வியாழன், 24 ஜனவரி, 2013

கத்தரில் விஸ்வரூபம் படத்திற்கு தடை! Viswaroopam Movie banned in Qatar!



இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படத்தை தடை விதிக்க கோரி கத்தர் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் - QITC) மேற்கொண்ட முயற்சியால், 24-01-2013 அன்று கத்தரில் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலி்ல்லாஹ்! 

மற்ற நாடுகளைப் போலவே, கத்தர் நாட்டிலும் கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படம் வெளியிட அனுமதிக்கப்படமாட்டாது என நினைத்திருந்தோம். அதற்கான நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்டவர்கள் செய்திருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் எதுவும் செய்யவில்லை.

இதற்கிடையில், 24-01-2013 வியாழன் அதிகாலை 5:30 மணிக்கு நம் சகோதரர். தஞ்சாவூர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள், கத்தர் மண்டல அலுவலகம் மற்றும் நிர்வாகிகளை டெலிஃபோனில் தொடர்பு கொண்டு, "இன்று மாலை தோஹாவிலுள்ள தியேட்டரில் விஸ்வ(விஷம)ரூபம் திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது என்று இன்றைய 'கல்ஃப் டைம்ஸ்' நாளிதழில் செய்தி போடப்பட்டிருக்கிறது” என்று தகவல் கூறினார்.

உடனே மண்டல நிர்வாகிகள், தத்தமது அலுவலக வேலையில் இருந்த காரணத்தினால்,கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறை (ஃபனார்) அலுவலர்களை டெலிஃபோனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்கள். அவர்களோ, மொபைலை/தொலைபேசியை எடுக்கவில்லை.

பின்பு, சரியாக காலை 10:43 மணிக்கு, ஃபனார் மேற்பார்வையாளரான,  ஸூடான் நாட்டைச் சார்ந்த டாக்டர்.அலீ இத்ரீஸ் அவர்கள், மண்டல தலைவராகிய சாத்தான்குளம் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்களை மொபைலில் அழைத்து "என்ன விஷயம், பலமுறை எனக்கு ஃபோன் செய்துள்ளீர்களே!மீட்டிங்கில் இருந்ததால், மொபைலை எடுக்கவில்லை" என்று கூறியிருக்கிறார். அதற்கு டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள், 'இந்திய வரலாற்றில் "விஸ்வ(விஷம)ரூபம்" என்ற திரைப்படம் போல், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை' என்று கூறிவிட்டு, நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி, அதை உடனடியாக கத்தரில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கும் படி கூறியிருக்கிறார். அதிர்ச்சிக்குள்ளான, டாக்டர். அலீ இத்ரீஸ் அவர்கள், ஸூடான் நாட்டைச் சார்ந்த சகோதரர். அபூ உபைதா என்ற அலுவலரை தொடர்புகொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள், சகோதரர். அபூ உபைதாஅவர்களை சரியாக காலை 11:04 மணிக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியிருக்கிறார்.அதிர்ந்து போன சகோதரர்.அபூ உபைதா அவர்கள்,அதற்காக நன்றி தெரிவித்து விட்டு, 'படத்தின் பெயர்-மொழி-திரையிடப்பட இருக்கின்ற தியேட்டர்' ஆகிய விவரங்களை தனது மொபைல் ஃபோனுக்கு மெசேஜ் மூலம் அனுப்புமாறு கூறியிருக்கிறார். அவ்வாறே, சரியாக காலை 11:19 மணிக்கு மெசெஜை, டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அனுப்பியிருக்கிறார். பிறகு, சரியாக காலை 11:56 மணிக்கு சகோதரர். அபூ உபைதா அவர்களே டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்களுக்கு ஃபோன் செய்து 'நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது; படம் தடை செய்யப்பட்டுவிட்டது; வெளியிடப்படமாட்டாது' என்று கூறி, 'இந்த தகவலை இதுவரை யாரும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும், தவ்ஹீத் ஜமா'அத் ஆகிய நீங்கள் தான் கொண்டு வந்துள்ளீர்கள்' என்றும் கூறிவிட்டு, அதற்காக பிரார்த்தனையும் செய்தார்.

அவர் பேசி முடித்ததும், ஃபனாரின் மலையாள மொழிப்பிரிவு அழைப்பாளர் கேரள மாநிலத்தைச் சார்ந்த சகோதரர். அப்துர்ரஷீத் அவர்கள் 'என்ன விஷயம் என்று மலையாள மொழியில் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்களிடம் கேட்க ,அவரும் மேற்படி விவரங்களை மலையாள மொழியில் கூறியிருக்கிறார். அதுவரை இந்த விஷயம் தெரியாததால் தான் சகோதரர். அப்துர்ரஷீத் அவர்கள் இந்த விஷயத்தை கேட்டிருக்கிறார். தனக்கு தெரியாமல் போனது வியப்பாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்திற்காக, இதே காரியத்தை, ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் ஆத்தூர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இதே தினத்தில் காலை சுமார் 10:30 மணிக்கு கத்தர் அரசு இஸ்லாமிய அலுவல்கள் துறைக்கு தொடர்பு கொண்டு செய்தார்கள்.அவரிடம், சகோதரர்.ஜாபிர் பின் ஹமத் ஆல-தஜ்ரான் அவர்களை தொடர்புகொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள் .அவ்வாறே, மதனீ அவர்கள், சகோதரர். ஜாபிர் அவர்களை தொடர்பு கொண்டு, சுமார் 20 நிமிடங்கள் அரபி மொழியில் படம் குறித்த விவரங்களை கூறியிருக்கிறார்கள். பின்பு, சுமார் 12:40 மணிக்கு சகோதரர். ஜாபிர் அவர்களே, மதனீ அவர்களை தொடர்பு கொண்டு 'கத்தர் அரசு கலாச்சாரத்துறை அமைச்சகம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, படம் தடை செய்யப்பட்டு விட்டது' என்று தகவல் சொல்லியுள்ளார்.

இருப்பினும், நாங்கள் விடவில்லை. சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு நம் சகோதரர்களாகிய கீரமங்கலம் தாஹா, துளசேந்திரபுரம் இலியாஸ் மற்றும் வடகீழ்குடி அப்துர்ரஹ்மான் ஆகியோரை பல்வேறு நேரங்களில் அனுப்பி, படம் தடை செய்யப்பட்டதை ஊர்ஜிதம் செய்து கொண்டோம்.

அல்லாஹுவிற்கே எல்லாப்புகழும்!