ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

27-04-2012 கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால்,

மாதந்தோறும் நடைபெறும், கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம்மண்டல மர்கசில் [QITC] 27-04-2012 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மே மாத வியாழக்கிழமைகள் பயான் பட்டியல்மே மாத வெள்ளிக்கிழமைகள் பயான் பட்டியல் மற்றும் அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மண்டல த'அவா குழு ஒருங்கிணைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பதினைந்து பேர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.



27-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் "பெண்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹுவின் அருளால், 

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  (QITC)  சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி",  மண்டல [QITC] மர்கசில் 27-04-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை  நடைபெற்றது.

ஆரம்பமாக, சகோதரி. கதீஜத்துல் நூரியா அவர்கள் "அல்லாஹுவின் மீதே பூரண நம்பிக்கை வைப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, சகோதரி. அஷ்ரஃப்  நிஷா அவர்கள்  "இஸ்லாத்தில் திருமணம்" என்ற தொடர் தலைப்பில் "குடும்பத்தில் பெண்களுக்குரிய பொறுப்புகள்" பற்றி உரையாற்றினார்கள்.

சகோதரி. வஜியத் நிஷா அவர்கள்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட  சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.


27-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 27-04-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:25 மணி முதல் 7:00 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" ஒன்பதாவது  வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "வாக்கிய அமைப்புகள்" குறித்து  கேள்வி-பதில் முறையில் விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,மர்கஸில் ,இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.


27-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 27-04-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

1. வக்ரா பகுதியில் மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
2. நஜ்மா பகுதியில்- மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள். 
3. அல் அத்தியா பகுதியில் மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
4. முஐதர் பகுதியில் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் சகோதரர். காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் - மௌலவி, ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில்- மௌலவி, ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். 
9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
10. அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
11. சலாத்தா ஜதீத் பகுதியில் - டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
12. கர்வா கேம்பில் - மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
13. டொயோட்டா கேம்பில் - மௌலவி, ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
14. அல் ஃஹோர் பகுதியில் மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



26-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு



அல்லாஹ்வின் பேரருளால், 

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 26-04-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல் குர்'ஆனில் தடுக்கப்பட்டவைகள்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, தமீம் அவர்கள் "உணவின் ஒழுங்குகள்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக QITC அழைப்பாளர் மௌலவி, அன்ஸார் அவர்கள் "அங்கீகரிக்கப்படாத பிரார்த்தனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

"திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?"

இறைவனின் திருப்பெயரால்...

''என்னிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தாலும் அதை பிறருக்கு எத்தி வைத்து விடுங்கள்'“ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 3461)


திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?

அல்லாஹ்வின் சட்டங்களையும் அவனது தூதர் காட்டித் தந்த வழிமுறைகளையும் முழுமையாக ஏற்று, பின்பற்றி நடப்பவரே உண்மையான தவ்ஹீத்வாதி. ஆனால் இன்று தவ்ஹீத்வாதி என்று சொல்பவர்கள் எல்லா விஷயங்களிலும் நபிவழியைப் பின்பற்றினாலும் திருணம் என்று வந்து விட்டால், நபிவழி எந்த ஊருக்கு விடுமுறையில் போய் விடுகிறது என்று நமக்குத் தெரிவதில்லை.

பெண் பார்த்தல்

தன்னை தவ்ஹீத்வாதி என்று கூறிக் கொள்ளும் அரைகுறைகள், அல்லாஹ்வும் அவன் தூதரும் சொன்னபடி பெண் பார்க்கிறார்களா?

மார்க்கம் தெரிந்த பெண்ணையோ அல்லது மார்க்கம் படித்து அதன்படி செயல்படும் பெண்ணையோ திருமணம் முடிக்காமல் சிவந்த பெண்ணா? பணம் நிறைந்த பெண்ணா? என்று மட்டும் பார்த்து நிச்சயம் செய்கிறார்கள்.

அழகுள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்படலாம். ஆனால் அழகு மட்டுமே வேண்டும் என்று நிற்கலாமா? இப்படி சிவப்பு நிற பெண்களே வேண்டும் என்றிருந்தால் கறுப்பு நிறப் பெண்களை எந்த கிரகத்து ஆண்கள் மண முடிப்பார்கள்?

அழகு மட்டுமே வேண்டும் என்றால் மார்க்கம் வேண்டாமா? தீனைப் பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? ஒழுக்கம் இருக்க வேண்டாமா? இதையெல்லாம் மார்க்கம் வலியுறுத்தவில்லையா? அல்லது நபிமொழி நூல்களில் இந்த விவரங்கள் இடம் பெறவில்லையா?

அழகுக்காக இணை வைக்கும் பெண்ணை தேர்வுசெய்தல்

பெண்ணைத் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியது, முதலில் அந்தப் பெண் ஓரிறைக் கொள்கையில் பிடிப்புள்ளவளாக இணை வைப்புச் செயலிருந்து விலகியவளாக இருக்க வேண்டும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221)

இணை வைக்கும் பெண்கள் எவ்வளவு அழகுள்ளவளாக இருந்தாலும், அறிவுள்ளவளாக இருந்தாலும், அந்தப் பெண்ணை கண்டிப்பாகத் திருமணம் முடிக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் தெளிவான கட்டளையிடுகிறது.

ஆனால் பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக இணை வைக்கும் பெண்களை திருமணம் புரிந்ததாகக் கூறும் இந்த அரைகுறை தவ்ஹீத்வாதிகள், பெற்றோர்கள் சொல்லும் எல்லா விஷயத்திலும் பின்பற்றி நடக்கிறார்களா? தர்ஹாவிற்குப் போக வேண்டும் என்று சொன்னாலும் சென்று விடுவார்களா? அதற்கும் பெற்றோர்களைக் காரணம் காட்டுவார்களா?

ஆடத் தெரியாமல் ஆடிவிட்டு, தெருக் கோணல் என்று சொல்வார்களே அதைப் போன்று கொள்கையில் உறுதியில்லாமல் பெற்றோர்கள் மீது பழியை போடுகிறார்கள்.

ஒரு பேச்சுக்கு இவ்வாறு பெற்றோர்கள் கட்டளையிட்டாலும் நாம் அதை ஏற்று நடக்க வேண்டும் என்றா திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது?

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன். (அல்குர்ஆன் 29:8)

''அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்'' (புகாரி 7257)

இதுபோன்ற நபிமொழிகள் அரைகுறை தவ்ஹீத்வாதிகளின் காதுகளில் விழுவதில்லையே! ஏன்?

மார்க்கமுள்ள பெண்ணைத் தேர்வு செய்!

ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருக்கும் பெண்ணாகவும் நபிமொழியை அறிந்தவளாகவும் தொழுகையைப் பேணுபவளாகவும் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் முன்னுரிமை வழங்குபவளாகவும் உள்ள பெண்ணைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு முதலிடம் கொடுத்து தவ்ஹீத்வாதிகள் பெண்ணைத் தேர்வு செய்துள்ளார்களா?

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (5090)

நபிகளார் எதற்கு முதலிடம் கொடுக்கச் சொன்னார்களோ, அதற்கு முதலிடம் கொடுக்காமல் மற்ற மூன்று விஷயங்களுக்கு அரைகுறை தவ்ஹீத்வாதிகள் முதலிடம் கொடுக்கிறார்கள்.

உண்மையில் இந்த நபிமொழியைப் பின்பற்றியிருந்தால் தவ்ஹீத் கொள்கையில் பிடிப்புள்ள எத்தனையோ ஏழைப் பெண்களுக்குத் திருமணம் நடந்திருக்கும். ஆனால் அழகுக்கும் பணத்திற்கும் முதலிடம் கொடுப்பதால் கொள்கைப் பிடிப்புள்ள ஏழைப் பெண்கள் இன்று திருமணமாகாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இணை வைக்கும் பெண்களைத் திருத்தி விடலாமா?

அழகுக்காகவும் பணத்திற்காகவும் இணைவைக்கும் பெண்களைத் திருமணம் செய்யும் அரைகுறை தவ்ஹீத்வாதிகளிடம், ஏன் இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்கிறீர்கள்? என்று கேட்டால் அதற்கு இன்னொரு காரணத்தைக் கூறுகிறார்கள். அந்த பெண்களை திருமணத்திற்குப் பிறகு திருத்தி விடலாமாம்.

திருத்திவிடலாம் என்றிருந்தால் இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்யாதே என்று ஏன் அல்லாஹ் கூற வேண்டும்? திருத்த முடியும் என்றால், 'இணைவைக்கும் பெண்களைத் திருமணம் செய்பவர்கள் அவர்களைத் திருத்தட்டும்' என்று கூறியிருக்கலாமே? அல்லாஹ்விற்குத் தெரியாதது இந்த அரைகுறை தவ்ஹீத்வாதிகளுக்குத் தெரிந்துவிட்டதா?

திருத்தி விடுவோம் என்று கூறுகிறார்களே! திருந்தி விடுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது இவர்களிடத்தில்?

நூஹ் நபி, லூத் நபி ஆகியோர் தங்கள் மனைவியிடத்தில் செய்யாத அறிவுரையா? அவர்கள் என்ன திருந்தி விட்டார்களா? இவர்களைப் போன்று உங்கள் மனைவி இருந்து விட்டால் என்ன செய்வீர்கள்? தங்களையும் சேர்த்துத் திருத்தும் வண்ணம் உள்ள கொள்கை பிடிப்புள்ள பெண்ணையல்லவா தவ்ஹீத்வாதிகள் தேர்வு செய்திருக்க வேண்டும்?

(இஸ்லாத்தை ஏற்காதவராக இருந்த போது) அபூதல்ஹா (ரலி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை (மிகவும் விரும்பி) பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், ''அபூதல்ஹா அவர்களே! உங்களைப் போன்றவர்கள் (பெண் கேட்டால்) மறுக்கப்படாது. (அவ்வளவு சிறந்வர்கள் நீங்கள்) ஆனால் நீங்கள் ஓரிறைக் கொள்கையை மறுப்பவராக இருக்கிறீர்கள். நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். உங்களைத் திருமணம் செய்வது எனக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அதுவே எனது மஹராகும். இதைத் தவிர வேறெதையும் நான் கேட்க மாட்டேன்'' என்று கூறினார்கள். அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். அதுவே அவர்களுடைய மஹராக ஆனது. (நூல்: நஸயீ 3289)

ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பு கொடுத்து ஒரு சிறந்த நபித்தோழரை இஸ்லாத்திற்குக் கொண்டு வந்த உம்மு ஸுலைம் போன்ற பெண்ணைத் தேர்வு செய்ய ஏன் தவ்ஹீத்வாதிகளுக்கு மனம் வருவதில்லை?

நிறத்தால், பணத்தால் புறக்கணிக்கப்படும் பெண்களை மார்க்கத்தை மட்டும் பார்த்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட தவ்ஹீத்வாதிகள் முன்வருவார்களா?

அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமான தோற்றத்துடன் இருப்பார்கள்.

"(இது பற்றிய) எனது வசனங்கள் உங்களுக்குக் கூறப்படவில்லையா? அதை நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டு இருக்கவில்லையா?" என்று கூறப்படும்
.
"எங்கள் இறைவா! எங்கள் துர்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. நாங்கள் வழி தவறிய கூட்டமாக இருந்தோம்" என்று கூறுவார்கள்.

"எங்கள் இறைவா! இங்கிருந்து எங்களை வெளியேற்றி விடு! நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பினால் நாங்கள் அநீதி இழைத்தவர்கள்" என்றும் கூறுவார்கள்.

"இங்கேயே சிறுமையடையுங்கள்! என்னிடம் பேசாதீர்கள்!" என்று அவன் கூறுவான்." (23:104-108)

27-04-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - அழைப்பு


بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.


மாதாந்திர பெண்கள்
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
அழைப்பிதழ்


நாள் : 27/04/2012 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !

QITC
மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்.

அதேபோல் இன்ஷா அல்லாஹ், வரும் வாரம் 27-04-2012 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கூடுதல் தகவலுக்கு:
சகோ. முஹம்மத் இல்யாஸ், +974 – 5518 7260
(பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

20-04-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால்,

வழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 20-04-2012 வெள்ளிக்கிழமை மாலை 8:30 மணி முதல் 10:10 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகம்,மர்கஸ் பராமரிப்பு மற்றும் அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்பது நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.




20-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 20-04-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை , வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" எட்டாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "எழுவாய்-பயனிலை" குறித்து "இரண்டில் எது சரி?" என்ற கேள்வி-பதில் முறையில் விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர - சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,மர்கஸில், இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.




20-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 20-04-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

1. வக்ரா பகுதியில் – மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
2. நஜ்மா பகுதியில் - மௌலவி,முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
4. முஐதர் பகுதியில் – சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர். காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். முஹம்மத் யூசுஃப்  அவர்கள் உரையாற்றினார்கள்.
10 . அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
11. சலாத்தா ஜதீத் பகுதியில் - டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
12. கர்வா கேம்பில் - மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
13. டொயோட்டா கேம்பில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.




19-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் பேரருளால்,


கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 19-04-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச்செயலாளர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் "மறுமைக்காக பொறுமை கொள்வோம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.


அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, அன்ஸார் அவர்கள் "நகரும் செய்தியின் நம்பகத்தன்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


தொடர்ந்து, நேபாள நாட்டை சார்ந்த 'ராஜ் குமார்' என்ற சகோதரர்க்கு "இஸ்லாம் பற்றிய அறிமுகம்", துணைச்செயலாளர் சகோதரர், அப்துர்ரஹ்மான் அவர்களால் எத்தி வைக்கப்பட்டது.


பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.



இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர - சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

13-04-2012 கத்தரில் "சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹ்வின் பேரருளால்,


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின், கத்தர் மண்டலம் "மாபெரும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி" யை 13-04-2012 வெள்ளியன்று மாலை 6:30 மணி முதல் 10:00 மணி வரை ,கத்தர் அரசு இஸ்லாமிய அழைப்புத் துறை அலுவலக [ஃபனார்] உள்ளரங்கத்தில், ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்குமண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

துவக்கமாக மண்டல தலைவர், டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் 'வரவேற்புரை' நல்கிவிட்டு, "நல்லறங்களில் பால் விரையுங்கள்!" என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, அன்ஸார் மஜீதி அவர்கள் "மன அமைதி தரும் வணக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதற்கடுத்து,QITC அழைப்பாளர் மௌலவிதமீம்M.I.Sc., அவர்கள் "அல்குர்'ஆனும் - உலக அதிசயங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக்கொடுப்போர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் 'கத்தர் மண்டல ஜமாஅத்தின் செயல்பாடுகளை' விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.


அடுத்து, 'அரபி ஆரம்ப நிலை வகுப்பு' தேர்விலும், 'இஸ்லாமிய அறிவுப்' போட்டியிலும் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் எடுத்த அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவாக,கத்தர் மண்டல துணைத் தலைவர், சகோதரர். ஜியாவுதீன் அவர்கள் 'நன்றியுரை' ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.