அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்லாஹுவின் பேரருளால்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 25-11-2011 அன்று மாலை 7:00 மணிக்கு நடைபெற்றது.
சகோதரி. ஹமீதா பானு அவர்கள் "தவிர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "ஆடை அலங்காரங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த பெண்களுக்கான அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.