சனி, 25 மே, 2013

கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 23-05-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 23-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை மண்டல இணைச் செயலாளர் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர் காதர்மீரான் அவர்கள் "தியாகங்களை நினைவு கூறுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

பின்னர் மவ்லவி இஸ்ஸத்தின் ரிள்வான் ஸலஃபி அவர்கள் "திசை மாறும் இளைஞர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் மவ்லவி முஹமத் தமீம் MISC அவர்கள் "குழப்பவாதிகள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு மண்டலத்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் கத்தர் மண்டலம் ஏற்பாடு செய்துள்ள நம்முடைய சகோதரர்களுக்காண கட்டுரைப்போட்டி குறித்தும், ஹமாத் மருத்துவமனை கேட்டுகொண்டதிற்கிணங்க எதிர்வரும் 31-05-2013 வெள்ளிக்கிழமை இரத்ததான முகாம் நடுத்துவது குறித்தும், இன்னும் பல அறிவிப்புகளும் செய்தார்கள். பின்னர் மண்டல துணைத்தலைவர் சகோதரர் ஃபக்ருதீன் அலி அவர்கள் கடந்தவாரம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை கூறி அன்றைய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.