சனி, 30 ஜூன், 2012

கத்தர் மண்டல கிளைகளில் வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 29-06-2012

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 29-06-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !
  1. வக்ரா பகுதியில்- மௌலவி .முகமது அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- சகோதரர். முகமது யூசு ஃ ப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – .மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில்- சகோதரர்.ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில்- சகோதரர்.சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,ரில்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.அப்துல்கஃபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  12. கர்வா கேம்பில்- மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



கத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 28-06-2012

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 28-06-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை பொருளாளர் சகோதரர் முகமது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர்மீரான் அவர்கள் "நரகில் தள்ளும் பித் அத்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் .சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் "அருள் மழை பொழியும் ரஹ்மான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலி MISC அவர்கள் "சுய மரியாதை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல இணைச் செயலாளர் சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.



வியாழன், 28 ஜூன், 2012

QITC யின் பெண்கள் மார்க்க அறிவுப்போட்டி 29-06-2012


 بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

QITC யின் பெண்கள் மார்க்க அறிவுப்போட்டி 29/06/2012

நாள் : 29-06-2012 - வெள்ளிக்கிழமை

இடம் : QITC உள் அரங்கம்

நேரம் : மாலை 7 மணி முதல்


இன்ஷா அல்லாஹ்! வரும் வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு பெண்களுக்காக அவர்களின் மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ளும் விதமாக
"பெண்கள் மார்க்க அறிவுப்போட்டி" 
நடைபெறும்.

கேள்விகள் நேன்பு மற்றும் தர்மம் என்ற தலைப்பிலிருந்து கேட்கப்படும்,
எனவே நீங்கள் அனைவரும் தயார்நிலையில் வரவும்.

கூடுதல் தகவலுக்கு :
முஹம்மத் இல்யாஸ் +974 - 5518 7260 
(பெண்கள் பயான் நிகழ்ச்சி பொறுப்பாளர்)

"இன்றைய பெண்களின் முக்காடு!"


"இன்றைய பெண்களின் முக்காடு!"

"நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்." (திருக்குர்ஆன் - 33:59)

அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தனர். அது கண்ட நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு "அஸ்மாவே, நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது" என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), ஆதாரம்: அபூதாவூத் - 4092)

முக்காடு என்பது தமிழ் பேசும் சகோதரிகளால் பல வண்ணங்களில் துப்பட்டி, அரை துப்பட்டி, முழு துப்பட்டி, கூசாலி துப்பட்டி, புர்கா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு கற்பனையான வடிவம் கொடுத்து அதை அணிவதையே இஸ்லாமிய உடையாக கருதுகிறார்கள். உண்மையில் இஸ்லாமிய உடை என்று ஒன்று இல்லை. அந்தந்த நாடுகளில் சகோதரிகள் அங்குள்ள தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, இறைத் தூதர் சொன்ன வழியில் அணிவதே இஸ்லாமிய உடையாகும். முகம், இரு கைகள் மட்டும் தெரிய மற்ற உடல் உறுப்புகளை மறைப்பது, இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது அனைத்தும் இஸ்லாமிய உடையாகும். அது எந்த வண்ணத்தில், வடிவில் இருந்தாலும் சரியே. இக்கட்டுரையின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் அதே வார்த்தையை பயன்படுத்துகிறோம். உண்மை நிலையை உணர்த்தவே இவ்வாறு அழைக்கிறோம்.

முக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

1. பார்த்தால் முக்காடு

இக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது. யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள். சகோதரிகளே! முக்காடு உங்களுக்கா!? மற்றவர்களுக்கா!? முக்காடு என்பது முஸ்லிம்களின் கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா!? மாற்று மத சகோதரர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க தேவை இல்லையா !

2. கிராமிய முக்காடு

முஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை அறியாத அப்பாவிகள். ஏன்!? முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா!?

3. கிழடு கட்டை முக்காடு

இக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம் தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு (!) ‘ஹாயாக’ போய்க்கொண்டு இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம் பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது!

4. சீருடை முக்காடு (Uniform)

இது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா!?

5. சவுதி முக்காடு

இவர்கள் சவூதி அல்லது மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவார்கள், ஏன்? மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ?

6. ஏர்போர்ட் முக்காடு

இது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள் தங்களது சொந்த வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும். வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும் காரணம்.

இப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம். முக்காடு போடும் பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு, கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

முக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல. தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர தவறிவிட்டோம்.!?

படித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம், பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார்.

உயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான் பட்டு துணியில் சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள். கற்களையோ, கூலாங்கற்களையோ அல்ல. இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து முக்காடு இடுங்கள்.

நன்றி: TNTJ குவைத்

ஞாயிறு, 24 ஜூன், 2012

22-06-2012 கத்தர் மண்டல பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின்,கத்தர் மண்டல பொதுக்குழுக் கூட்டம்,மண்டல மர்கஸ் உள்ளரங்கத்தில்,22-06-2012 வெள்ளியன்று மாலை 7:00 மணி முதல் 9:30 வரை நடைபெற்றது.

மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையேற்று "வரவேற்புரை" நிகழ்த்தினார்கள்.

அடுத்து,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் அதன் முக்கியத்துவம், கொள்கை உறுதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின் நிலைபாடு மற்றும் மறுமை வெற்றி ஆகியவற்றை உள்ளடக்கி, விளக்கமாக உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "மண்டல நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களை" குறிப்பிட்டு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றார்கள்.

அடுத்து,மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ M.I.Sc., அவர்கள் "மண்டல மர்கசின் ஆண்டறிக்கையை" விளக்கி கூறினார்கள்.

பின்பு,மண்டல பொருளாளர் சகோதரர்.முஹம்மத் இலியாஸ் அவர்கள் "மண்டல மர்கசின் நிதி நிலை அறிக்கையை" புள்ளி விவரங்களுடன் கூறினார்கள்.

அடுத்து,உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது "கருத்துக்களையும்-ஆலோசனைகளையும்" கூறினார்கள்உறுப்பினர்களது கேள்விகளுக்கு மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் மற்றும் மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ M.I.Sc. ஆகியோர் பதிலளித்தார்கள்.

இறுதியாக,மண்டல துணைச் செயலாளர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் "நன்றியுரை" நவின்றார்கள்.

வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!



22-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாரராந்திர சொற்பொழிவு

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 22 -06-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !
  1. வக்ரா பகுதியில்- சகோதரர்.டாக்டர் அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- சகோதரர். அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் –   மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – .முஹம்மத் யூசுஃ ப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர்  அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில்- சகோதரர்.மௌலவி, முகமது அலி MISC  அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,முகமத் தமீம் MISC    அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.அப்துல்கஃபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  12. கர்வா கேம்பில்- மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  13. அல்சாத் கேம்பில் மௌலவி முகமத் தமீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.




21-06-2012 அல் ஃஹோர் கம்யூனிட்டி சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டலம் அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாகத்தில் உள்ள "தாருல் அர்கம்" உள்ளரங்கத்தில் வாரம் விட்டு வாரம் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 21-06-2012 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8.30 மணி வரை,கிளைப் பொறுப்பாளர் சகோதரர்.நெய்னா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக,மண்டல பேச்சாளர் சகோதரர்.சபீர் அஹ்மத் அவர்கள் "எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து,கத்தர் கெஸ்ட் சென்டர் அழைப்பாளர்,சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள் "தவிர்க்க வேண்டிய தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,மண்டல பேச்சாளர் மௌலவி, முஹம்மத் தமீம் ,M.I.Sc., அவர்கள் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சியில், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பல குடும்பத்தார்கள் தங்களது குழந்தைகளுடன், ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!



21-06-2012 கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 21 -06-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா .ஃ பக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் "பாதிக்கப்பட்டவன் நடந்துகொள்ளும் முறை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி.லாயிக் அவர்கள் "உள்ளம் சீர்பட இஸ்லாம் கூறும் சில விதிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "சிறிய வேலை பெரிய கூலி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல இணைச் செயலாளர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு என்ற ஊரைச் சேர்ந்த இரத்தினவேல் என்ற சகோதரர் சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் இணைய விருப்பம் தெரிவித்து இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் அவருக்கு, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ் சமத் மதனீ அவர்கள் சகாதா கலிமாசொல்லிகொடுத்தார்கள். இரத்தினவேல் என்ற தனது பெயரை முகமது அப்ஸல் என்று மாற்றிக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.


திங்கள், 18 ஜூன், 2012

15-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால்,

வழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 15-06-2012 வெள்ளிக்கிழமை மாலை 7:40 மணி முதல் 9:40 மணி வரை, தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகிகளின் வருகைப்பதிவேடு, இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மண்டல பொதுக்குழுவிற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு, ரமளானில் அன்றாடம் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யவேண்டிய உணவு மற்றும் இதர அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆரம்பமாக, துணைச் செயலாளர் சகோதரர்.சாக்ளா அவர்கள் "சோதனை" என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்கள்.

இக்கூட்டத்தில் பத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



15-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 15-06-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்!
  1. வக்ரா பகுதியில் - சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில் - சகோதரர். முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர். அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில் - சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர். காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர். அப்துல்கஃபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  12. கர்வா கேம்பில் - மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  13. டொயோட்டா கேம்பில் - மௌலவி, தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



ஞாயிறு, 17 ஜூன், 2012

14-06-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 14-06-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச் செயலாளர் சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.சபீர் அஹ்மத் அவர்கள் "சிறு இணைவைப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "சும்மா கிடைக்காது சுவர்க்கம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,மண்டல அழைப்பாளர் மௌலவி,முஹம்மத் தமீம் அவர்கள் "சுவர்க்கம்-நரகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.



புதன், 13 ஜூன், 2012

"சோதனைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்"


இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையில் நிறைய பாக்கியங்களை தந்திருக்கிறான். நம்மை சோதிப்பதற்காக சில சோதனைகளையும் தருகிறான்.

யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களை பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் நாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகின்றோமா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான்.

நாம் யாரையும் ஏமாற்றாமல், மோசடி செய்யாமல் வாழ வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்படும் போது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அல்லாஹ் நம்முடைய இறைநம்பிக்கையை சோதிப்பான். இது போன்ற நேரங்களில் நாம் தடுமாறி விடக் கூடாது. அப்போதுதான் நாம் இறைவனின் பாக்கியத்தை பெற்று மறுமையில் வெற்றி பெறலாம்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள் உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.
அல்குர்ஆன் 2:155, 156, 157

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
அல்குர்ஆன் 2:286

ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 2323
  

சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவை


அல்லாஹ் தன் திருமறையில் பல நபிமார்களின் வரலாறுகளைக் கூறுகிறான். அதில் நபிமார்களுக்கு ஏற்பட்ட கடுமையான சோதனைகளை அறியலாம்.. எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையை வைத்திருந்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றினார்கள்.

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمْ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. "அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) அல்குர்ஆன் 2:214
  

செல்வமும் குழந்தைகளும் சோதனையே

إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَاللَّهُ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது.
அல்குர்ஆன் 64:15

இந்த உலகத்தில் மனிதன் மிகவும் விரும்பக் கூடியதாக செல்வமும், குழந்தைகளும் இருக்கின்றன. அல்லாஹ் இவ்விரண்டையும் மனிதனுக்கு சோதனை என்று அறிவிக்கின்றான். அல்லாஹ் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்துள்ளான் என்றால் அதைக்கொண்டு அவரை சோதிப்பதற்காகத் தான்.

فَإِذَا مَسَّ الْإِنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான். பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால், அவன் "இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!" என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
அல்குர்ஆன் 39:49


اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ
அல்லாஹ் தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான் (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான். எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிடும் போது மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.
அல்குர்ஆன் 13:26

இறை வழியில் அதிக நாட்டம் கொண்ட மக்களாக இருப்பினும் அவன் நாடினால் வியாபாரத்திலும் தன் செல்வங்களிலும் சற்று சரிவை ஏற்படுத்தி அல்லாஹ் சோதனையைத் தருவான். நல்லடியார்கள் இதை அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் மேல் மனப்பூர்வமான நம்பிக்கைக் கொண்டு அவனிடமே உதவியையும் நாடவேண்டும்.

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ. أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் ஆக்குகிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன்.
அல்குர்ஆன் 42:49-50

ஆகவே இறைவன் நமக்கு கொடுத்த குழந்தைச் செல்வங்களின் மகத்துவத்தை எண்ணி சந்தோசப்படவேண்டும். அவ்வாறல்லாமல், அதனை பாரமாகவோ அல்லது பெண்குழந்தைகள் கிடைத்ததை துக்கமாகவோ கருதக்கூடாது.

மரணத்தைக் கொண்டு சோதனை


அல்லாஹ் கூறுகின்றான்: இறை நம்பிக்கையுள்ள என் அடியான் அவனுக்குப் பிரியமான ஒருவரது உயிரை நான் கைப்பற்றி விடும் போதுஇ நன்மை நாடிப் பொறுமை காப்பாரானால் சொர்க்கமே நான் அவருக்கு வழங்கும் பிரதிபலனாக இருக்கும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6424 அஹ்மத் 9024


குழந்தைகள் பிறந்து மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர்களிடத்திலிருந்து குழந்தைகளை இறக்கச் செய்து சோதிக்கின்றான். சிலருக்கு குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டு தாயின் உயிரை எடுத்துக்கொள்கிறான். இதன்மூலம் குழந்தைகளை அனாதையாக விட்டுவிடுகிறானா அல்லது மனைவி இழந்த துக்கத்தில் தன் நேரான வாழ்க்கையை மாற்றிக்கொண்டுவிடுகிறானா அல்லது குழந்தைகளை கவனிப்பாரற்று விட்டுவிடுகிறானா என்று கணவனை சோதிக்கின்றான்.

சிலர் தான் விரும்பக்கூடிய ஒருவரின் உயிரை அல்லாஹ் கைப்பற்றிவிட்டால் அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தில் அல்லாஹ்வையே மறந்துவிடுகிறனர். இதிலும் சில பெண்கள் ஓலமிட்டு அழுவதும் அல்லாஹ்வுடன் தர்க்கம் செய்வது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நிகழ்வுகளை காணமுடிகிறது. ஆனால் இவர்கள், அல்லாஹ் இதன் மூலம் தங்களை சோதிக்கின்றான் என விளங்கிவிட்டால் இத்தவறுகளிலிருந்தும் நாம் நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.

قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلْ الْمُؤْمِنُونَ
"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
அல்குர்ஆன் 9:51

நோயைக் கொண்டு சோதனை


பிளேக் நோய் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் தான் நாடியவர்களைத் தண்டிப்பதற்காக அல்லாஹ் அனுப்பும் வேதனை தான் அது என்று கூறிவிட்டு மூமின்களுக்கு (இறை நம்பிக்கையாளருக்கு) அல்லாஹ் அதை அருளாக ஆக்கியுள்ளான். ஒருவர் வசிக்கும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டு,அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் நமக்கு ஏற்படாது என்று சகித்துக் கொண்டும் நன்மையை எதிர் பார்த்தும் தங்கி விட்டால் அவருக்கு ஷஹீத் - உயிர்த் தியாகி - உடைய கூலி கிடைக்காமல் இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 3474

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்' என்று கூறினார்கள். நான், '(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?' என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஆம்' என்று கூறிவிட்டுப் பிறகு, 'ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: புகாரி 5660

நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான் என் அடியானின் இரு கண்களை (போக்கிவிடுவது) கொண்டுஅவனை நான் சோதித்து அவன் அதன் மீது பொறுமை கொள்வானேயானால் அவ்விரு கண்களுக்குப் பகரமாகநான் அவனுக்குச் சுவர்க்கத்தை வழங்குவேன்
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி5653

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : முஸ்லிம் 5030

அல்லாஹ் இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் செல்வங்கள், மனைவி, குழந்தைகள், ஆரோக்கியம், கல்வி, அதிகாரம், பதவி மற்றும் பொறுப்புக்கள், நோய், உடல் குறைபாடுகள், மற்றும் மரணம் எல்லாம் சோதனைகளே தவிர வேறில்லை. எனினும் அவன் நல்லடியார்களுக்கும் இதைக்கொண்டு அதிகமாக சோதிப்பான். அவ்வாறு சோதனைகள் வந்து சேரும் போது பொறுமையைக் கடைபிடித்து, அவன் விதித்த விதியின் மீது அதிருப்தியடையாமல் அவன் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் அனைவரும் அவன் பக்கமே மீள்பவர்களாக இருக்கிறோம். இறைவனின் பாக்கியத்தைப் பெற்று வெற்றி பெற்றவர்களாக மறுமையில் நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக.


ஞாயிறு, 10 ஜூன், 2012

08-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால்,

வழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 08-06-2012 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகம், மர்கஸ் பராமரிப்பு, ரமதான் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு, மண்டல பொதுக்குழு கூட்டுதல், ரமதான் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கூட்டுதல், மாநில செயற்குழுவிற்கு கருத்துக்கள் தெரிவித்தல், கத்தர் அரசு இஸ்லாமியத் துறையின் புதிய நிபந்தனைகள் மற்றும் இதர அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்பது நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.