ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

22-02-2013 கத்தர் மண்டல "த'அவாக்குழு கூட்டம்"

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC] , "த'அவாக்குழு கூட்டம்", 22-02-2013 வெள்ளி மாலை 7:15 மணி முதல் இரவு 11:15 மணி வரை மண்டல செயலாளர் மற்றும் த'அவா குழு பொறுப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ M.I.Sc., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துவக்கமாக "மார்ச்-2013 மாத வியாழன் & வெள்ளி பயான் பட்டியல் மற்றும் சிறார்கள் தர்பியா பட்டியல்" வெளியிடப்பட்டது.

பின்பு, 'பொதுக்குழு ஏற்பாடு, இலங்கை ஒருங்கிணைப்புக்குழு விதி முறைகள், த'அவாவை விரிவுபடுத்துவது, த'அவா குழு உறுப்பினர்களின் பங்களிப்பு' போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் 19 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!

22-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு"

அல்லாஹுவின் அருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", 22-02-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சகோதரி.கதீஜத்துல் நூரிய்யா அவர்கள் தலமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக,சகோதரி.வஜியத் நிஷா அவர்கள் 'சிறிய செயல்கள் - பெரிய நன்மைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, சகோதரி.அஷ்ரஃப் நிஷா அவர்கள் 'தூய்மை' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்பு: இன்ஷா அல்லாஹ்,வரும் மார்ச் மாதம் "ஆறு நூல்களிலும் இடம் பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்" என்ற நூலில் இருந்து 'அறிவுப்போட்டி' நடைபெறும்.



22-02-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 22-02-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  1. வக்ரா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,மனாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. லக்தா பகுதியில் - சகோதரர்.சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. அல் ஃஹீஸா பகுதியில் - மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. ம'அமூரா பகுதியில் – மவ்லவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில்-சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. கரத்திய்யாத் பகுதியில் - சகோதரர்.ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. கரஃப்ஃபா பகுதியில் - சகோதரர். அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ் !


 





21-02-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 21-02-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி சகோதரர்.தாவூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில், மண்டல அழைப்பாளர் மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் 'இலங்கை இஸ்லாமியர்களின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


21-02-2013 கத்தர் மண்டலம்,அல் ஃஹோர் கிளை சொற்பொழிவு



அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 21-02-2013 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில், மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் அலீ,M.I.Sc., ,அவர்கள் "வான்மறை குர்'ஆன் வழியில் வாழ்க்கை நெறி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

21-02-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 21-02-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை, மண்டல துணைப் பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வகுப்பில், மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் "ஒழுக்கங்கள்" என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள்.

இவ்வகுப்பில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!


21-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 21-02-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை பொருளாளர் சகோதரர். முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் "குர்'ஆன் - ஓர் வாழும் அற்புதம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "நாட்டு நடப்பும் - நமது மார்க்கமும்" என்ற தொடர் தலைப்பில் கேள்வி- பதில் முறையில் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

இறுதியாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் தமீம்,M.I.Sc.,அவர்கள் "மூடநம்பிக்கைகளை மூடுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு , மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து, இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.






வியாழன், 21 பிப்ரவரி, 2013

வேலைவாய்ப்புச் செய்திகள் - 20-02-2013


ஏக இறைவனின் திருப்பெயரால் ...

நமது சகோதரர்கள், வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்காக, தி ஹிண்டு மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்கள் (20-02-2013) ஆகியவற்றில் வெளிவந்த விளம்பரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மேலும், eNRI டைம்ஸ் வார இதழில் வாரந்தோரும் வெள்ளியன்று வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.

http://www.enritimes.com


Click on image to view bigger size.











மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி -அழைப்பிதழ் 22-02-2013

   بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....
 மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு - அழைப்பிதழ்
நாள் : 22/02/2013 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்
இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!
QITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!.

அதேபோல் இன்ஷா அல்லாஹ் !!!
வரும் வாரம் 22-02-2013 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே  குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

கூடுதல் தகவலுக்கு :சகோ:முஹம்மத் இல்யாஸ் ( பொருளாளர் ) +974 -55187260 (பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் )
  
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

சனி, 16 பிப்ரவரி, 2013

15-02-2013 "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்",

அல்லாஹ்வின் பேரருளால்,  


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC] , "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்", 15-02-2013 வெள்ளி  மாலை 6 : 30 மணி முதல் 10:45 மணி வரை  தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,வரும் மாதம் பொதுக்குழு நடத்துதல்,ஆண்டறிக்கை சமர்ப்பித்தல், மாநிலத் தலைமைக்கான பரிந்துரைகள், சனயிய்யாவில் புதிய கிளை முன்னேற்றம்பயான் பேச்சாளர்கள் நியமித்தல் மற்றும் பல விசயங்கள்   குறித்து விரிவாக அலசப்பட்டு, எதிர்காலத்திற்கான முடிவுகள்  எடுக்கப்பட்டன.

இதில் 9 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

15-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி இறுதி வகுப்பு



அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC], 15-02-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:45 மணி முதல் 6:45 மணி வரை , வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" முப்பதாவது மற்றும் இறுதி வகுப்பு நடைபெற்றது.
 
இதில்,ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் 'பழைய பாடங்களை-ரிவிஷன் முறையில்' நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த  சில சகோதர- சகோதரிகள் கலந்து கொண்டார்கள். 

இன்ஷாஅல்லாஹ், இப்பயிற்சியில் குறைந்த பட்ச அளவுக்கு மேல்,கலந்து கொண்ட  சகோதர- சகோதரிகளுக்கு ,  'சான்றிதழும்-ஊக்கப்பரிசும்' விரைவில் வழங்கப்படும்.

15-02-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்



அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 15-02-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள். 
  2. நஜ்மா பகுதியில்- சகோதரர்.சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள். 
  3. அல் அத்தியா பகுதியில் –  மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. லக்தா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. அல் ஃஹீஸா பகுதியில் -  மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. ம'அமூரா பகுதியில் –  சகோதரர். அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில்-சகோதரர்.ஃபக்ருதீன் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. கரத்திய்யாத் பகுதியில் -  சகோதரர்.ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. கரஃப்ஃபா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !

14-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல  மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 14-02-2013 வியாழன்  இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை துணைப் பொருளாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் "ஊடகங்களின் ஊனப்பார்வை"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "நாட்டு நடப்பும்- நமது மார்க்கமும்"  என்ற தொடர் தலைப்பில் கேள்வி- பதில் முறையில் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

இறுதியாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் தமீம்,M.I.Sc.,அவர்கள் "ஷைத்தான்களை விரட்டுவோம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து மண்டல செயலாளர் மவ்லவி, முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு  நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.


இந்நிகழ்ச்சியில்,சென்ற மாத கேள்வி-பதில் போட்டியில் முதல் மூன்று நிலைகளை பிடித்த சகோதர சகோதரிகளுக்கு 'ஊக்கப்பரிசுகள்' வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.