அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 16/08/2012 வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி" QITC மர்கஸ் உள்ளரங்கத்தில் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் 11.30 மணிவரை மண்டல இணைச் செயலாளர் சகோதரர். MS பக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சகோதரர். M. முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் "கேள்வி பதில் நிகழ்ச்சி" நடைபெறும் முறையை விளக்கினார்கள்.
அடுத்ததாக தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்கள் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார்ககள். இதில் 150-க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மார்க்க சம்மந்தமான சந்தேகங்களை கேட்க அதற்கு குர்ஆன் , ஹதீஸ் அடிப்படையில் மவ்லவி பதிலளித்தார்கள்.
இறுதியில் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. பின்னர் இரவுத்தொழுகை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!