சனி, 30 மார்ச், 2013

கத்தர் மண்டல " த'அவாக்குழு கூட்டம்", 29-03-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC], "த'அவாக்குழு கூட்டம்", 29-03-2013 வெள்ளி மாலை 7:15 மணி முதல் இரவு 9:00மணி வரை மண்டல செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ M.I.Sc. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துவக்கமாக ஏப்ரல் 2013 மாத வியாழன் & வெள்ளி பயான் பட்டியல் மற்றும் சிறார்கள் தர்பியா பட்டியல் வெளியிடப்பட்டது.

பின்பு, மர்க்ஸ் பயான் முறை மாற்றம் மற்றும் செயல் முறை பயிற்சி ஆகிய முறையில் தாவாவை செய்தல் போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.


"பெண்கள் சிறப்பு மார்க்க அறிவுப்போட்டி, 29-03-2013


அல்லாஹுவின் அருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார்க்க அறிவுப்போட்டி", 29-03-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.

இதில் புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத் மற்றும் இப்னு மாஜா ஆகிய ஆறு நூல்களிலிருந்து இடம்பெற்ற ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டு பதில் எழுதினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.





29/03 /2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 29-03-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா பகுதியில்- மவ்லவி,முஹமத் அலீ Misc அவர்கள் உரையாற்றினார்கள்.

2. நஜ்மா பகுதியில்- மவ்லவி,மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

3.அல் அத்தியா பகுதியில்- மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

4. முஐதர் பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.

5. லக்தா பகுதியில்- மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.

6. அல் ஃஹீஸா பகுதியில்- சகோதரர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

7. சலாத்தா ஜதீத் பகுதியில்- மவ்லவி,பர்லின் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.

8. ம'அமூரா பகுதியில்- மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில்- மவ்லவி,அன்ஸார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

11. கரஃப்ஃபா பகுதியில்- மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்















"சிறார்கள் தர்பியா" 28-03-2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 28-03-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் 'குர்'ஆன் ஓதும் முறை' என்ற தொடர் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி,அன்ஸார் மஜிதி, அவர்கள் 'துஆக்கள்' என்ற தொடர் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள்.

இவ்வகுப்பில் பல சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.



கத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 28-03-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 28-03-2013 வியாழன் இரவு 9.00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.

இதில் மவ்லவி, மனாஸ் பயானி அவர்கள் சகோதர, சகோதரிகள் கேட்ட மார்க்க சந்தேகங்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நபி மொழி ஆதாரங்களின் அடிப்படையில் பதில் அளித்தார்கள் .

பின்பு, மண்டல தலைவர், சகோதரர் மஸ்வூத் அவர்கள் கடந்த 22-03-2013 அன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்து அறிவிப்புகள் பல செய்தார்கள். பின்னர் மண்டல செயலாளர் சகோதரர் முஹமத் அலி Misc அவர்கள் கடந்த வாரம் பயானில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

 





சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு 28-03-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 28-03-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி. இஸ்சத்தின் ரிள்வான் ஸல ஃ பி அவர்கள் இஸ்லாமியர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


வியாழன், 28 மார்ச், 2013

வேலைவாய்ப்புச் செய்திகள் - 28-03-2013


ஏக இறைவனின் திருப்பெயரால் ...

நமது சகோதரர்கள், வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்காக, தி ஹிண்டு (சென்னை) மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா (மும்பை) நாளிதழ்களில் 27-03-2013 மற்றும் 28-03-2013 அன்று வெளிவந்த விளம்பரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மேலும், eNRI டைம்ஸ் வார இதழில் வாரந்தோரும் வெள்ளியன்று வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.


Ctrl + Click on image to view bigger size










புதன், 27 மார்ச், 2013

மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி - 29-03-2013

 
بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...
மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி அழைப்பிதழ்
நாள்: 29/03/2013 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 7:௦௦ மணி முதல்
இடம்: QITC மர்கஸ்
இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு!!

QITC மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!. 
அதேபோல் இன்ஷா அல்லாஹ்!!!
வரும் வாரம் 29-03-2013 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி மற்றும் அறிவுப்போட்டி நடைபெற உள்ளது.
எனவே குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும்
இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

 அறிவுப்போட்டி சம்மந்தமாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதை தாங்கள் அறிந்ததே! கேள்விகள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து கேட்கப்படும் இன்ஷா அல்லாஹ்!
புத்தகத்தின் பெயர் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய ஆறு நூல்களிலும் இடம்பெற்ற ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்ற சிறிய தொகுப்பு நூல்
பக்கம் :87 முதல் 143 வரை
தலைப்பு : திருமணம் முதல் திக்ரின் ஒழுங்குகள் வரை

  கூடுதல் தகவலுக்கு: சகோ. முஹம்மத் இல்யாஸ்
+974 5518 7260
(பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)

செவ்வாய், 26 மார்ச், 2013

QITC யின் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு - 22-03-2013

அல்லாஹ்வின் பேரருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் பொதுக்குழு கூட்டம் 22-03-2013 வெள்ளிக்கிழமை மதியம் 2:15 மணிக்கு QITC - மர்கஸில் நடைபெற்றது.

முதலில் கடந்த நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டது,

பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு சிறப்பு பொதுக்குழு அதிகாரி சகோதரர். முஹம்மத் ஷேக் (TNTJ அபுதாபி மண்டல தலைவர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்களால் 13 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நிர்வாகிகளின் பெயர் பட்டியல்:
  1. தலைவர் - J.A.மஸ்ஊத்
  2. பொதுச்செயலாளர் - M. முஹம்மத் அலி
  3. பொருளாளர் - A. முஹம்மத் இலியாஸ்
  4. துணைத்தலைவர் - M.S. ஃபக்ருத்தீன்
  5. துணைப்பொதுச்செயலாளர் - சேக் அப்துல்லாஹ்
  6. துணைப்பொருளாளர் - S. காதர் மீரான்
  7. துணைச்செயலாளர் - S. தஸ்தகீர்
  8. துணைச்செயலாளர் - ரிஃபாய்தீன்
  9. துணைச்செயலாளர் - U.L.அன்சார்
  10. துணைச்செயலாளர் - A. சாக்ளா
  11. துணைச்செயலாளர் - M. அப்துர்ரஹ்மான்
  12. துணைச்செயலாளர் - இப்ராஹிம் (ETA)
  13. துணைச்செயலாளர் - ஹயாத் பாஷா
இறுதியாக புதிய நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு நன்றியுரையடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் 116 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

அல்ஹம்துலில்லாஹ்.





வியாழன், 21 மார்ச், 2013

QITC - யின் பொதுக்குழு அழைப்பிதழ்-2013

بسم الله الرحمن الرحيم
QITC - யின் பொதுக்குழு அழைப்பிதழ்-2013

நாள் : வெள்ளிக்கிழமை 22/03/2013
நேரம் :2.15 மணிக்கு
வருகைப்பதிவு நேரம் : 2.00 மதியம்
இடம் : QITC மர்கஸ்


கண்ணியத்திற்குரிய QITC உறுப்பினர்களுக்கு !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

வருகிற வெள்ளிக்கிழமை 22/03/2013 அன்று QITC யின் பொதுக்குழு நடைபெற உள்ளது , இப்பொதுக்குழு இன்ஷா அல்லாஹ சரியாக மதியம் 2.00 மணிக்கு வருகைப்பதிவுடன் ஆரம்பமாகும் எனவே அனைத்து சகோதரர்களும் குறித்த நேரத்தில் மர்க்சிற்கு வந்து சிறந்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நல்கு மாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

சிறப்புப் பேச்சாளர் : மவ்லவி M.I.சுலைமான்
( TNTJ - மாநில செயல் தலைவர் )

சிறப்பு பொதுக்குழு அதிகாரி : சகோ ஷைக் முஹம்மத்
( TNTJ -அபுதாபி மண்டல தலைவர் )

குறிப்பு :
1. பொதுக்குழு அன்று நமது மர்கஸ் சார்பாக நடத்தப்படும் ஜூம்மா தொழுகைக்குப்பின் உள்ள பயான் எங்கும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
2. பொதுக்குழுவிற்கு வரக்கூடியவர்கள் ஜூம்மா தொழுகையை நமது மர்க்ஸ் அருகே உள்ள பள்ளியில்தொழுதுவிட்டு உடனே மர்க்சிற்கு வந்து விடவும்.
3.உங்களுக்கான மதிய உணவு நமது மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12.30 மணிமுதல் உணவு பரிமாறப்படும் தாமதிக்காமல் வரவும்.

அன்புடன்,
எம்.முஹம்மத் அலி MISC
மண்டல செயலாளர்

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

வேலைவாய்ப்புச் செய்திகள் - 20-03-2013


ஏக இறைவனின் திருப்பெயரால் ...

நமது சகோதரர்கள், வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்காக, தி ஹிண்டு (சென்னை) மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா (மும்பை) நாளிதழ்களில் 20-03-2013 அன்று வெளிவந்த விளம்பரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மேலும், eNRI டைம்ஸ் வார இதழில் வாரந்தோரும் வெள்ளியன்று வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.


Ctrl + Click on image to view bigger size