அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல கிளை மற்றும் கத்தர் இஸ்லாமிய கலாச்சார மையமும் (FANAR) இணைந்து 08-07-2012 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணி முதல் 10.00 மணி வரை ஃ பனார் உள்ளரங்கத்தில் "ரமலானை வரவேற்போம்" என்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டல இணைச்செயலாளர் சகோதரர். வக்ரா ஃ பக்ருதீன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர். மௌலவி .அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் ரமலான் மாதத்தை எவ்வாறு வரவேற்க வேண்டும் எவ்வாறு பேணுதலாக இருக்கவேண்டும். பொய் பேசுவதில் இருந்தும் வீணான தர்க்கங்கள் புரிவதில் இருந்தும் நாவை பாதுகாக்கவேண்டும் என்றும் தொலைக்காட்சிக்கு ஒருமாதம் மூடுவிழா நடத்தவேண்டும் என்றும் திருமறை அருளப்பட்ட மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் அதிகம் ஓதவேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்கள்.
மண்டல செயலாளர் சகோதரர் .முகமது அலி Misc .அவர்கள் சகோதரர். அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றியதில் இருந்து ரமலான் சம்மதமான கேள்விகளை மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ஆர்வமாக அக்கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.
பின்னர் வந்திருந்த அணைத்து சகோதர சகோதரிகளுடைய பெயர்களை எழுதி அதில் இருந்து ஐந்து சகோதரர் ஐந்து சகோதரிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர் .அப்துஸ் சமத் மதனீ அவர்கள் வழங்கினார்கள்.
மண்டலச் செயலாளர் சகோதரர் .முகமது அலி Misc அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். இதில் நூற்றுக்கும் அதிகமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்.
வந்திருந்த அனைவருக்கும் கத்தர் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பில் பரிசுகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது .