திங்கள், 23 ஜனவரி, 2012

QITC சிறப்பு ஆலோசனைக் கூட்டம் - 20/01/2012

அல்லாஹுவின் திருப்பெயரால்... 

அல்லாஹுவின் அருளால், QITC சிறப்பு ஆலோசனைக் கூட்டம் 20/01/2012 வெள்ளி அன்று மாலை 6:00 மணி முதல் 9:30 மணி வரை QITC மர்கசில் நடைபெற்றது. 

QITC அழைப்பாளர் மௌலவீ.முஹம்மத் தமீம் M.I.Sc. அவர்கள் "அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல்" என்ற தலைப்பில் உறுப்பினர்களுக்கு எழுச்சி உரை ஆற்றினார்கள்.

QITC தலைவர், டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்கள்.

QITC பொது செயலாளர் மௌலவீ.முஹம்மது அலீ அவர்கள், நமது மார்கஸ் கட்டிட பராமரிப்பிலுள்ள சிரமத்தையும், அதற்காக தற்போதைய QITC நிர்வாகம், அனுபவமிக்க முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொண்ட பணிகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

இதற்கான மாற்று ஏற்பாடு குறித்து உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு, அவர்களின் கேள்விகளுக்கு தலைவரும், பொது செயலாளரும் பதிலளித்தனர். பின்பு,  குறுகிய கால செயல்திட்டத்திற்கு அனைவரும் ஒப்புதல் அளித்து அதற்கு உதவ உறுதியளித்தார்கள்.

மேலும் இன்ஷாஅல்லாஹ் பிப்ரவரி 14ல் நடைபெறவுள்ள முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் குறித்து விளக்கம் தெரிவிக்கப்பட்டு, அதற்கான நமது பங்களிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இறுதியாக, QITC துணைத்தலைவர், சகோ.ஜியாவுதீன் அவர்கள், 'நன்றியுரை' நவில, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!