Ramadan 2025

சனி, 25 பிப்ரவரி, 2012

கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 23-02-2012

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 23-02-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை QITC துணைப்பொதுச்செயலாளர் சகோதரர். ஃபக்ருத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக  கத்தர் கெஸ்ட் சென்டர்  அழைப்பாளர் சகோதரர். அப்துர்ரஹ்மான் [ஷாஜஹான்] அவர்கள் "திருக்குர்ஆனில் தடுக்கப்பட்டவைகளில் சில" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் "உணர்ச்சியூட்டும் இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவுதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் "அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒன்று காற்று" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், பொதுச்செயலாளர் மௌலவி. முஹம்மத் அலீ M.I.Sc. அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர - சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.