கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !
இந்த கட்டுரைப்போட்டிக்கான தகவலை நமது தொப்புள் கொடி உறவுகளான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதை மெயிலாக மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கவும்.
கண்ணியத்திற்குரிய பிற மத சகோதர சகோதரிகளே !
நம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது. இஸ்லாத்ததை பற்றி தங்கள் மனதில் உள்ளதை சொல்லும் இடமாக இந்த கட்டுரைப்போட்டியை அறிமுகப்படுத்துகிறோம். அதனடிப்படையில் "இஸ்லாம் என் பார்வையில்" என்ற தலைப்பில் தங்கள் மனதில் தோன்றியதை கட்டுரையாக எழுதி எங்களுக்கு அனுப்பும் படி தங்களை கேட்டுக்கொள்கிறோம் .
குறிப்பு :
1. இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் இவை இரண்டையும் 66579598 என்ற எண்ணுக்கு SMS செய்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.
2. கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15-06-2013
3. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு வெகுமதி மிக்க பரிசுகள் காத்திருக்கிறது மற்றும் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பரிசுகள் காத்திருக்கிறது
4. கூடுதல் விவரங்களுக்கு நோட்டிஸை பார்வையிடவும்.