அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்லாஹ்வின் பேரருளால்,
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 01-12-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.
துவக்கமாக QITC அழைப்பாளர் மௌலவி. ரிஸ்கான் அவர்கள், "அல்குரானில் அழகிய அறிவுரைகள்" என்ற தொடர் தலைப்பில் தொழுகை குறித்து உரையாற்றினார்கள்.
அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் மஜிதி அவர்கள், "புதுவருடமும், புனித பணிகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதில் முஹர்ரம் பத்தாம் நாள் மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்டதையும், அதனை நினைவுகூறும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஹர்ரம் 9 & 10 -ம் நாட்கள் நோன்பு நோற்க சொன்னதையும் குறிப்பிட்டார்கள்.
மேலும் QITC அழைப்பாளர் மௌலவி. முஹம்மத் தமீம் MISc அவர்கள், "இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல்" என்ற தலைப்பில் குழந்தை வளர்ப்பு குறித்து உரையாற்றினார்கள்.
QITC துணைச்செயலாளர் காதர் மீரான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
இறுதியாக அறிவிப்புகள் செய்யப்பட்டு, அன்றைய பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.