சனி, 26 ஜனவரி, 2013

24-01-2013 கத்தர் மண்டலம் - அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 24-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் 'மண்ணை கவ்வச் செய்யும் மவ்லீத்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக,மண்டல அழைப்பாளர் மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் 'மார்க்கத்தின் பார்வையில் மரண தண்டனை' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

புதிதாக இன்று வந்திருந்த 10 சகோதரர்களுக்கு "ஜமா'அத் காலண்டர்,இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்தகம், வேதம் கொடுக்கப்பட்டோர் யார்? என்ற புத்தகம்,ஏகத்துவம் மாத இதழ்,கொள்கை விளக்கம் என்ற சி.டி ,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் டி.வீ.டி,ஏழு தலைப்புகளில் உரைகள் அடங்கிய டி.வீ.டி" ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.