ஞாயிறு, 30 ஜூன், 2013

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைப்பெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 28/06/2013

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், 28/06/2013 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு, கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில், பிற மத சகோதரர்களின் கட்டுரைப்போட்டியில் வென்ற முதல் மூன்று கட்டுரைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும், அதனையொட்டி வருகை தந்திருந்த பிறமத சகோதரர்களுக்கான "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் செயலாளர் சகோதரர் முஹ்ம்மது அலி அவர்கள் வரவேற்புரை வழங்கி, பின் மண்டல தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்களை தலைமையேற்று நடத்தி தருமாறு கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் நோக்கம் பற்றியும், சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் இஸ்லாம் எப்படி பேணச்சொல்கிறது என்றும் மண்டலத்தலைவர் மஸ்ஊத் அவர்களின் சிறிய அறிமுகத்துடன், கேள்வி பதில் நிகழ்ச்சியை மண்டல அழைப்பாளர் சகோதரர் முஹம்மத் தமீம் MISc அவர்கள் தொடங்கினார்கள்.

மிக விறுவிறுப்பாக இரண்டு மணி நேரம் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில், இன்றைய கால சூழலுக்குகேற்ப சிறப்பான கேள்விகள் கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் சகோதரர் தமீம் அவர்கள் அழகான முறையில், ஆழமான பதிலை புதிய கண்ணோட்டத்துடன் நன்றாக புரியும்படி எடுத்துரைத்தார்கள்.

வாரத்தில் ஒரு நாள் விடுமுறையில் தங்களுடைய பொழுதுபோக்கினை ஒதுக்கி வைத்துவிட்டு இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள கத்தாரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிற மத சகோதரர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்.

அரங்கம் முழுவதும் பிற மத சகோதரர்களால் நிறைந்திருந்தது. நம் சகோதரர்களை அரங்கத்தின் வெளியே அகண்ட திரை அமைக்கப்பட்டு புரோஜக்டர் மூலம் நிகழ்ச்சியை காண எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இருநூறூக்கும் மேல்பட்ட சகோதரர்களும் சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சியை சகோதரர் முஹம்மது அலி அவர்கள் தொகுத்து வழங்கினார். "இஸ்லாம் என் பார்வையில்" கட்டுரையில் முதலாவது பரிசு வென்ற சகோதரர் சந்திர போஸ் அவர்களுக்கு நான்கு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கினார் மண்டலத்தலைவர் மஸ்ஊத்.

இரண்டாவது பரிசு வென்ற சகோதரர் அருள் முருகன் அவர்களுக்கு டாபெலெட் பரிசாக வழங்கினார் மண்டல அழைப்பாளர் முஹம்மது தமீம்.

மூன்றாவது பரிசாக சாம்சங் போனை சகோதரர் விஸ்வனாதனுக்கு சகோதரர் கோட்டக்குப்பம் அப்துல் வதூத் அவர்கள் வழங்கினார்கள்.

கட்டுரைப்போட்டியில் பங்கு பெற்ற சகோதரர்களுக்கு 16 திருக்குர் ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக பல் வேறு தலைப்புகளில் இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது. வருகை தந்திருந்த அனைத்து சகோதரர்களுக்கும் உணவு பரிமாரப்பட்டது.

துணைச்செயலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்ச்சி பெரும் பொருட் செலவில்லாமல் எளிய முறையில் நடைபெற்றது. எனினும் அல்லாஹுவின் உதவியால் மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக உருவெடுத்தது. அல் ஹம்துலில்லாஹ்!









கத்தர் மண்டல கிளைகளில் 28-06-2013 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 28-06-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில் - சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில் - மவ்லவி இஸ்சத்தின் ரில்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.

3 . நஜ்மா பகுதியில் - மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

4 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5 .முஐதர் பகுதியில் – மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில் - மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

7.அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர் ,அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

8.சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர் சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. கரத்திய்யாத் பகுதியில் - சகோதரர் முஹமத் யூஸுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.

10.கரஃப்ஃபா பகுதியில் - மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

11. அல்சத் பகுதியில் - டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்

12 பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர் ,ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !







கத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட பிறமத சகோதரர் 27-06-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தார் மண்டல மர்கஸில் 27-06-2013 வியாழன் அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பின்னர் கத்தார் சனையா பகுதியில் அலுடெக் என்னும் நிறுவனித்தில் பணிபுரியும் புதுவையைச் சேர்ந்த கார்த்திக் ராமலிங்கம் என்ற இந்து மதத்தை சேர்ந்த சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்டார். அவருக்கு சவூதி மர்க்ஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கத்தை சொல்லி கொடுத்தார்கள்.

தன்னுடைய பெயரை முகமத் சலீம் என்று மாற்றிகொல்வதாக அறிவித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்!




கத்தர் மண்டல மர்கஸில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி 27-06-2013 வியாழன்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி 27-06-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.

இதில் மவ்லவி அன்ஸார் மஜிதி அவர்கள் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களை தீர்க்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியான "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதில் பல சகோதர சகோதரிகளின் சந்தேகங்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நபி வழி அடிப்படையில் பதில் அளித்தார்கள்

பின்பு, மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து, கடந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.




திங்கள், 24 ஜூன், 2013

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் பிறமத கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 28/6/2013

 இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் பிறமத சகோதரர்கள் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி

நாள் : 28/6/2013 மாலை 6 மணிக்கு

இடம் : QITC மர்கஸ்



கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் பிறமத சகோதரர்கள் கட்டுரைப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி வரும் 28/6/2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
அனைத்து  சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
மற்றும் இந்த தகவலை நமது தொப்புள் கொடி உறவுகலான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வரவும் மற்றும் இந்த மெயிலை மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கவும் மறந்து விடவேண்டாம் !

====================================================================================================

கண்ணியத்திற்குரிய பிறமத சகோதர சகோதரிகளே !

நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ, மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த மாதம் இஸ்லாம் என் பார்வையில் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி ஒன்றை நாம் அறிவித்திருந்தோம்.
அதற்கு பிறமத சகோதரர்களிடமிருந்து 15க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்துள்ளன.
அச்சகோதரர்களை கண்ணியப்படுத்தும் விதமாக "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி வரும் 28/6/2013வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
எனவே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பிறமத சகோதர சகோதரிகளையும் QITC மர்கஸ் மனமகிழ்ந்து அழைக்கிறது.

குறிப்பு :

1.வாகனம் தேவைப்படும் சகோதரர்கள் மண்டல துணை செயலாளர்கள் ஷேய்க் அப்துல்லாஹ், காதர் மீரான் அவர்களை தொடர்பு கொள்ளவும் 66963393,70453598

 2. போட்டியில் கலந்து கொண்ட அனைவர்க்கும் பரிசுகள் வழங்கப்படும்

கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள : 55532718, 66579598

======================================================================================================


பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் பேச்சுப் போட்டி நிகழ்ச்சி அழைப்பிதழ் 05/07/2013

கண்ணியத்திர்க்குரிய சகோதரர் சகோதரிகளுக்கு,
 
மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும்
பெரிய பெண்பிள்ளைகளுக்கான பேச்சுப் போட்டி  நிகழ்ச்சி - அழைப்பிதழ்
நாள் : 05/07/2013 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்
இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!
======================================================================================  
QITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!. ஆனால் இந்த வாரம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பிரமத சகோதரர் களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறயிருப்பதால் பெண்கள் பயான் 5/7/2013 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் இன்ஷா அல்லாஹ் !!!
05-07-2013 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி மற்றும் பெண்பிள்ளைகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

=====================================================================================
பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் இதோ! இதில் ஏதேனும் ஒரு தலைப்பில் நிமிடங்கள் பேசவேண்டும்
1. அழகிய முன் மாதிரி நபி ( ஸல் )
2. உறவுகளை பேணுவோம் 
3.இஸ்லாம் கூறும் கொடுக்கல் வாங்கள் 
4.இஸ்லாத்தின் பார்வையில் நாட்களை கொண்டாடுவது 
5.இஸ்லாத்தின் பார்வையில் வரத்தட்சனை 
படிவத்தில் தங்களின் விவரத்தையும் பேசவுள்ள தலைப்பையும் மட்டும்  பூர்த்தி செய்து QITC மர்கசில் வழங்கி விடவும்.
படிவம் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 27/6/2013 வியாழன் 
தங்கள் பிள்ளைகளை பயிற்றுவித்து அழைத்து வருமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
========================================================================================
கூடுதல் தகவலுக்கு :
சகோ: முஹம்மத் இல்யாஸ் (பொருளாளர்) +974 -55187260
(பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)



 

கத்தர் மண்டல மர்கஸில் 21-06 -2013 வெள்ளியன்று தவாகுழு கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கஸில் 21-06-2013 வெள்ளியன்று தாவாகுழு கூட்டம் மண்டல செயலாளர் சகோதரர் முகம்மத் அலி MISc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஜூலை மாத வியாழன் மற்றும் வெள்ளி பயான் பட்டியல் மற்றும் ரமலான் சிறப்பு நிகழ்சிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் இதர தாவா பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதில் தாவா குழுஉறுப்பினர்கள், தாயீக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.



ஞாயிறு, 23 ஜூன், 2013

கத்தர் மண்டல கிளைகளில் 21-06-2013 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 21-06-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில் - சகோதரர் முஹமத் யூசுஃ ப் அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில் - மௌலவி முஹமத் தமீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.

3. நஜ்மா பகுதியில் - மவ்லவி இஸ்சத்தின் ரில்வான் ஸலஃ பி அவர்கள் உரையாற்றினார்கள்.

4. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5. முஐதர் பகுதியில் – மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில் - மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

7. அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி முஹமத் அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்.

8. சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர் பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

9. கரத்திய்யாத் பகுதியில் - சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரஃப்ஃபா பகுதியில் - மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

11. அல்சத் பகுதியில் - சகோதரர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்

12. பின் மஹ்மூத் பகுதியில் - மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !











சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் மார்க்க சொற்பொழிவு 20-06-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம் சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 20-06-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் மண்டல அழைப்பாளர் மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் "அமல்களுக்கு தயாராவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மவ்லவி லாயிக் அவர்கள் "நபிகளாருடன் இருக்க என்ன வழி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.



கத்தர் மண்டல மர்கஸில் சிறுவர், சிறுமியர் தர்பியா 20-06-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கஸில் 20-06-2013 வியாழன் இரவு 8.30 முதல் 10.30 மணி வரை சிறுவர், சிறுமியருக்கான ரமலான் மார்க்க அறிவுப் போட்டிக்கு தயார் படுத்தும் விதமாக குர் ஆன் ஓதுதல், துஆ மனனம், பேச்சுபோட்டி ஆகியவற்றிற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ, மவ்லவி மனாஸ் பயானி, மவ்லவி முஹம்மத் அலி Misc, மவ்லவி லாயிக் ஆகியோர் பயிற்சி அளித்தார்கள் .

இதில் ஏராளமான சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.


கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 20/06/2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 20-06-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை மண்டல துணைச் செயலாளர் சகோதரர் காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் டாக்டர் அஹமத் இப்ராஹீம் அவர்கள் "சஹாபாக்களின் வரலாறு" என்னும் தொடர் தலைப்பில் இக்ரிமா (ரலி) அவர்களைப் பற்றி உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ஸலஃபி அவர்கள் "மறுமை நாள் நெருங்கிவிட்டது" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் சவூதி மர்க்ஸ் அழைப்பாளர் மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "உறவுகள் பலம் பெற" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு மண்டலத்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் வரும் வியாழன் நடைபெறவிருக்கும் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" பற்றியும், அதை தொடர்ந்து இன்ஷாஅல்லாஹ் 28-06-2013 வெள்ளிகிழமை நடைபெறவிருக்கும் பிற மத சகோதரர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு மற்றும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சி பற்றியும் இன்னும் பல அறிவிப்புகளும் செய்தார்கள். பின்னர் மண்டல செயலாளர் சகோதர் முஹமத் அலி அவர்கள் அன்றைய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.




 

வியாழன், 20 ஜூன், 2013

QITC யின் சிறுவர், சிறுமியரு​க்கான ரமலான் மார்க்க அறிவுப்போட்டி 2013 விண்ணப்ப படிவம்

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் வருடாவருடம் ரமலான் மாதத்தில் வக்ராவில் நடத்தும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியருக்கான  மார்க்க அறிவுப்போட்டியை நடத்துவது வழக்கம். அதுபோல் இவ்வருடமும் பல்வேறு சிறப்பு நிகழ்சிகளை இன்ஷா அல்லாஹ் நடத்த இருக்கிறது. இதில்  குழந்தைகளை அவர்கள் பயிலும் வகுப்பு பிரகாரம்  பிரித்து போட்டியை நடத்த தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்ச்சியில் தங்களது பிள்ளைகளை கலந்துகொள்ள செய்ய ஊக்கப்படுத்துமாறும், அதற்காக அவர்களை தயார் படுத்துமாறும் தங்களை கேட்டுகொள்கிறோம்.

இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மார்க்கப் போட்டிக்கான விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம்செய்து  தங்கள் பிள்ளைகளுக்கான போட்டியை தேர்வு செய்து  அதனை பூர்த்தி செய்து மர்கசில் சமர்பிக்கும்படி கேட்டுகொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு நமது மண்டல செயலாளர் சகோதரர் முஹமத் அலி Misc அவர்களை 66579598 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும். 
 
மார்க்க அறிவுப் போட்டிக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. ஆகையால் தவறாமல் தங்கள் பிள்ளைகளை பயிற்சி வகுப்பிற்கு அழைத்து வரும்படி கேட்டுகொள்கிறோம்.


வகுப்பு நாட்களும் அதன் ஆசிரியர்களும் 

1. குர் ஆன்  மனனம்  - 20/6/2013, 21/6/2013 இரவு 8 மணிமுதல் 10மணிவரை 
ஆசிரியர்கள் : தமீம், லாயிக், அன்சார், அப்துஸ் சமத் மதனி  

2. துஆ மனனம் - 27/6/2013, 28/6/2013 இரவு 8 மணிமுதல் 10மணிவரை
ஆசிரியர்கள் : ரிள்வான், தமீம், லாயிக், மனாஸ் 

3.பேச்சுப் போட்டி - 29/6/2013, 30/6/2013 இரவு 8 மணிமுதல் 10மணிவரை (முதலிலேயே பெற்றோர்கள் பயிற்சி கொடுத்து விடலாம் ) 
ஆசிரியர்கள் : மனாஸ்,  தமீம், அன்சார்  

4. நாடகம் - 1/7/2013, 2/7/2013  இரவு 8 மணிமுதல் 10மணிவரை
ஆசிரியர்கள் : தமீம், ரிள்வான், அன்சார்