திங்கள், 30 ஜூலை, 2012

கத்தர் மண்டல மர்கசில் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சி28 /07 /2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் ரமலான் மாதம் முழுவதும் ஷைக் ஈத் சாரிட்டியும், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) இணைந்து தினந்தோறும் இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து நடைபெற்று வருகிறது.

இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர் .எம் எம் சைபுல்லாஹ் அவர்கள் தொடராக சிற்றுரை ஆற்றிவருகிறார்கள். இன்று 28 /07 /2012 சனிக்கிழமை இப்தார் நிகழ்ச்சியில்  "சுவர்க்கம் செல்ல எளிய வழிகள்" என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !



கத்தர் மண்டல கிளைகளில் 27-07-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 27 -07-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

  1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.வக்ரா.ஃ பக்ருதீன்     அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- மௌலவி .எம் .எம் .சைபுல்லாஹ் Misc   அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் –  மௌலவி .அப்துஸ் சமத் மதனீ  அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் –மௌலவி .லாயீக்  அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துர் ரஹ்மான்   அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. அல் ஃஹீஸா பகுதியில் -   சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. சலாத்தா ஜதீத் பகுதியில்-  சகோதரர்.ஹயாத் பாஷா  அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.




வக்ராவில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி - 26/07/2012

ரமலான் மாத சிறப்பு நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியான அல் வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்க சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 26/07/2012 வியாழக்கிழமை இஷா மற்றும் இரவு தொழுகையை தொடர்ந்து இரவு 9:30 மணி முதல் அதிகாலை 4:௦௦ மணிவரை மண்டல இணைச் செயலாளர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

சகோதரர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் வரவேற்புரை வழங்க, மண்டல செயலாளர் சகோதரர். முகமத் அலி Misc அவர்கள் "சிறுவர் சிறுமியருக்கான மார்க்க அறிவுப்போட்டி"யினை நடத்தினார்கள், நடுவர்களாக சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர்.அப்துஸ்ஸமத் மதனீ,அவர்களும் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்களும் இருந்து நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

சிறுவர், சிறுமியர், அவர்களின் வயது அடிப்படையில் மூன்று பிரிவாக பிரித்து போட்டி நடைபெற்றது. குர்ஆன் சிறிய சூராக்கள் ஓதுதல், துஆ, மற்றும் பேச்சுப்போட்டி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் 25 க்கும் அதிகமான சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மார்க்க அறிவுப்போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் பங்கெடுத்ததற்கான பரிசுகள் வழங்கப்பட்டது, வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் அடுத்த ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியான சவூதி மர்கஸ் நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது (பரிசளிப்பு நிகழ்ச்சி). 

அடுத்ததாக சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர். அப்துஸ் சமத் மதனீ  அவர்கள் "அச்சத்தில் ஆழ்ந்த மனிதர்கள்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்கள் "இருமனம் இணைந்த நறுமணம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அவர்கள் தனது உரையில் திருமணம் எதற்காக முடிக்கவேண்டும் திருமணம் முடிக்க எப்படிப்பட்ட பெண்ணை தேடவேண்டும், எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் முடித்தால் நிம்மதி கிடைக்கும் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளின் மூலம் விளக்கினார்கள்.

மண்டல துணைச் செயலாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். வக்ரா கிளையின் பொறுப்பாளர் சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 350 க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர்.வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சி சிறப்பாக அமைய தொண்டரணியினர் பம்பரமாக சுழன்று பணியாற்றினார்கள்.திருக்குர்ஆன், ஹதீஸ்கிரந்தங்கள், மார்க்கவிளக்க நூல்கள், குறுந்தகடுகள், உணர்வு, தீன்குலப்பென்மணி, ஏகத்துவம் அடங்கிய புத்தக அரங்கம் அமைக்கப்படிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.













செவ்வாய், 24 ஜூலை, 2012

வக்ராவில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி - 26/07/2012


بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் ரமலான் மாதத்தில் பல சிறப்பு சொற்பொழிவு நிகழ்சிகளை ஒவ்வொருவருடமும் நடத்தி வருகின்றது.இந்த சிறப்பு நிகழ்சிகளுக்கு வருடந்தோறும் தாயகத்திலிருந்து சிறப்பு பேச்சாளர்களை தலைமை கத்தர் மண்டலத்திற்கு அனுப்பி தருகிறது.இந்த வருடம் ரமலான் மாதம் முழுவதிற்கும் சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் ஹாஜா Misc அவர்களை தலைமை நமக்கு வழங்கி இருந்தது.

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் QITC ரமலான் மாதம் முழுவதும் பின் வரும் நிகழ்சிகளை இன்ஷாஅல்லாஹ் நடத்த இருக்கிறது .
  1. அல்வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 26 /07 /2012
  2. சவுதி மர்கஸ் அரங்கத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 02 /08 /2012
  3. அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 09 /08 /2012
  4. கத்தாரா கலாச்சார நகரத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 16 /08 /2012
  5. அல்சத் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் சிறப்பு இப்தார் நிகழ்ச்சி 17 /08 /2012
  6. கத்தார் இஸ்லாமிய கலாச்சார மைய அரங்கத்தில் FANAAR ஈத் பெருநாள் சிறப்பு நிகச்சி பெருநாள் அன்று
இந்நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் கத்தர் அரசாங்கம், மற்றும் காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ளது.



வக்ராவில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -  26/07/2012
 மற்றும் 
QITC - ன் சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி  
நாள்    :   26 / 07 / 2012 வியாழன்
நேரம் :   இரவு 8 : 30 மணிக்கு
இடம்  :   வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கம்
அன்பிற்குரிய  சகோதர சகோதரிகளே !!!
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வியாழன் இரவு 8 : 30 மணிக்கு வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில்   இஷா தொழுகை மற்றும்  , இரவுத் தொழுகையைத் தொடர்ந்து  சிறுவர்களுக்கான போட்டி ஆரம்பமாகும் . எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை  அன்போடு  கேட்டுக்கொள்கிறோம்  .
===========================================================
  
 தலைமை : சகோ வக்ரா M . S பக்ருதீன் 


சிறப்புரை : 

1.  மவ்லவி அப்துஸ் சமத் மதனி       -      அச்சத்தில் ஆழ்ந்த மனிதர்கள்! 


2 . மவ்லவி M.M சை
புல்லாஹ் MISc  -   இருமனம் இணைந்த நறுமணம் !



நன்றியுரை :  கிளைப்பொறுப்பாளர் 



===========================================================

குறிப்பு:  
1 . பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது .
2 . அறிவுப்போட்டியில் கலந்துகொள்ளக்கூடிய  சிறுவர்களின்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பயிற்சிக்கு உட்படுத்தி தயார் நிலையில் தாமதம் மில்லாமல் முன்கூட்டியே அழைத்து வரவும்.
3 .ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தொடர்புக்கு : 
சகோ : ஹயாத் பாஷா -66228419
சகோ : காதர்  மீரான் - 55384932
சகோ : ஷேய்க் அப்துல்லாஹ் - 55553263 
 இத்தகவலை மற்றவர்களுக்கு தெரிவிக்க மறந்துவிடவேண்டாம்  !!! 
===========================================================


கத்தர் மண்டல கிளைகளில் 20-07-2012 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 20 -07-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.சபீர் அஹ்மத்    அவர்கள் உரையாற்றினார்கள்.
2 . நஜ்மா பகுதியில்- மௌலவி .ரில்வான்  அவர்கள் உரையாற்றினார்கள்.
3 .அல் அத்தியா பகுதியில் –  மௌலவி .அப்துஸ் சமத் மதனீ  அவர்கள் உரையாற்றினார்கள்.
4 .முஐதர் பகுதியில் –சகோதரர் .அப்துர்ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்.
5  . லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துல் பாசித்   அவர்கள் உரையாற்றினார்கள்.
6  பின் மஹ்மூத் பகுதியில் -  சகோதரர் .வக்ரா .ஃ பக்ருதீன்     அவர்கள் உரையாற்றினார்கள்.
7  . அல் ஃஹீஸா பகுதியில் -   சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
8  .சலாத்தா ஜதீத் பகுதியில்-  சகோதரர்.ஹயாத் பாஷா  அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
 

கத்தர் மண்டல மர்கசில் 19/07/2012 முதல் இரவு தொழுகை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 19/07/2012 அன்று  ரமலான் மாதம் ஆரம்பம் ஆனதால் மண்டல மர்கஸ் உள்ளரங்கத்தில் 8.30 மணி முதல் 10 மணி வரை    இரவு தொழுகை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர் .அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "ரமலான் சிந்தனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்படிருந்தது. இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.



வியாழன், 19 ஜூலை, 2012

கத்தர் மண்டல மர்கசில் உம்ரா பயிற்சி வகுப்பு 13-07-2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கஸ் உள்ளரங்கத்தில் வெள்ளிக்கிழமை 13-07-2012  மாலை 7 மணி முதல் 8.30  மணிவரை  உம்ரா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
"நபி வழியில் நமது உம்ரா" என்ற தலைப்பில்  சவூதி மர்கஸ் அழைப்பாளர்  சகோதரர் .அப்துஸ் சமத் மதனீ அவர்கள் நபி வழியில் எவ்வாறு உம்ரா செய்வது என்பது பற்றி  விளக்கப்படங்களுடன்  பயிற்சி வகுப்பை நடத்தினார்கள்.
பின்னர் கலந்துகொண்ட சகோதர ,சகோதரிகள் தங்களுக்கு உம்ரா செய்வது குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும். கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் (QITC) சார்பாக "உம்ரா கையேடு" வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.



مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Vodafone: 70138460

கத்தர் மண்டல கிளைகளில் 13 -07-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 13 -07-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.சபீர் அஹ்மத்    அவர்கள் உரையாற்றினார்கள்.
2 . நஜ்மா பகுதியில்- மௌலவி .ரில்வான்  அவர்கள் உரையாற்றினார்கள்.
3 .அல் அத்தியா பகுதியில் –  மௌலவி .அப்துஸ் சமத் மதனீ  அவர்கள் உரையாற்றினார்கள்.
4 .முஐதர் பகுதியில் – .மௌலவி .லாயிக்   அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.முஹமத் யூசுப்   அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் - சகோதரர்.முஹமத் அலி Misc  அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில்-  சகோதரர்.அப்துல்பாசித்   அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில்- சகோதரர்.அப்துர்ரஹ்மான்   அவர்கள் உரையாற்றினார்கள்.
9. பின் மஹ்மூத் பகுதியில் -  சகோதரர் .வக்ரா .ஃ பக்ருதீன்     அவர்கள் உரையாற்றினார்கள்.
10 . அல் ஃஹீஸா பகுதியில் -   சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
11.சலாத்தா ஜதீத் பகுதியில்-  சகோதரர்.ஹயாத் பாஷா  அவர்கள் உரையாற்றினார்கள்.
  
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Vodafone: 70138460

கத்தர் மண்டல மர்கசில் ரமலான் மார்க்க அறிவுப்போட்டி நிகழ்ச்சி 12-07-2012

அல்லாஹ்வின் பேரருளால்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 12-07-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:20 மணி வரை எதிர்வரும் ரமலானை முன்னிட்டு ரமலான் தொடர்பான மார்க்க அறிவுப்போட்டி (கேள்வி, பதில்) நிகழ்ச்சியாக  மண்டலமர்கஸ் உள்ளரங்கத்தில் மண்டல பொருளாளர், சகோதரர். முஹமத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக மண்டல பேச்சாளர் சகோதரர்  காதர் மீரான் அவர்கள்  "நபிவழியில் நோன்பு நோற்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் மண்டல செயலாளர் சகோதரர் .முஹமத் அலி Misc அவர்கள் மார்க்க அறிவுப்போட்டியை (கேள்வி, பதில்)  பெண்கள், ஆண்கள் என்று இரு குழுக்களாக பிரித்து  ரமலான் தொடர்பான சந்தேகங்களை போக்கும் முகமாக ரமலான் தொடர்பான கேள்விகளை கேட்டு அவற்றுக்கு மதிப்பெண் வழங்கினார்கள். இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சிறப்பாக பதில் அளித்தனர்.

மண்டல துணைச் செயலாளர் சகோதரர் .தஸ்தகீர் அவர்கள் அறிவிப்புகள் செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான இந்திய, இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் மற்றும் சிறார்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.









مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Vodafone: 70138460

செவ்வாய், 10 ஜூலை, 2012

கத்தர் இஸ்லாமிய கலாச்சார மையத்தில் கத்தர் மண்டலம் நடத்திய ரமலானை வரவேற்ப்போம் சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல கிளை மற்றும் கத்தர்  இஸ்லாமிய கலாச்சார மையமும் (FANAR)  இணைந்து 08-07-2012 ஞாயிற்றுக்கிழமை  இரவு 8.45  மணி முதல் 10.00  மணி வரை  ஃ பனார் உள்ளரங்கத்தில் "ரமலானை வரவேற்போம்" என்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டல இணைச்செயலாளர் சகோதரர். வக்ரா ஃ பக்ருதீன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர். மௌலவி .அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள்  ரமலான் மாதத்தை எவ்வாறு வரவேற்க வேண்டும் எவ்வாறு பேணுதலாக இருக்கவேண்டும். பொய் பேசுவதில் இருந்தும் வீணான  தர்க்கங்கள் புரிவதில் இருந்தும் நாவை பாதுகாக்கவேண்டும் என்றும் தொலைக்காட்சிக்கு ஒருமாதம் மூடுவிழா நடத்தவேண்டும் என்றும் திருமறை அருளப்பட்ட  மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் அதிகம் ஓதவேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்கள்.

மண்டல செயலாளர்  சகோதரர் .முகமது அலி Misc .அவர்கள்  சகோதரர். அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றியதில் இருந்து ரமலான் சம்மதமான கேள்விகளை மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ஆர்வமாக அக்கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

பின்னர் வந்திருந்த அணைத்து சகோதர சகோதரிகளுடைய பெயர்களை எழுதி அதில் இருந்து ஐந்து சகோதரர் ஐந்து சகோதரிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை சவூதி மர்கஸ் அழைப்பாளர்  சகோதரர் .அப்துஸ் சமத் மதனீ அவர்கள் வழங்கினார்கள்.

மண்டலச் செயலாளர் சகோதரர் .முகமது அலி Misc அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். இதில் நூற்றுக்கும் அதிகமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்.

வந்திருந்த அனைவருக்கும் கத்தர்  இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பில் பரிசுகள் மற்றும்  சிற்றுண்டி வழங்கப்பட்டது .