ஞாயிறு, 29 டிசம்பர், 2013

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 26/12/2013 - "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?"




26/12/2013 வியாழன் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி இரவு 8.30 முதல் 10.15 வரை நடைபெற்றது. இதில் மவ்லவி முஹமத் தமீம் MISc அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்னும் தலைப்பில் சொற்பொழி்வு ஆற்றினார்கள்.

"இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு" - பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் தந்து உதவிய முஸ்லிம் சமுதாயம் இன்று வீதியில் நிற்கிறது என்பதையும்,
"இட ஒதுக்கிடு ஏன்?" - இடஒதுக்கிடு இல்லாமல் இந்த சமுதாயம் அரபு நாடுகளில் எப்படி எல்லாம் கஷ்ட்ப்படுகிறார்கள் என்பதையும் புள்ளி விவரத்துடன் கூறினார்கள்.

(facebook வீடியோ பார்க்க கிழேயுள்ள படத்தை கிளிக் செய்யவும்)

https://www.facebook.com/photo.php?v=10202758723793030


மண்டல பொருளாளர் சகோதரர் முஹம்த் இல்யாஸ் அவர்கள் கடந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்கள் கூறி அதற்கு சரியான பதில் எழுதிய சகோதரர் மற்றும் சகோதரிக்கு பரிசு கூப்பனை வழங்கினார்கள்.

மண்டலத் தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் 2014 க்கான மர்கஸ் காலண்டரை வெளீயிட முதல் பிரதியை முன்னால் தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் பெற்றுகொண்டார்கள். மேலும் அறிவிப்புகள் செய்தார்கள்.


இதில் எராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/