அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்லாஹ்வின் பேரருளால்,
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 15-12-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.
துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர் காதர்மீரான் அவர்கள், "அற்பமான உலகமும் - அழியா மறுமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் மஜிதி அவர்கள், "தாவாவின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC துணைச்செயலாளர் ஷாஜஹான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
இறுதியாக அன்றைய பயானிலிருந்து கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
கேள்வி (1):
மறுமையில் அர்ஷின் நிழல் யாருக்குக் கிடைக்கும்?
பதில் (1):
அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:
- நீதிமிக்க ஆட்சியாளர்.
- இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
- தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன்.
- பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
- இறைவழியில் நட்புகொண்ட இருவர்.
- அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர்.
- தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: புகாரி 6806.
கேள்வி (2):
மரணத்திற்குப்பின் வரும் நிரந்தர நன்மைகள் எவை?
பதில் (2):
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 3084.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.