வியாழன், 30 ஆகஸ்ட், 2012

31-08-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - அழைப்பு


بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

மாதாந்திர பெண்கள்

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
அழைப்பிதழ்

நாள்: 31/08/2012 வெள்ளி மாலை 7:௦௦ மணி
இடம்: QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !

QITC 
மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்.

அதேபோல் இன்ஷா அல்லாஹ்வரும் வாரம் 31/08/2012 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கூடுதல் தகவலுக்கு:
சகோமுஹம்மத் இல்யாஸ், +974 – 5518 7260
(பொருளாளர் பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

"இஸ்லாம் கூறும் சுயமரியாதை" பயான் வீடியோ - மௌலவி, எம்.எம். சைபுல்லாஹ் MISc

இறைவனின் திருப்பெயரால்...

02/08/2012 அன்று தோஹா சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில் நடைபெற்ற QITC-யின் "ரமலான் ஸஹர் நேர சிறப்பு சொற்பொழிவு" நிகழ்ச்சியில், மௌலவி, எம்.எம். சைபுல்லாஹ் MISc அவர்கள் "இஸ்லாம் கூறும் சுயமரியாதை" என்ற தலைப்பில் ஆற்றிய பயானை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

"இஸ்லாம் கூறும் சுயமரியாதை"



YOUTUBE-லிருந்து வீடியோ நீக்கப்பட்டு விட்டது.
இன்ஷால்லாஹ் விரைவில் நமது இணைய தளத்தில் வெளியிடப்படும்.



QITC நடத்திய "ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" FANAR - 2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 19/08/2012 அன்று நாயிற்றுக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" FANAR உள்ளரங்கில் காலை 7:00 மணி முதல் 8:30 மணிவரை மண்டல செயலாளர் சகோதரர். M.முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக சகோதரர். .M.முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் தொண்டரணி சகோதரர்கள் ஆற்றிய பணிகள் மற்றும் அவர்களுக்கு நன்றியினை கூறினார். பின்னர் அவர்களுக்கு தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்களால் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. 

பின்னர் சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்கள் "அமல்களின் முக்கியத்துவம்!" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதில் "நீங்கள் அனைவரும் இங்கு தான் குடும்பத்துடன் வசிக்க உறுதியான எண்ணம் கொள்ளுங்கள். அல்லாஹ் அதற்கான வழிகளை ஏற்படுத்துவான்" என்று கூறியது மக்கள் மனதை நெகிழவைக்கும் வண்ணம் அமைந்தது (வீடியோ).

பின்னர் மண்டல துணை செயலாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் நன்றியுரை கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் 550-க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள், சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!




புதன், 22 ஆகஸ்ட், 2012

"சுய பரிசோதனை" பயான் வீடியோ - மௌலவி, எம்.எம். சைபுல்லாஹ் MISc

இறைவனின் திருப்பெயரால்...

09/08/2012  அன்று அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப்  உள்ளரங்கத்தில் நடைபெற்ற QITC-யின் "ரமலான் ஸஹர் நேர சிறப்பு சொற்பொழிவு" நிகழ்ச்சியில், மௌலவி, எம்.எம். சைபுல்லாஹ் MISc அவர்கள் "சுய பரிசோதனை" என்ற தலைப்பில் ஆற்றிய பயானை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

"சுய பரிசோதனை"



YOUTUBE-லிருந்து வீடியோ நீக்கப்பட்டு விட்டது.
இன்ஷால்லாஹ் விரைவில் நமது இணைய தளத்தில் வெளியிடப்படும்.



திங்கள், 20 ஆகஸ்ட், 2012

QITC- நடத்திய மாபெரும் "இப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" அதில் சகோதரர் ஜீவன் இஸ்லாத்தை ஏற்றார்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 17/08/2012 வெள்ளிக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய மாபெரும் "இப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" அல் சத் விளையாட்டு உள்ளரங்கத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மண்டல துணைச் செயலாளர் சகோதரர். A. சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக சகோதரர். M. முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள். அடுத்ததாக தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்கள் "ஏழை ஆகிவிடாதே!" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 

பின்னர் இலங்கை சகோதரர் ஜீவன் அவர்களுக்கு சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்கள் இஸ்லாமிய கொள்ளையை விளக்கினார்கள். அவர் இஸ்லாத்தை தான் வாலவியல் நெறியாக ஏற்றுக்கொண்டு தனது ஜீவன் என்ற பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார் வந்திருந்தநோன்பாளிகளுக்கு இது நெகிழ்வை ஏற்படுத்தியது.

பின்னர் வந்திருந்த அனைவருக்கும் இப்தார் செய்வதற்கான சிற்றுண்டி வழங்கப்பட்டு மக்ரிப் தொழுகை நிறைவேற்றப்பட்டது.

மண்டல துணை பொருளாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். துணை செயலாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் கூட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் இப்தார் உணவு பரிமாறப்பட்டது. உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குளுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!




கத்தர் மண்டலத்தின் கிளைகளில் 17-08-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த17-08-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
  1. வக்ரா பகுதியில்- சகோதரர். எம் .எம் ..சைபுல்லாஹ் ஹாஜா Misc அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- சகோ லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி இஸ்சதீன் ரில்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. அல் ஃஹீஸா பகுதியில் - சகோ கபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.முகமது யூஸுப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கர்தியாத் பகுதியில் சகோ காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மைதர் பகுதியில் மவ்லவி முஹம்மத் அலி misc அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



கத்தர் மண்டலத்தில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி"

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 16/08/2012 வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி" QITC மர்கஸ் உள்ளரங்கத்தில் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் 11.30 மணிவரை மண்டல இணைச் செயலாளர் சகோதரர். MS பக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சகோதரர். M. முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் "கேள்வி பதில் நிகழ்ச்சி" நடைபெறும் முறையை விளக்கினார்கள்.

அடுத்ததாக தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்கள் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார்ககள். இதில் 150-க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மார்க்க சம்மந்தமான சந்தேகங்களை கேட்க அதற்கு குர்ஆன் , ஹதீஸ் அடிப்படையில் மவ்லவி பதிலளித்தார்கள். 

இறுதியில் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. பின்னர் இரவுத்தொழுகை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!



வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் QITC-மாபெரும் இப்தார் சிறப்பு நிகழ்ச்சி-17/08/2012


அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் QITC -யின்  மாபெரும்
இப்தார்  சிறப்பு நிகழ்ச்சி-2012

நாள்    :   இன்ஷா அல்லாஹ்   17/08/2012 வெள்ளிக்கிழமை 
நேரம் :   மாலை 05:00 மணிக்கு
இடம்  :   அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கம். அல் சத்

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !!!

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை  மாலை 5 : 00 மணிக்கு அல் சத்  ஸ்போர்ட்ஸ் கிளப்    உள்ளரங்கத்தில்  மாபெரும் இப்தார் சிறப்பு நிகழ்ச்சி  நடைபெற உள்ளது . எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியிலும் அதைத் தொடர்ந்துள்ள  இப்தார் உணவிலும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.
========================================================================

சிறப்புரை:
மவ்லவி. எம்.எம்.சைபுல்லாஹ் ஹாஜா  MISC

தலைப்பு:
"ஏழ்மையும் ஏழைகளும்"

======================================================================== 

குறிப்பு:  
1 . பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது.

வாகனத்தொடர்புக்கு : 
சகோ : காதர்  மீரான்       - 55384932
சகோ :ஹயாத் பாஷா   -  66228419

# இப்தார்  உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.#

இந்நிகழ்ச்சிக்கு வரக்கூடிய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு:

அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் நான்காவது  (GATE  NO : 4) வாயிலின் வழியாக அரங்கத்திற்குள் வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்,

அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப் எங்கு உள்ளது ? அறிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
========================================================================
 கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் QITC
நூலகம் வழங்கும்....
புதிய வரவுகள் - நூல்கள் மற்றும்
CD/ DVD க்கள்
திருக்குர்ஆன் இறைவேதமே !
பைபிள் இறைவேதமா ?
தப்லீக் ஜமாஅத்தாருடன்  நடந்த விவாதம் (இஸ்லாத்தின்  மூல ஆதாரம் எது?)
குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு.
திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்
        குர் ஆன் விரிவுரை - இப்னு கஸீர்  4 பாகங்கள்
        நபிமொழி தொகுப்புகள்:
§  ஸஹீஹ் புகாரி  5 பாகங்கள்
§  ஸஹீஹ் முஸ்லிம் 4 பாகங்கள்.
§  சுனனுன் நஸாயி.
§  ஜாமிவுத் திர்மீதி.
§  ரியாளுஸ்ஸாலிஹீன்.
இன்னும் பல்வேறு தலைப்புகளில் ஏகத்துவ மார்க்க அறிஞர்கள் எழுதிய நூற்க்கள் மற்றும் சொற்பொழிவுகளின் CD/DVDக்கள்.
கிடைக்குமிடம்:
அனைத்தும் QITC அலுவலகம் மற்றும்  QITC இஃப்தார் நிகழ்சி அரங்கத்தில் கிடைக்கும்.
========================================================================



ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

இரவு தொழுகை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி 10/08/2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் ரமலான் மாத கடைசி பத்தில் இரவு தொழுகை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி இரவு 11.௦௦ மணி முதல் நள்ளிரவு 12.௦0 மணிவரை நடைபெற்றுகொண்டிருக்கிறது.

10/08/2012 வெள்ளிகிழமை அன்று நடைபெற்ற தொழுகை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் ஹாஜா Misc அவர்கள் "சைத்தானின் சூழ்ச்சிகள்" என்ற தொடர் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!





கத்தர் மண்டல கிளைகளில் 10-08-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி !

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த10  -08 -2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

  1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.வக்ரா.ஃ பக்ருதீன்     அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- மௌலவி .முகமது அலி  Misc   அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் –  மௌலவி  எம் .எம் ..சைபுல்லாஹ் ஹாஜா Misc   அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான்    அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. அல் ஃஹீஸா பகுதியில் -   மௌலவி .இஸ்ஸத்தின் ரில்வான்  அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. சலாத்தா ஜதீத் பகுதியில்-  சகோதரர்.முகமது யூஸுப்   அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கர்தியாத் பகுதியில் மௌலவி .லாயிக் அவர்கள்  உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


சனி, 11 ஆகஸ்ட், 2012

அல்கோர் ஸஹர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 09/08/2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 09/08/2012  வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "ரமலான் ஸஹர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப்  உள்ளரங்கத்தில்  இஷா மற்றும் இரவு தொழுகையை தொடர்ந்துஇரவு 10.30  மணி  முதல் அதிகாலை 3.30 மணிவரைமண்டல துணைத் தலைவர் சகோதரர். ஜியாவுதீன் அவர்கள் தலைமையில்நடைபெற்றது. சகோதரர். ஜியாவுதீன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

அடுத்ததாக கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அழைப்பாளர் .சகோதரர். அப்துர்ரஹ்மான்  அவர்கள் "அழைப்போம் வாருங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக  தாயகத்திலிருந்து வருகை  புரிந்துள்ள  சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்கள் "சுய பரிசோதனை" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.   அவர்கள் தனது உரையில் நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைப்படி தான் நம்முடைய வாழ்க்கை அமைத்திருக்கிறதா என்பதை நம்மை நாமே சுய பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கு சில உதாரணங்களாக நபி ஸல் அவர்கள் தாடி வைப்பதை வலியுறித்தினார்கள் ஆனால் இன்று நம்மில் பலர் அந்த தாடி வைப்பதை மனைவியரின்  திருப்திக்காக அதை செய்வதில்லை என்பதையும் வட்டியை அல்லாஹ் தடுத்துள்ளதை இன்று சர்வ சாதரணமாக மீறுவதையும்  தனது உரையில் சுட்டிக்காட்டினார்கள் (வீடியோ).

மண்டல மர்கசில் சகோதரர் .அன்ஸார் .மௌலவி அவர்கள் நடத்திய அரபி ஆரம்பநிலை  பாட வகுப்பில் கலந்துகொண்டு தேர்வு எழுதி வெற்றிபெற்ற சகோதர, சகோதரிகள், சிறுவர் சிறுமியருக்கான சான்றிதழ்களை  சகோதரர் அப்துஸ்ஸமத்மதனீ,சகோதரர்.சைபுல்லாஹ் ஹாஜா Misc . ஆகியோர் வழங்கினார்கள்.

மண்டல  செயலாளர் சகோதரர் .முகமது அலி  அவர்கள் மண்டல செயல்பாடுகள் மற்றும்  எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். அல்கோர்  கிளையின் பொறுப்பாளர் சகோதரர். நைனாமுஹமத் அவர்கள் நன்றியுரை  வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் 250    க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு பரிமாறப்பட்டது. உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக் குழுவினர்  சிறப்பாக செய்திருந்தனர்.  தொண்டரணியினர்  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற நல்ல ஒத்துழைப்பு வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.






கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம் 08/08/2012

அல்லாஹ்வின் பேரருளால்,
வழமையாக நடைபெறும், கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம் மண்டல மர்கசில் [QITC] 08-08-2012 புதன்கிழமை மாலை 7.30 மணி முதல் 8.15 மணி வரை நிர்வாகக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சவூதி மர்கஸ் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் குறை, நிறைகள், மற்றும் எதிர்வரும் அல்க்ஹோர் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியில் செய்யப்படவேண்டிய ஏற்ப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மண்டல இணைச் செயலாளர். வக்ரா .ஃபக்ருதீன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எட்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு முன்னதாக தொண்டரணியின் கூட்டம் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.



திங்கள், 6 ஆகஸ்ட், 2012

கத்தர் மண்டல கிளைகளில் 03-08-2012 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு !

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 03-08-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

  1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.வக்ரா.ஃ பக்ருதீன்     அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- மௌலவி .முகமது அலி  Misc   அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் –  மௌலவி .அப்துஸ் சமத் மதனீ  அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. லக்தா பகுதியில் - சகோதரர்.எம் .எம் .சைபுல்லாஹ் ஹாஜா Misc   அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. அல் ஃஹீஸா பகுதியில் -   மௌலவி .இஸ்ஸத்தின் ரில்வான்  அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. சலாத்தா ஜதீத் பகுதியில்-  சகோதரர்.முகமது யூஸுப்   அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கர்தியாத் பகுதியில் மௌலவி .லாயிக் அவர்கள்  உரையாற்றினார்கள்.
 இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


சவூதி மர்கஸ் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 02/08/2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 02/08/2012  வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய  "ரமலான் ஸஹர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில்  இஷா மற்றும் இரவு தொழுகையை தொடர்ந்துஇரவு 10.30 மணி  முதல் அதிகாலை 3.30   மணிவரை மண்டல துணைச்செயலாளர் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சகோதரர் .அப்துர்ரஹ்மான்    அவர்கள் வரவேற்புரை வழங்க  .அடுத்ததாக கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அழைப்பாளர் மௌலவி .இஸ்ஸத்தின் ரில்வான் ஸலஃபி அவர்கள் "இஸ்லாத்தில் எது நாகரீகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

அடுத்ததாக  சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர்.அப்துஸ் சமத் மதனீ அவர்கள்  "உலக மோகத்தில் உயர்ந்தோனின் திருப்பிதியா?" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக  தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர் .எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்கள் "இஸ்லாம் கூறும் சுயமரியாதை" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அவர்கள் தனது உரையில் நபி ஸல் அவர்கள் தனது சகாபாக்களை எவ்வாறு சுயமரியாதையோடு வாழ வழிகாட்டினார்கள். அல்லாஹ்வை தவிர யாருக்கும் சிரம் பணியக்க்கூடாது என்று சுய மாரியாதையோடு வாழ பழக்கினார்கள் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளின் மூலம் விளக்கினார்கள் (வீடியோ).

வக்ரா ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின்    மார்க்கஅறிவுப்போட்டியில்முதல், இரண்டு, மற்றும் மூன்றாம் இடம் பிடித்த    சிறுவர் சிறுமியருக்கு முன்னாள் நிர்வாகிகள்,மற்றும்  சகோதரர்  அப்துஸ்ஸமத் மதனீ, சகோதரர். சைபுல்லாஹ் ஹாஜா  Misc ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். மேலும் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைபெற்ற பெண்கள் மார்க்க அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மண்டல  செயலாளர் சகோதரர் .முகமது அலி  அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். லக்தா கிளையின் பொறுப்பாளர் சகோதரர்  .ஜலால்  அவர்கள் நன்றியுரை  வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் 450க்கும் அதிகமான சகோதர ,சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர்.வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு பரிமாறப்பட்டது .உணவுக்கான ஏற்பாட்டினை  உணவுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.  தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் வெக்கையையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியது நிகழ்ச்சிக்கு  வந்திருந்த  மக்களின்  பாராட்டை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.