், இஸ்லாம் அமைதியை போதிக்கின்றது என்றும், அதனையொட்டி கத்தர் மண்டலம் சார்பாக நடைபெறும் இரத்ததான முகாம் பற்றியும் சொன்னார்கள்

சனையா கிளை சகோதரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்துக்கொண்டார்கள், இவர்களில் 35 யூனிட்டுகள் இரத்ததானம் அளித்தார்கள்.

சனையா கிளை பொருப்பாளர்கள் சகோதரர் தாவூத் அவர்களும், சகோதரர் ரபீக் அவர்களும் சனையாவின் அனைத்து பகுதிகளுக்கும் துண்டு பிரசுரங்கள் தமிழ், மலையாளம், ஹிந்தி, சிங்களம் ஆகிய நான்கு மொழிகளிலும் விநியோகம் செய்தார்கள்.

அக்டோபர் 31 ஆம் தேதி, லக்தா கிளை, மைதர் கிளை, கரபா கிளை ஆகிய சகோதர்கள் 22 பேர் இரத்ததானம் செய்தார்கள்.

பின்னர் நவம்பர் 6 ஆம் தேதி அபூஹமூர் பலதியா முனிசிபாலிடி கேம்பில், 78 சகோதரர்கள் கலந்துகொண்டார்கள், இதில் 38 யூனிட்tuகள் இரத்ததானம் அளிக்கபட்டது. அபூஹமூர் கிளை பொருப்பாளர் சகோதரர் சம்சுதீன் அனைத்து ஊழியர் குடியிருப்புகளிலும் நான்கு மொழிகளில் நோட்டிஸ் வினயோகித்தார்கள்.

இறுதியாக நவம்பர் 14ஆம் தேதி துமமாவில், 150க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தன்னார்வத்துடன் ஜும்மா தொழுகைக்கு பிறகு மர்கசில் வந்து குவிந்தார்கள். அனைவருக்கும் மதியம் உணவு உபசரிப்புடன், பெயர் பதிவு நடத்தப்பட்டது. சரியாக 3 மணிக்கு ஹமத் மருத்துவ மனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய 10பேர் கொண்டு குழு இரத்ததானத்திற்கு முன், கொடையளிகளிடம் உடல் பரிசோதனைகள் செய்தார்கள். உடல் ஆரோக்கியம், இரத்த கொதிப்பு, ஹீமோகுளோபின் பரிசோதனை போன்ற உடல் பரிசோதனைக்குப் பின் தகுதியானவர்களை மட்டும் இரத்ததானம் கொடுக்க தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். 68 சகோதர்கள் குருதி கொடையளித்தார்கள்.

ஹமத் மெடிக்கல் நிறுவனம் பாராட்டு

கத்தரில் தொடர்ச்சியாக ஒரு மாதம் முழுவதும் இது போன்ற இரத்ததான முகாமை வெளிநாட்டு அமைப்பினர் யாரும் செய்யவில்லை என்று ஹமத் இரத்த வங்கி மருத்துவர்கள் பாராட்டினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...  எல்லா புகழும் ஏக இறைவனுக்கே... 







தமிழகத்தில் TNTJ நடத்திய தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் 2014 - ஒரு தொகுப்பு


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

புதன், 12 நவம்பர், 2014

QITC - இரத்த தான முகாம் 14/11/2014 வெள்ளிக்கிழமை மதியம் 2 முதல் 8 வரை


QITC - இரத்த தான முகாம்


நாள்: 14/11/2014 வெள்ளிக்கிழமை மதியம் 2 முதல் 8 வரை

இடம்: QITC மர்கஸில் - LG ஷோரூம் பின்புரம் துமாமா


கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே!

ஒரு மாத கால தீவிரவாத எதிர்பபு பிரச்சாரம் நிறைவின் ஒரு பகுதியாக இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.

அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

"உதிரம் கொடுப்போம் மனித உயிர்களை காப்போம்"

"ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்"

"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"  - அல் குர்ஆன்: 5:32

உலக மக்களை வாழவைத்த வாய்ப்பை  நழுவ விடவேண்டாம் !

குறிப்பு : மதிய உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது

தொடர்புக்கு: QITC  44315863, 66963393, 70453598


QITC-Blood Donation Campaign


Date: 14/11/2014 Friday 2:00 pm to 8:00 pm

Venue: QITC Markaz.behind LG show room Thumama


Dear Brothers & Sisters,

We invite you all to participate in this life saving program

" GIVE BLOOD SAVE LIFE "

Note: Lunch (food) Arranged




புதன், 29 அக்டோபர், 2014

கத்தர் மண்டல மர்கஸில் 24-10-14 அன்று நடைப்பெற்ற சிறப்பு தர்பியா வகுப்பு

ஏக இறைவனின் திருப்பெயரால்...

கத்தர் மண்டல மர்கஸில் 24-10-14 அன்று சிறப்பு தர்பியா வகுப்பு நடைப்பெற்றது. 

சகோதரர் மனாஸ் பயானி அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் சகோதரர் அஷரப் தீன் அவர்கள், "தெரிந்த செய்திகளும் தெரியாத உண்மைகளும்" என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடத்தினார்கள்.





கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax: +974 4431 5863
Mobile: 5553 2718, 6657 9598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

திங்கள், 20 அக்டோபர், 2014

"மனிதநேய மார்க்கம் இஸ்லாம்"

ஏக இறைவனின் திருப்பெயரால்…

"மனிதநேய மார்க்கம் இஸ்லாம்"

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும்.

மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல. மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஒரு தாய் மக்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும். இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது. மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன் 39:13

இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.

பிறருக்கு உதவு

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரீ 1445

ஏழையும் இறைவனும்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).நூல்: முஸ்லிம் (4661)

மனிதர்களிடம் இரக்கம்

மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7376

போரில் மனித நேயம்

போர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.

நடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.

இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

அறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.



வியாழன், 16 அக்டோபர், 2014

மாபெரும் இரத்ததான முகாம் - சனையா 17-10-14

بسم الله الرحمن الرحيم

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!

இன்ஷா அல்லாஹ்

17/10/2014 அன்று வெள்ளிக்கிழமை மதியம் 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சனையா அல் அதிய்யா மஸ்ஜிதுக்கு முன்பாக

மாபெரும் இரத்ததான முகாம்

நடைபெற உள்ளது.  

சிறப்பு விருந்தினர்: தாயகத்திலிறுந்து வருகை தந்துள்ள
மவ்லவி அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி 

மாநில பேச்சாளர் - TNTJ

அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து, மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.

குறிப்பு:
 1.அனைவர்களையும் அழைத்து வரலாம் .
2. வரும் போது, ஐ.டீ.கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஹெல்த் கார்டு -ஆகியவற்றில் ஒன்றை மறவாமல் கொண்டுவரவும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:-
4431 5863 / 5553 2718 / 6657 9598

"ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" - அல் குர்ஆன் :5:32

இரத்ததான முகாம் - 17/10/14 - சனையா





கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax: +974 4431 5863
Mobile: 5553 2718, 6657 9598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

செவ்வாய், 14 அக்டோபர், 2014

"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்"

ஏக இறைவனின் திருப்பெயரால்…

"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்"

இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம் என்பதாகும். ஸலாம் என்றால் அமைதி அடைதல், பாதுகாப்புப் பெறுதல் என்பது இதன் பொருள். இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுப்படுதல் என்று பொருள்.
அதாவது படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை இது குறிக்கின்றது. இதன்படி, படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர் முஸ்லிம் ஆவார். பெயர் அடிப்படையில் இஸ்லாம் வன்முறைக்கு அப்பாற்பட்டது; அந்நியப்பட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமையோ, பிற சமுதாயத்தவரையோ சந்திக்கும் போது கூறுகின்ற முகமன், “அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதாகும். பதிலுக்கு அவர், “வ அலைக்கும் ஸலாம்’ என்று கூறுவார். இந்த இரண்டு வாசகங்களுக்கும் பொருள், “உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக!’ என்பதாகும்.
முகத்துக்கு நேராகச் சந்திக்கும் போதும், மறைமுகமாக தொலைபேசி, இணையதளம் போன்ற ஊடகங்களின் வழியாகவும் தெரிவிக்கின்ற வாழ்த்துக்களில் முஸ்லிம்கள் பரப்புவது இந்த அமைதியைத் தான்.
இஸ்லாத்தில் சிறந்த செயல் எது? என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதிலைப் பாருங்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 12
இஸ்லாத்தில் சிறந்தது எது என்ற கேள்விக்கு முதலாவதாக, பசித்தோருக்கு உணவளித்தல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறுகின்றார்கள். இதில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற பாரபட்சம் இல்லை.
இரண்டாவதாக, முஸ்லிம், பிற மதத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஸலாம் எனும் வாழ்த்தைக் கூறி அமைதியைப் பரப்பச் சொல்கின்றார்கள்.
ஒருவர் தனக்குக் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருப்பார். அவரை நோக்கி, ‘உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. ஒருவர் தனது குழந்தை இறந்து விட்ட சோகத்தில் இருப்பார். அவரிடமும், “உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. இப்படி இன்பம், துன்பம் என எந்த நிலையில் இருந்தாலும் அனைவர் மீதும் ஸலாம் எனும் அமைதியைப் பரப்பச் சொல்கின்றது இஸ்லாமிய மார்க்கம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான’ அல்லது “அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 51
மக்களுக்கு ஊறு விளைவிக்கின்ற பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதும் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒரு பாதையில் முஸ்லிம்கள் மட்டும் நடக்க மாட்டார்கள். அனைத்து மதத்தினரும் தான் நடப்பார்கள். அவர்களுடைய கால்களைப் பதம் பார்த்து, புண்ணாக்கி, புறையோடச் செய்து அவர்களது உயிர்களுக்கே உலை வைக்கின்ற கல், முள் போன்றவற்றைப் பாதையிலிருந்து அகற்றுவது முஸ்லிம்களின் இறை நம்பிக்கையின் ஓரம்சம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதாவது, ஒரு முஸ்லிமின் அடிப்படைக் கொள்கையே மற்றவர்களை இன்னல், இடையூறுகளிலிருந்து பாதுகாப்பது தான் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது.
காலைப் பதம் பார்க்கின்ற கல், முள்ளையே அகற்றச் சொல்லும் இஸ்லாம், ஆளையே கொல்லுகின்ற குண்டுகளை வைக்கச் சொல்லுமா என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கüலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 2472
இப்படிப் பாதையிலிருந்து கற்கள், முற்களை அகற்றுவதற்காக ஒரு முஸ்லிமுக்கு இறைவன் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகின்றான் என்றால், பேருந்துகள், இரயில்கள், விமானம் போன்ற போக்குவரத்துக்களிலும் அவை வந்து நிற்கும் நிலையங்களிலும், மக்கள் குழுமுகின்ற வணிக வளாகங்களிலும், அவர்கள் பயணிக்கின்ற பாதைகளிலும் குண்டு வைத்துக் குலை நடுங்கச் செய்யும் ஒருவனுக்கு இந்தக் கருணைமிகு இறைவன் என்ன தண்டனை வழங்குவான்? நிச்சயமாக நரகத்தைத் தான் தண்டனையாக வழங்குவான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதுதான் முஸ்லிம்களின் சரியான நிலைப்பாடாகும்.
ஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாக, ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இஸ்லாமிய போதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
“முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல்: திர்மிதி 2551
“பிற மனிதனுக்கு உனது கையினால், நாவினால் இடைஞ்சல் அளிக்காமல் இருந்தால் நீ ஒரு முஸ்லிம்’ என்று கூட நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் அவ்வாறு சொல்லாமல், “மனிதர்கள் உன்னுடைய நாவினால், கையினால் பாதுகாப்புப் பெற வேண்டும்’ என்று சொல்கிறார்கள். உன்னிடமிருந்து பிறர் பாதுகாப்புப் பெறுவதை நீ தீர்மானிக்கக் கூடாது; ஏனெனில் நீ ஏற்படுத்திய பாதிப்பின் தன்மை உனக்குத் தெரியாது; பாதிக்கப்படுபவர் அல்லது மற்றவர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
அந்த அளவுக்கு, ஒரு முஸ்லிம் தனது நாவினாலும், கையினாலும் பிற மக்களுக்குத் துன்பம் தரக் கூடாது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 6018
அண்டை வீட்டுக்காரர் முஸ்லிமாகவும் இருக்கலாம்; முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம். மொத்தத்தில் அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
இந்த அளவுக்கு இஸ்லாம் தெளிவாகக் கூறியிருந்தும், இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் எதிராக, பொது இடங்களிலும் மக்கள் கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்? அத்தகையோர் இஸ்லாத்தின் பார்வையில் ஒருபோதும் முஸ்லிம்கள் அல்லர்.
இறைவனுக்குப் பல அழகான பெயர்கள் உள்ளன. அவற்றில் “ஸலாம்’ என்பதும் ஒன்று. இதன் பொருள் அமைதியானவன் என்பதாகும். இறைவனின் திருப்பெயரும் அமைதியானவன் என்று அமையப் பெற்றிருக்கும் போது அமைதியான அந்த இறைவன் இந்த அமளி துமளிகளை எப்படி ஆதரிப்பான்?
அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோருக்கு நேரான பாதையைக் காட்டுகிறான்.
அல்குர்ஆன் 10:25
மொத்தத்தில் இஸ்லாம் என்றால் உயிருக்கு உத்தரவாதம்! உடமைக்கு உத்தரவாதம்! கற்புக்குக் காவல் அரண்! பெண்களுக்குப் பாதுகாப்பு!
இஸ்லாம் என்றால் அமைதி! இஸ்லாம் என்றால் அபயம்!
இதனால் தான் இந்த மார்க்கத்தின் அதிபதி இதை ஓர் அமைதி மார்க்கம் என்று கூறுகின்றான்.
பாதுகாப்பான ஒரு வீட்டில் இருக்கும் போது அதில் வெயிலின் கொடூரம் கிடையாது. குளிரின் கொடுமை கிடையாது. கொட்டும் மழை கிடையாது. குலை நடுங்க வைக்கும் இடியோ, கண்ணைப் பறிக்கும் மின்னலோ இதில் தெரியாது. இவை அத்தனைக்கும் ஓர் இல்லம் பாதுகாப்பாக இருப்பது போல் ஒரு மனிதனின் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இஸ்லாம் இருக்கின்றது. அந்தப் பாதுகாப்பு இல்லமான இஸ்லாம், ஒருபோதும் பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை ஆதரிக்காது.
பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்தை அனைவரும் ஏற்கின்றனர். அந்த அடிப்படையில், முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்கின்ற பயங்கரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் சமுதாயமோ, இஸ்லாமிய மார்க்கமோ பொறுப்பாகாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இஸ்லாம் ஓர் ஆக்க சக்தி! அது அழிவு சக்தி அல்ல என்பதை நம்மைச் சுற்றியுள்ள சமுதாயங்களிடம் கொண்டு செல்வோம். சாந்தி, சமாதானம், ஆக்கம், அமைதி இவையே இஸ்லாம் என்பதை தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டுமின்றி தரணியெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.
வெளியீடு:

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

முஐதெர் கிளை ஆலோசனைக்கூட்டம் 10-10-14



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தார் மண்டல முஐதெர் கிளை ஆலோசனைக்கூட்டம் 10-10-2014 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு மண்டல நிர்வாகிகள் சகோதரர் பக்ருதீன் அலி, தஸ்தகீர் மற்றும் சகோதரர் அன்ஸார் மஜீதி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. சகோதரர் ராவூத்தர் ஹனீபா கிளை பொறுப்பாளராகவும், சகோதரர் அப்துல்லாஹ் துணை பொறுப்பாளராகவும், சகோதரர் இஸ்மாயீல் தாவா ஒருங்கிணைப்பாளராகவும், சகோதரர் சர்ஜுன் துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் பல தாவா ஆலோசனைகளும் செய்யப்பட்டு முடிவுகள் எடுகப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 11-10-14



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-10-2014 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப்பிறகு 7.30 முதல் 8.30 வரை அல்வக்ரா கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் சகோதரர் அஷ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கை உறுதி எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

சனி, 11 அக்டோபர், 2014

கத்தர் மண்டலம் முஐதெர் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 10-10-14


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் முஐதெர் கிளையில் 10-10-2014 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி அன்ஸார் மஜீதீ அவர்கள் உரையாற்றினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

அல்வக்ரா 1 & 2 கிளை ஆலோசனைக்கூட்டம் 10-10-14



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அல்வக்ரா கிளை 1 மற்றும் 2 கிளை ஆலோசனை கூட்டம் 10-10-2014 வெள்ளிக்கிழமை அசர் தொழுகைக்குப் பிறகு வக்ரா வில் உள்ள அப்துல்லாஹ் பின் ஹப்பாப் பள்ளியில் மண்டல துணைத்தலைவர் சகோதரர் பக்ருதீன் அலி முன்னிலையில் நடைபெற்றது. 

இதில் இன்ஷா அல்லா அல்வக்ரா கிளையில் நடைபெறவிருக்கும் இரத்ததான முகாம் குறித்தும், அதில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் மேலும் பல தாவா குறித்த ஆலோசனை செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

வியாழன், 9 அக்டோபர், 2014

QITC மர்கசில் 09/10/2014 இரவு 8:30 மணிக்கு "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்"

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே 

QITC மர்கசில்
"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்"

இது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி 


நாள் : 09/10/2014 - வியாழன் மாலை 
நேரம் : நாளை இரவு 8:3௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!

வியாழன் மாலை QITC - மர்கசில் 8:30 மணிக்கு "இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது அணைத்து சகோதர சகோதரிகளும் இக்கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

கேள்விக்கு பதிலளிப்பவர் :

மவ்லவி அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி 

மாநில பேச்சாளர் - TNTJ 

குறிப்பு: 
முன் கூட்டியே வருபவர்களுக்கு கேள்வி கேட்பதற்கான டோக்கன் வழங்கப்படும். 

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஃபனாரில் கத்தர் மண்டல ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி 04-10-14


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04-10-214 அன்று ஹஜ் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பெருநாள் தொழுகைக்குப்பிறகு காலை 7 மணி முதல் 8.30 மணி வரை கத்தர் மண்டலம் ஃபனார் உள்ளரங்கில் மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் தலைமயில் நடைபெற்றது.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள சிறப்பு அழைப்பாளர் சகோதரர் அஷ்ரப்தீன் ஃபிர்தௌசி அவர்கள் "மனிதனை வாழ வைக்கும் மார்க்கம் இஸ்லாம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் இன்று உலகம் முழுவதும் மீடியாக்களால் இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், இஸ்லாமியர்கள் செய்யும் மனித நேய பணிகளையும், தாயகத்தில் ஒருமாத காலம் நாம் செய்யவிருக்கின்ற தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் குறித்த தகவல்களையும், கத்தர் மண்டலம் முழுவதும் 6 இடங்களில் நடத்த உள்ள ஒரு மாத கால சிறப்பு இரத்த தானம் குறித்த தகவல்களையும் சுட்டி காட்டி இஸ்லாம் மனிதனை வாழ வைக்கின்ற மார்க்கம்தான் என்பதை தெளிவுபடுத்தினார்கள்.

மேலும் அக்டோபர் 15முதல் நவம்பர் 16 ஒருமாத கால இரத்த தானம் நடைபெற உள்ள இடங்கள் குறித்த தகவல்களை மண்டல செயலாளர் மவ்லவி முஹமத் அலி MISC அவர்கள் அறிவிப்பு செய்து நன்றி உரை ஆற்றினார்கள்.

இதில் 600 க்கும் மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.


















مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

கர்த்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 03-10-14




03-10-2014 ஜும்ஆவிற்கு பிறகு கத்தர் மண்டல கர்த்தியாத் கிளையில் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அஷ்ரப்தீன் ஃபிர்தௌசி அவர்கள் உரையாற்றினார்கள் 

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

அல்சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 03-10-14


03-10-2014 ஜும்ஆவிற்கு பிறகு கத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் காதர்மீரான் அவர்கள் உரையாற்றினார்கள் 

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 03-10-14


03-10-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை நிகழத்தியவர் : மவ்லவி அன்ஸார் மஜீதி 

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஃபனாரில் QITC -ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி-04/10/2014

بسم الله الرحمن الرحيم

ஃபனாரில் QITC -யின் ஹஜ்ஜுப் -பெருநாள்
சிறப்பு நிகழ்ச்சி -2014

நாள் : 4/10/2014 நாளை சனிக்கிழமை பெருநாள்
நேரம் : பெருநாள் தொழுகைக்குப்பின் 7:00 மணிக்கு
இடம் : FANAR உள்ளரங்கம் - சூக் ஃபாலா அருகில்
தொழுகை நேரம் : காலை5:00 மணிக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு ....

அன்பிற்குரிய சகோதர சகோதாரிகளே !!!

நாளை பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகை மற்றும் குத்துபாவிற்கு பின் சூக் ஃபாலா விற்கு அருகிலுள்ள FANAR ஃபனார் உள்ளரங்கில் QITC –யின் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது .

அனைத்து சகோதர சகோதரிகளும் பெருநாள் தொழுகையை ஆங்காங்கே திடல்களில் தொழுதுவிட்டு ஃபனாருக்கு வந்துவிடவும்.

சிறப்புரை:

சிறப்பு விருந்தினர்

மவ்லவி : 
அஷ்ரப் தீன் ஃபிர்தெளஸி
(மாநிலப் பேச்சாளர் -TNTJ)

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்

குறிப்பு :
1 .பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
2 . தங்களின் வாகனங்களை ஃபனாரின் அடித்தளத்தில் நிறுத்தும் வசதி உள்ளது
3 .காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது



مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com