அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்லாஹுவின் பேரருளால்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 24-02-2012 அன்று மாலை 7:00 மணிக்கு நடைபெற்றது.
சகோதரி அஷ்ரஃப் நிஷா அவர்கள் "திருக்குர்ஆன் - அத்தியாயம் 65, 66 & 67" ஆகியவற்றின் சாராம்சத்தை விளக்கினார்கள்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் மார்க்க அறிவுப்போட்டியும் நடைபெற்றது. இந்தப்போட்டிக்கான கேள்விகள் "திருக்குர்ஆன் - அத்தியாயம் 65, 66 & 67" மற்றும் "நபிகளாரின் இறுதி நாட்கள்" புத்தகம் ஆகியவற்றிலிருந்து கேட்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.