அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 12-09-2013 வியாழன் இரவு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர் கார்த்திகேயன் என்பவரது அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் சகோதரர் கார்த்திகேயன் தனது பெயரை அமீர் என்று மாற்றி கொண்டதாக தெரிவித்தார். அவருக்கு மண்டல மூத்த அழைப்பாளர் சகோதரர், அப்துஸ் சமத் மதனீ அவர்கள் சகோதரர், பீ ஜே அவர்கள் மொழிபெயர்த்த "திருக்குர்ஆன் தமிழாக்கம்" வழங்கினார்கள்.
பின்னர் மண்டல செயலாளர் மவ்லவி, முஹமத் அலி அவர்கள் "மாமனிதர் நபிகள் நாயகம், அய்யமும் தெளிவும், மனிதனுக்கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்களை வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!