கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் வருடாவருடம் ரமலான் மாதத்தில் வக்ராவில் நடத்தும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியருக்கான மார்க்க அறிவுப்போட்டியை நடத்துவது வழக்கம். அதுபோல் இவ்வருடமும் பல்வேறு சிறப்பு நிகழ்சிகளை இன்ஷா அல்லாஹ் நடத்த இருக்கிறது. இதில் குழந்தைகளை அவர்கள் பயிலும் வகுப்பு பிரகாரம் பிரித்து போட்டியை நடத்த தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்ச்சியில் தங்களது பிள்ளைகளை கலந்துகொள்ள செய்ய ஊக்கப்படுத்துமாறும், அதற்காக அவர்களை தயார் படுத்துமாறும் தங்களை கேட்டுகொள்கிறோம்.
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மார்க்கப் போட்டிக்கான விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம்செய்து தங்கள் பிள்ளைகளுக்கான போட்டியை தேர்வு செய்து அதனை பூர்த்தி செய்து மர்கசில் சமர்பிக்கும்படி கேட்டுகொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு நமது மண்டல செயலாளர் சகோதரர் முஹமத் அலி Misc அவர்களை 66579598 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
மார்க்க அறிவுப் போட்டிக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. ஆகையால் தவறாமல் தங்கள் பிள்ளைகளை பயிற்சி வகுப்பிற்கு அழைத்து வரும்படி கேட்டுகொள்கிறோம்.
வகுப்பு நாட்களும் அதன் ஆசிரியர்களும்
1. குர் ஆன் மனனம் - 20/6/2013, 21/6/2013 இரவு 8 மணிமுதல் 10மணிவரை
ஆசிரியர்கள் : தமீம், லாயிக், அன்சார், அப்துஸ் சமத் மதனி
2. துஆ மனனம் - 27/6/2013, 28/6/2013 இரவு 8 மணிமுதல் 10மணிவரை
ஆசிரியர்கள் : ரிள்வான், தமீம், லாயிக், மனாஸ்
3.பேச்சுப் போட்டி - 29/6/2013, 30/6/2013 இரவு 8 மணிமுதல் 10மணிவரை (முதலிலேயே பெற்றோர்கள் பயிற்சி கொடுத்து விடலாம் )
ஆசிரியர்கள் : மனாஸ், தமீம், அன்சார்
4. நாடகம் - 1/7/2013, 2/7/2013 இரவு 8 மணிமுதல் 10மணிவரை
ஆசிரியர்கள் : தமீம், ரிள்வான், அன்சார்