சனி, 18 மே, 2013

கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 16-05-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 16-05-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை சகோதரர் .ஃ பக்ருதீன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் "உம்மு சலமா (ரலி)" வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

பின்னர் மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் "இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் செயல்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு மண்டலத்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் எதிர்வரும் ரமலான் மாதத்தை ஒட்டி பிற மத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி நடுத்துவது குறித்தும் இன்னும் பல அறிவிப்புகளும் செய்தார்கள்.

பின்னர் மண்டலச் செயலாளர் சகோதரர் முஹமத் அலி Misc அவர்கள் கடந்தவாரம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை கூறி அந்த கேள்விக்கு சரியாக பதில் அளித்த ஒரு சகோதரர் மட்டும் ஒரு சகோதரிக்கு பரிசுகளை அறிவித்தார்கள் மண்டல துணைத் தலைவர் சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள்பரிசுகளை வழங்கினார்கள் மேலும் அன்றைய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.