அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கடந்த 11/07/2013 வியாழன் அன்று ரமலான் 2013 சிறப்பு நிகழ்ச்சிகள் இரவு 10.00 மணிக்கு மர்கசில் தொடங்கியது. முதலாவதாக சிறுவர்களுக்கான குர்ஆன் மனனபோட்டி மற்றும் பேச்சு போட்டி நடைப்பெற்றது.
உள்ளம் கவர்ந்த மழலைகள் மனனம்
திருக்குர்ஆனில் உள்ள இரண்டு சிறு சிறு அத்தியாயங்களை ஒதி காண்பிக்குமாறு சொல்லப்பட்டது. அதை அழகான முறையில் அம்மழலைகள் ஓதி காண்பித்தது அனைவரையும் கவர்ந்தது.
முலையிலேயே கொள்கை உறுதியூட்டப்பட்ட இளம்சிறார்கள் பேச்சு
ஆறு முதல் ஏழாம் வகுப்பு வரையில் உள்ள சிறுவர்களுக்கான பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைப்பெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றார்கள்.
இப்போட்டிகளில் 35 சிறுவர் சிறுமிகள் கலந்துக்கொண்டார்கள். போட்டியின் நடுவர்களாக சகோதரர் அப்துஸ்ஸமது மதனி, சகோதரர் மவ்லவி முஹம்மது லாயிக், சகோதரர் அப்துன் நாசர் ஆகிய மூவர் அடங்கிய குழு செயல்பட்டது.
இரவு சரியாக 12:00 மணிக்கு மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சியாக, தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளர் சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள் "மறுமையை நோக்கி முஸ்லீம்களின் இலக்கு" என்ற தலைப்பில் உரை இடம் பெற்றது.
அரங்கம் முழுவதும் நிரம்பி, வெளியே இருக்கைகள் போடப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் ஸகர் உணவு பரிமாறப்பட்டது. தமிழறிந்த சகோதர சகோதரிகள் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் குழந்தைகள் சகிதம் வந்து கலந்துக்கொண்டனர். இதில் 350 பேர் கலந்து கொண்ட பயனடைந்தார்கள். சரியாக 2:00 மணிக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹுவின் பெருங்கிருபையால் சிறப்பாக நடந்து முடிந்தது.