அல்லாஹ்வின்மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் நிகழ்ச்சி மற்றும் பெரிய பெண் பிள்ளைகளுக்கான ரமலான் பேச்சுபோட்டி 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை சகோதரி பானு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதலாவதாக சகோதரி ஹாஜரா அவர்கள் ஷைத்தானின் வலைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அடுத்ததாக சகோதரி அஷ்ரப் நிஷா அவர்கள் திருக்குர்ஆன் ஓதும் முறை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
பின்னர் பெரிய பெண் பிள்ளைகளுக்கான ரமலான் மாத பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் அர்ஷதா மர்யம் என்ற சகோதரி உறவுகளை பேணுவோம் என்ற தலைப்பில் பேசினார்கள்.
இதில் ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.