புதன், 28 மார்ச், 2012

30-03-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - அழைப்பு


بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

மாதாந்திர பெண்கள்
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி –
அழைப்பிதழ்


நாள் : 30/03/2012 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !

QITC -
மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்.

அதேபோல் இன்ஷா அல்லாஹ், வரும் வாரம் 30-03-2012 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

கூடுதல் தகவலுக்கு:
சகோ. முஹம்மத் இல்யாஸ், +974 – 5518 7260
(பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் )

செவ்வாய், 27 மார்ச், 2012

"உம்ரா" வழிகாட்டி


உம்ரா பற்றிய நபி வழி சட்டங்களும், குறிப்பிட்ட இடங்களில் ஓத வேண்டிய துஆக்களும் அடங்கிய "உம்ரா கையேடு".










நன்றி: துபை TNTJ

திங்கள், 26 மார்ச், 2012

23-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 23-03-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:15 மணி முதல் 7:15 மணி வரை , வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" ஐந்தாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "பெயர்ச்சொற்களின் பல்வேறு வடிவங்களைக்" குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,மர்கஸில் ,இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.

ஞாயிறு, 25 மார்ச், 2012

23-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 23-03-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! 

1.   வக்ரா பகுதியில் சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
2.   நஜ்மா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
3.   அல் அத்தியா பகுதியில் மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்..
4.   முஐதர் பகுதியில் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
5.   கரத்திய்யாத் பகுதியில் சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6.   லக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
7.   கராஃபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
8.   மதினா கலிபா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
9.   பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
10.  அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
11.  சலாத்தா ஜதீத் பகுதியில் - மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
12.  கர்வா கேம்பில் - மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
13.  டொயோட்டா கேம்பில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


சனி, 24 மார்ச், 2012

22-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 22-03-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச்செயலாளர் சகோதரர், அப்துல் பாசித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் "விருந்தோம்பல்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் "நபிகளாரின் இறுதி நாட்கள் தரும் படிப்பினை" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "இறுதிப் பயணம்" என்ற தொடர்தலைப்பில் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து, கத்தர் நாட்டை விட்டு, வேறு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் மண்டல பொருளாளர் சகோதரர் பீர் முஹம்மத் அவர்கள் உறுப்பினர்களுக்கு தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக இருக்குமாறும், தவ்ஹீத் ஜமா'அத்திற்கு தொடர்ச்சியாக உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரவு உணவிற்குப் பின்இலங்கை சகோதரர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் செயலாளர் மௌலவிமுஹம்மத் அலீ அவர்கள் தலைமையில் நடந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.


செவ்வாய், 20 மார்ச், 2012

QITC மர்கஸில் இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனைக்கூட்டம் - அழைப்பிதழ்


بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

QITC மர்கஸில் இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனைக்கூட்டம் - அழைப்பிதழ் 

நாள் : 22 /03 /2012 வரும் வியாழன் இரவு பயான் முடிந்ததும் 
இடம் : QITC மர்கஸ்

அன்பிற்குரிய சகோதரர்களே ! 
கடந்த வாரம் வியாழன் அன்று நடைபெற்ற இலங்கை சகோதரர்களுக்கான தாவா கூட்டத்தில் கீழ்க்கண்ட  விசயங்கள் எடுத்துரைக்கப்பட்டது. 
அதன் விவரம் வருமாறு:
1 . சனய்யா கர்வா கேம்பில் ஒவ்வொரு புதன் கிழமையும் இஷா தொழுகையுடன் பயான் நடைபெறுகிறது.
2 . சனய்யா டொயோடா கேம்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இஷா தொழுகையுடன் பயான் நடைபெறுகிறது  அல்ஹம்து லில்லாஹ் !
கலந்து கொள்ள வாய்ப்புள்ளவர்கள் இந்த பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனடையும் படி கேட்டுக்கொள்கிறோம்.
மற்றும் தாவா வை துரிதப்படுத்துவது சம்மந்தமாக  ஆலோசிக்கப்பட்டது . மற்ற இடங்களில் உள்ள இலங்கை மற்றும் இந்திய மக்களிடம் இந்த தூய ஏகத்துவம் சென்றடைய வேண்டு மென்றால் நம் அனைவருடைய பங்களிப்பும் கண்டிப்பாக அதக அதிகம் இருக்கவேண்டும். மென்மேலும் தாவா வளர வேண்டும் அதனடிப்படையில் வரும் வியாழன் இரவு அன்றும் QITC மர்கஸில் பயான் முடிந்ததும் வழக்கம் போல் நமது ஆலோசைக்கூட்டம் உள்ளது. இதில் அனைத்து இலங்கை சகோதரர்களும் தங்களுக்கு அறிந்த சகோதரர்கலுக்கு தகவலை எடுத்துரைத்து  தங்களுடன் அழைத்து வந்து சிறந்த ஆலோசனைகளை வழங்கு மாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.


ஞாயிறு, 18 மார்ச், 2012

16-03-2012 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால்,

வழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்,  மண்டல மர்கசில் [QITC] 16-03-2012 வெள்ளிக்கிழமை மாலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகம் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 17 மார்ச், 2012

16-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் "அரபி இலக்கணப் பயிற்சியின்" நான்காவது வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில்  [QITC] 16-03-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" நான்காவது வகுப்பு நடைபெற்றது.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "சென்ற  கால வினைச்சொற்களின் பல்வேறு வடிவங்களைக்" குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும்,மர்கஸில்,இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.

16-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 16-03-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

1.  வக்ரா பகுதியில் – சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
2 . நஜ்மா பகுதியில்-  சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள். 
3 .அல் அத்தியா பகுதியில் –   மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்..
4 . முஐதர் பகுதியில் –  சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் –   சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில்-  மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள். 
9. பின் மஹ்மூத் பகுதியில் -  மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
10 . அல் ஃஹீஸா பகுதியில் -   மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
11. சலாத்தா ஜதீத் பகுதியில்-  மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
12. கர்வா கேம்பில்- மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
13. டொயோட்டா கேம்பில் -  மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
14. அல் ஃஹோர்  பகுதியில் - மௌலவி, அப்துஸ்ஸமத்அவர்கள் உரையாற்றினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

15-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15-03-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இணைப்பொதுச்செயலாளர் சகோதரர், வக்ரா ஃபக்ருதீன்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் மௌலவி, ரிழ்வான் அவர்கள் "சமுதாய மறுமலர்ச்சியின் திறவுகோல் - கல்வி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, அன்ஸார் அவர்கள் "ஹூஜூராத் அத்தியாயத்தின் விளக்கவுரை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இறுதியாக, QITC அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் "நபிகளாரின் இறுதி நாட்கள் தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.