அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால், சென்ற வியாழக்கிழமை 30-05-2013 கத்தர் மண்டல QITC மர்கஸில் வாரந்திர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக, சகோதரர் சேக் அப்துல்லாஹ் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அதனை அடுத்து "இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மவ்லவி அப்துஸ்ஸமது மதனி அவர்கள் சகோதர சகோதரிகள் கேட்ட அனைத்து சந்தேகளுக்கும் விடையளித்தார்கள்.
இறுதியாக மண்டல தலைவர் சகோதர் மஸ்ஊத் அவர்கள் இரத்தானம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்கள். அடுத்த நாள் நடைபெற இருக்கும் இரத்தான முகாமிற்கு அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
மண்டல செயலாளர் சகோதரர் முஹ்ம்மது அலி அவர்கள் பலஅறிவிப்புகள் செய்து நிகழ்ச்சி முடித்து வைத்தார்கள். வந்திருந்த அனைத்து சகோதரர் சகோதரிகளுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ.