வியாழன், 1 நவம்பர், 2012

30-10-2012 கத்தர் மண்டலம் அல் ஃகோர் -"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"


அல்லாஹுவின் அருளால், 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம்,கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சி 30-10-2012 செவ்வாய்  மாலை  6 மணி முதல் 9 மணி வரை அல்  ஃகோர் கேஸ் கம்யூனிட்டி  வளாகத்தில்  உள்ள  அல் வாஹா கிளப் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

இதில், பிற மத சகோதர-சகோதரிகளின் கேள்விகளுக்கு தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும் ,மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர்  சகோ. முஹம்மத் அல்தாஃபி அவர்கள் பதில் அளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், 14 முஸ்லிம் அல்லாத பிற மத சகோதர-சகோதரிகள்,  இஸ்லாத்தின் கடவுள் கொள்கை, குடும்ப கட்டுப்பாடு, உருவப்படங்கள், இசை, பெண்ணடிமைத்தனம், குற்றங்களுக்கான கடுமையான தண்டனை, முஸ்லிம் மக்களிடம் உள்ள மூட பழக்க வழக்கங்கள், பிராணிகள் வதை, குர்'ஆனில் உள்ள அறிவியல் அத்தாட்சிகள், நோன்பின் பலன்கள், ஒரே நாள் பெருநாள்  ஆகியவை  குறித்த சந்தேகங்களை   வெளிப்படையாகவும்-எந்தவித தயக்கங்கள் இன்றியும் கேள்விகளாக கேட்டு, இதை  ஒரு மத நல்லிணக்கத்திற்கு வழிவகை செய்யும் நிகழ்ச்சியாகவும்  மாற்றிக்காட்டினார்கள்.

கேள்வி கேட்ட பிற மத சகோதர-சகோதரிகளுக்கு  கத்தர் மண்டலம் சார்பாக "குர்'ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் மற்றும் தாயகத்தில் ஏற்கனேவே நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் டி.வீ.டி" ஆகியவை  அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இந்திய-இலங்கையைச் சார்ந்த 250 க்கும் மேற்பட்ட பிறமத சகோதர-சகோதிரிகளும், முஸ்லிம்களும், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டார்கள். வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கான அனைத்து  ஏற்பாடுகளையும் அல்-ஃகோர் கேஸ் கம்யூனிட்டி இஸ்லாமிய சகோதரர்கள். நைனா முஹம்மத், அப்துல் கரீம், இப்ராஹீம், ஷாஜஹான், ஷஹாப்தீன், ஷரீஃப் ஆகியோர் செய்திருந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.